Saturday, July 20, 2013

மிஸ்ட்டர் சன்டே



"குற்றாலம் சீசன் இந்த தடவ சூப்பரா இருக்குது. வெற்றிகரமான ஐம்பதாவது நாள் தாண்டிப் போயிட்டு இருக்கு. வருஷன் முழுசுமே இப்படி சீசன் இருந்தா நல்லா இருக்கும்."

"ஆமா, எல்லா நாளும் பார்டர் கடை புரோட்டாவும் சிக்கனுமா சாப்பிட்டுக்கிட்டு, அருவில குளிச்சிட்டே இருந்தா போதுமா? பொளைப்புக்கு காசு சம்பாதிக்கறது எப்போ?"

"சீசன் நல்லது தானே? பிசினஸ் நல்லா இருக்கும், க்ளைமேட் நல்லா இருக்கும், தண்ணிப் பஞ்சம் இருக்காது"

"வருஷம்னாலே நாலு சீசன் இருக்கணும் தெரியுமா? எப்பவுமே மழை பெஞ்சுட்டு இருந்தா, பயிர்களை அறுத்து காயப்போட முடியாது. அது அதுக்கு ஒரு காலம் இருக்குது இல்லியா?"

"அப்படின்னா சம்பாதிக்க ஒரு காலம், செலவழிக்க ஒரு சீசன் அப்படின்னு சொல்றீங்களா?"

"ஏம்ப்பா நீ இந்த திருனவேலி, குத்தாலம், பார்டர் தவிர வேற ஊருக்கே போனதில்லியா?"

"ம் கன்னியாகுமரி, நாசரேத், தூத்துக்குடி எல்லாம் போயிருக்கேனே?"

"வாழ்க்கையில வெரைட்டி இல்லாட்டி சலிப்பு வந்துரும். மாற்றங்களப் புரிஞ்சு ஏத்துக்கலன்னா, வெறுப்பு வந்துரும்"

"ஆனா, நமக்குப் பிடிச்ச வெரைட்டி தானே நல்லா இருக்கு? பிடிக்காத மாற்றத்த ஏத்துக்கவே முடியலியே?"

"இயற்கையாவே கர்த்தர் சீசன்கள வச்சிருக்கறாரு. நாம சரியாப் புரிஞ்சு கொஞ்சம் ஒழுக்கமா வாழ்ந்தாலே போதும். மாம்பழ சீசன்ல ஏறுற சக்கரை, அடுத்து வர்ற நவாப்பழ சீசன்ல இறங்கிரும். ஆனா மாம்பழம் அளவுக்கு நாம நவாப்பழத்த விரும்பறதில்ல."

"பிடிக்காதத காசு குடுத்து எவனாவது வாங்குவானா?"

"டாக்டர் சொன்னா மட்டும் பிடிச்சாலும் பிடிக்காட்டியும் காசு குடுத்து மருந்து வாங்குற? சாப்பிடுற?"

"என்னா சொல்ல வர்றீங்க பாஸ்?"

"ஆசீர்வாதம், செழிப்பு மட்டும் போதாது, சிலுவையும், பலிபீடமும் முக்கியம். சிட்சை, ஒழுக்கம், பாடுகள் இல்லாத ஆசீர்வாதம் தொப்பையையும், ப்ரஷ்ஷரையும் கூட்டுற சாப்பாடு மாதிரி."

"எல்லாருக்கும் துதி ஆராதனையில கலந்துக்க, பரலோகம் போக ஆசையாத்தான் இருக்கு. ஆனா அடக்க ஆராதனையும், மையப் பெட்டியையும் தான் பிடிக்க மாட்டேங்குது."

No comments: