மிஸ்ட்டர் சன்டே
“ஏங்க இந்த ஆசீர்வாதத் தட்டு இல்லாட்டி ஆசீர்வாதம் கிடைக்காதா? ஆயிரக் கணக்குல லட்சக் கணக்குல ஏலம் கேக்கறவங்களுக்குத் தான் ஆசீர்வாதம்னா, அந்தக் கடவுள் மேல கூட ஊழல் குற்றம் சாட்டலாம் தானே?”
“நீயும் உனக்கு இருக்கற வசதிக்கு ஏத்த மாதிரி ஏலம் எடுக்கிற தானே? ஊழியங்களுக்காக சேல்ஸ்ல, பண்டிகையில எல்லாம் ஸ்நாக்ஸ், பிரியாணி பாக்கட் மாதிரி சாமான்கள் வாங்கிட்டுப் போறே தானே, இது எல்லாமே ஒண்ணு தான்.”
“என்னங்க இப்படி பேசுறீங்க. இது நியாயமா? நீங்களே இப்படி ஊழல்-ல மாட்டிக் கிட்டீங்க போல இருக்குதே?”
“ஆண்டவரே ஆசீர்வாதத் தட்டு குடுத்திருக்கிறார். குடுத்துக்கிட்டு இருக்கிறார். இன்னும் குடுப்பார்.”
“அடப் பாவி... ஆண்டவரையும் இதுல இழுத்துட்டீங்களே? பைபிள்ல ஆசீர்வாதத் தட்டு பத்தி இருக்குதா?”
“அவசரப் படாம, நல்லா கவனி. பைபிள்ல இருக்கற ஆசீர்வாதத் தட்டு பத்தி அப்புறமா சொல்றேன். ஆராதனை முடியும் போது ஆசீர்வாதம் சொல்றாங்க இல்லியா? அது என்ன சொல்லு பாக்கலாம்.”
“நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினுடைய கிருபையும், பிதாவாகிய தேவனுடைய அன்பும், பரிசுத்த ஆவியினுடைய ஐக்கியமும் நம் அனைவரோடும் இருப்பதாக.”
“முதல்ல, இந்த ஆசீர்வாதம் ஏலம் எடுத்தவங்க, எடுக்காதவங்க, அதிக பணம் குடுத்து ஆசீர்வாதத்தட்டு ஏலம் எடுத்தவங்க, கொஞ்சம் பணம் குடுத்து பிரியாணி பாக்கட் வாங்குனவங்க. எதுவுமே வாங்காம சும்மா வந்துட்டுப் போறவங்க எல்லாருக்கும் உண்டு. அதாவது நம் அனைவரோடும் இருப்பதாக....”
“நாம் பேசற டாப்பிக் ஆசீர்வாதத் தட்டு. நீங்க ட்ராக் மாறுறீங்க.”
“அவசரப்படாதே. இந்த ஆசீர்வாதத் தட்டுல மூணு வகையான ஆசீர்வாதங்கள் இருக்குது. பிதாவுடைய அன்பு, இயேசுவுடைய கிருபை, ஆவியானவரின் ஐக்கியம் அல்லது உறவு.”
“சும்மா பிரசங்கம் பண்ணி அறுக்காதீங்க.”
“நல்லாக் கவனி, தகப்பன் தான் நேசிக்கிற பிள்ளையை சிட்சிக்கிறது மாதிரி பிதாவும் தான் நேசிக்கிற பிள்ளைகளை சிட்சிக்கிறார். இயேசு தன்னோட கிருபை போதும்னு சொல்றார். பரிசுத்த ஆவியானவர் பாவத்தைக் குறித்து கண்டித்து உணர்த்துகிறார். இது தான் இந்த ஆசீர்வாதத் தட்டு.”
“இதுல என்னங்க ஆசீர்வாதம் இருக்குது. எல்லாமே சாபம் மாதிரி இருக்குது.”
“இதுல ஆசீர்வாதத் தட்டு இருக்குது. அதாவது பின்னந்தலையில ஒரு தட்டு தட்டுறாரு ஆண்டவர்.”
“ஓ.... நீங்க அந்த தட்டு பத்தி சொல்றீங்களா? அதான... நீங்க ஒரு மாதிரியா முதல்ல இருந்தே பேசிட்டு இருந்தீங்களேன்னு பாத்தேன்.”
“நீ யோசிக்கிற மாதிரியே நான் பேசிட்டா உனக்கு உற்சாகம் தான்.”
”சரி வேதத்துல எங்க ஆசீர்வாதத்தட்டு பத்தி இருக்குது?”
“இயேசு கிறிஸ்து ஒரே ஒரு இடத்துல, பண்டிகை காலத்துல கோயில்-ல ஆசீர்வாதமாத் தட்டுனாருன்னு பைபிள்-ல இருக்குது. தேடிப்பிடிச்சு வாசிச்சுக்கோ.”
“நீங்க சொல்றது சரிதாங்க. சிட்சை, போதும்-ங்கற மனசு, பாவத்தைக் கண்டிச்சு உணர்த்துறது எல்லாமே, இப்போ ஆசீர்வாதம் மாதிரி தெரியாது. அப்புறமா மாட்டிக்கிட்டு முழிக்கிறப்போ, வர்றவங்க போறவங்கல்லாம் தட்டிட்டுப் போறப்போ தான் புரியும்.”
“இப்போ சொல்லு, கடவுள் ஊழல் செய்றாரா?”
“ஐயையோ, அவர் தான் உண்மையான ஆசீர்வாதத்தட்டு குடுக்கறவரு. அந்த தட்டுல திருநெல்வேலி அல்வா கூட இருக்கும் போல இருக்குதே?”

1 comment:
j
Post a Comment