“நானும் காணிக்கையக் கூட்டிப் பாத்துட்டேன். உலகப்பிரகாரமாவும் ஆசீர்வாதம் வந்த மாதிரி தெரியல, ஆத்துமாவிலயும் எந்த வித்தியாசமும் தெரியல.”
“நீ செடியப் புடுங்கி வளருதான்னு தினசரி பாக்கற ஆள் மாதிரி தெரியுதே?”
“என்னங்க, ஆத்துல போட்டாலும் அளந்து போடுன்னு, சொல்றாங்க. பைபிள்லயே கூட தண்ணீர்களின் மேல சாப்பாட்டப் போடு, அநேக நாளுக்குப் பிறகு அதன் பலனைக் காண்பாய்னு வசனம் இருக்குது. கர்த்தரே தாலந்தக் குடுத்துட்டு, பலன எதிர்பார்க்கறதா உவமை கூட சொல்லியிருக்காரு.”
“ஆன்மீக விஷயத்துக்கு பணத்தால மதிப்பு போட்டு கணக்கு பண்ண முடியுமா?”
“?”
“அஞ்சு ரூபாய்க்கு அன்பு கிடைக்குமா? பக்திக்கு பணத்தால மதிப்பு போட முடியுமா?”
“சரியான லூசு கூட இதச் செய்ய மாட்டான்.”
“ஆமா, நீ சரியான லூசு கூட இல்லங்கறத ஒத்துக்கிறே.”
“காரணமே இல்லாம எதையும் செய்யறவன் தான் லூசு.”
“கர்த்தர் எனக்கு உயிரக் குடுத்திருக்காரு, உழைக்கறதுக்கு பலமும், அறிவும் தந்திருக்காரு. எல்லாத்துக்கும் மேலா வாய்ப்பு கிடைச்சிருக்குதுன்னு நீ நன்றி உணர்வோட, உங்க கிட்ட இருந்து கிடைச்சதுல, ஒரு சின்ன பகுதிய உங்களுக்குக் குடுக்கறேன்னு சொல்லணும்.”
“அது தான் பெரிய பகுதியையே குடுக்கிறேனே?”
“நம்மால பெரிசுன்னு சொல்ற அளவுக்கு எதுவுமே குடுக்க முடியாது. மனசார சொந்த மகனக் குடுக்கற அளவுக்கு யாருக்கு மனசு வரும்.”
“மனசாரக் காணிக்கை குடுக்காட்டின்னா, நமக்கு தண்டனை வரும்னு சொல்றீங்களா?”
“தண்டனைக்கு பயந்தோ, ஆசீர்வாதத்துக்கு ஆசப்பட்டோ குடுத்தா அத எப்படி ’மனசார’க் குடுத்ததுன்னு சொல்ல முடியும்?”
“சரிங்க மனசாரக் குடுக்கறதுன்னா என்ன?”
"திருச்சபை உனக்கு என்ன செய்தது என்று கேட்காதே. நீ அதற்கு என்ன செய்தாய் என்று கேட்டுப் பார். பலன் என்ன கிடைக்கும்னு எதிர்பாக்காமக் குடு. குடுக்கறதே ஒரு பலன் தான்னு புரிஞ்சுக்குவ."
"நான் ஏன் பிறந்தேன் அப்படின்னு வாத்தியார் பாடுன பாட்டுல், நாடென்ன செய்தது உனக்கு... அப்படின்னு பாடுவாரு, அதத் தான நீங்க காப்பி பேஸ்ட் பண்ணியிருக்கீங்க?"
“அது ஒரிஜினலா, அமெரிக்க அதிபர் கென்னடி சொன்னது.”
“ஓ.... அப்போ அது தான் காப்பி பேஸ்ட்டா...?”
“கேள்விக்கு பதிலச் சொல்லு.”
“திருச்சபைக்கு காணிக்கை, ஓட்டு, கொஞ்சம் குறட்டை இதையெல்லாம் போடறேனே இது போதாதா? பெரியவங்க, முழு நேர ஊழியக்காரங்க, கமிட்டிக் காரங்க தான எதையாவது திருச்சபைக்கு செய்யணும்?”
“திருச்சபைங்கறது, சபை மக்கள் எல்லாரும் சேர்ந்தது தான். சபைல இருக்கற ஒருத்தருக்கு நீ எதச் செய்தாலும் அது திருச்சபைக்கு செஞ்ச மாதிரி தான்.”
“உதாரணமா?”
“வீடு மாத்தறவங்களுக்கு சாமான்களத் தூக்கிக் குடுக்கலாம், கஷ்ட்டப்படறவங்களுக்காக ஜெபம் செய்யலாம், ஆறுதல் சொல்லலாம்.”
“இது தான் நாம எப்பவும் செய்யறோமே? இது பெரிய விஷயமா?”
“இதே மாதிரி திருச்சபைக்கு வெளிய இருக்கறவங்களுக்கு நற்செய்தியச் சொல்லறதும், நம்ம கடமை, உரிமை, பாக்கியம்.”
“ஓ புரிஞ்சிருச்சு. திருச்சபைக்கு உள்ள இருக்கறவங்கள வெளியே அனுப்பி, வெளிய இருக்கறவங்கள உள்ளக் கொண்டு வரணும்.”
“சொல்றது ஈசி, ஆனா முயற்சி பண்றதே கஷ்ட்டம்.”
“என்னால முடிஞ்சதச் செய்யறேன். ஏற்கனவே செஞ்சுக்கிட்டு இருக்கறத புரிஞ்சு, கொஞ்சம் சிறப்பா செய்யறேன்.”
“அறுப்பின் பண்டிகைக்கு நல்லா குடு.”
“அறுக்கறதுக்கும் கூட ஒரு பண்டிகையா? ரொம்ப சந்தோஷம் அப்போ வருஷத்துக்கு ஒரு தடவ பண்டிகைல மட்டும் தான் அறுப்பாங்க. வருஷம் முழுசும் ஜாலியா இருக்கப் போவுதுன்னு சொல்றீங்க?”
“அடப்பாவி இப்படி தினமும் அறுத்துக்கிட்டு இருந்தன்னா, பண்டிகைல எப்படி அறுக்கப் போறியோ?”

No comments:
Post a Comment