"எல்லாரையும் ஒழுங்கா சர்ச்-ல தூங்காம, சைட் அடிக்காம, மூக்கு நோண்டாம, இருக்க வைக்கறதுக்கு ஒரு வழி இருக்குது."
"நம்ம கர்த்தர் தான் கிருபை உள்ள இளிச்ச வாயர்னு நினைச்சுட்டு இருக்காங்களே மக்கள். எப்படி இது நடக்கும்?"
”அது தான் சும்மா கண்காணிப்பு கேமராக்கள சர்ச்-ல ஆங்காங்கே பொருத்திட்டு, இங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தி இருக்குதுன்னு சும்மாவாச்சும் ஒரு போர்ட் எழுதி போட்டுட்டா சரியாயிடும்.”
“அது சரி தான். பூமி எல்லாம் கர்த்தரோட கண் உலாவிட்டு இருக்குதுன்னு சொன்னா அதப் பத்தி கவலப்படாத மக்கள், கண்காணிப்பு கேமரா இருக்குதுன்னு சொன்னா கண்டிப்பா கவனமா இருப்பாங்க.”
“தங்களுக்கு வெட்கம் வர்றமாதிரி மக்கள் நடந்துக்க மாட்டாங்க. சில பேர் மேக்கப் கூட அப்பப்போ போட்டுக்குவாங்க.”
“ஆமா இப்ப எல்லாம் ஆராதனைகள் லைவ்-ஆ வெப்சைட்டுல வருதாம்.”
“கடவுளப் பத்தின பயமே யாருக்கும் இல்லாமப் போயிருச்சு. அதனால தான் கர்த்தரோட கண்களுக்கு பயப்படுறத விட கண்காணிப்பு கேமராவுக்கு பயப்படுறாங்க.”
“கடவுள் மேல பயமும் மரியாதையும் இருந்தா ரெண்டு விஷயங்கள் உருப்படியா நடக்கும். அந்த ரெண்டு விஷயங்களுமே நம்ம திருச்சபையும் சமுதாயமும் பரிசுத்தமா, ஆசீர்வாதமா வாழறதுக்குப் போதுமானதா இருக்கும்.”
“அது என்ன ரெண்டு விஷயங்கள்? வேதம் வாசிக்கறதும், ஜெபம் பண்றதுமா?”
“இல்ல, ஆண்டவருக்கும் சபைக்கும் முன்னால் மக்கள் செய்யற ரெண்டு வாக்குறுதிகளை நிறைவேற்றினாப் போதும்.”
“நல்லாப் புரியுது. ஒண்ணு, வாழ்விலும் தாழ்விலும்....”
“விவாகரத்து நம்மைப் பிரிக்கும் வரை...”
“ச்சீ... மரணம் நம்மைப் பிரிக்கும் வரை ஒண்ணா இருப்போம்-னு செய்யற வாக்கு.”
“பரவாயில்லியே நல்லாத்தான் யோசிக்கிற நீ. அடுத்ததையும் சொல்லு பாக்கலாம்.”
“அது தான், இந்தப் பிள்ளையைக் கர்த்தருக்குப் பயப்படும் பயத்துல வளர்ப்பேன் அப்படின்னு ஞானஸ்நானம் குடுக்கறப்போ, குழந்தைகளப் பத்தி பெத்தவங்களும், ஞானப் பெற்றோர்களும் குடுக்கற வாக்குதான் அடுத்தது.”
“இதுல சம்பந்தப்பட்ட குடும்பத்துல உள்ளவங்க மட்டும் இல்ல, சபை முழுசுக்குமே பொறுப்பு இருக்குது.”
”தாயும் பிள்ளையும் ஒண்ணா இருந்தாலும் வாயும் வயிறும் வேற தான? குடும்பத்துக்குத் தானே பொறுப்பு இருக்குது. சபை எப்படி பொறுப்பாக முடியும்?”
“சபை முழுசும் ஆமென் போடுறோம். இதைக் கர்த்தர் கேட்டார், நாங்களும் கேட்டோம்னு சாட்சியா பாதிரியார் சொல்றதக் கேட்டும் கூட நமக்கு எந்த அக்கறையும் இல்லாம இருக்குது.”
“அது எப்படிங்க. உன்னோட வேலையப் பாத்துக்கிட்டுப் போன்னு தான சொல்றாங்க? அடுத்தவங்க உரிமையில தலையிடுறோம்னு சொல்லி ஜெயில்ல தள்ளினாலும் தள்ளிருவாங்க போல இருக்குதே?”
“அக்கறையோட ஜெபம் செய்தாலே போதும். நம்ம குடும்பத்துலயும் சபையிலயும் நடந்த, நடக்கற கல்யாணங்கள், ஞானஸ்நானங்களுக்காக உண்மையா அக்கறையா ஜெபம் செய்தாலே போதும்.”
“ஆமா ஆமா. கர்த்தர் பாத்துக்கிட்டு இருக்கிறார்னு நினைக்கிறவங்க, கண்டிப்பா ஜெபத்தக் கேப்பாருன்னு நம்பவும் செய்வாங்க.”
“இப்படி கர்த்தர நம்பாம, அவருக்குக் குடுத்த வாக்குகள மதிக்காம இருக்கறவங்கள என்ன பண்றது?”
“நாம ஒண்ணும் பண்ண முடியாது. கோர்ட்டுல கூட நீதிமன்ற அவமதிப்புன்னு ஒரு குற்றம் இருக்குது. நம்ம கர்த்தர் தான் கிருபை, நியாயத்தீர்ப்பு இரண்டுக்கும் நடுவுல ஒரு நல்ல தீர்ப்பா குடுக்கணும்.”

1 comment:
that is a powerful thought
Post a Comment