Friday, June 28, 2013

Mr.Sunday

"மிஷன் சன்டே"-ன்னு  ஏன் கொண்டாடணும்?"

"எல்லா நாளும் கர்த்தர் உண்டு பண்ணின நாளா இருக்கறப்போ எதுக்கு பிறந்த நாள் கல்யாண நாள்னு கொண்டாடுற மாதிரி தான். அப்படியாவது ஒரு நாள்ல குறிப்பிட்ட நபருக்கு அல்லது, விஷயத்துக்கு முக்கியத்துவம் குடுக்கலாமேன்னு தான் இப்படி நடக்குது."

"மொதல்ல மிஷன் அப்படின்னா என்னன்னு அர்த்தம் சொல்லுங்க."

"மிஷன் அப்படின்னா ஒரு குறிப்பிட்ட வேலைன்னு பொதுவாச் சொல்லலாம்."

"சரி சர்ச்-சோட மிஷன் என்ன?"

"சர்ச்-சுக்கு வெளியே இருக்கறவங்கள, உள்ளே கொண்டு வர்றது. உள்ள இருக்கறவங்கள வெளியே அனுப்பறது."

"ரெண்டாவது தானாவே நடந்துக்கிட்டு இருக்கு. முதலாவது வேலை தான் நடக்கற மாதிரி தெரியல. புரியற மாதிரி சொல்லுங்களேன்."

"அதாவது உறுப்பினரா இல்லாதவங்களை உறுப்பினர்களா மாத்தறது, உறுப்பினர்களை உற்சாகப் படுத்தி, பயிற்சி குடுத்து வெளியே அனுப்பி புதிய உறுப்பினர்களைக் கொண்டு வர்றதுன்னு சொல்லலாம்."

"வட இந்தியாவுல மிஷனரிகள் ஊழியம் செய்யறாங்க.அப்படின்னா  நம்ம சர்ச் வட இந்தியாவுக்குப் போகணுமா? நாம போகணுமா? மிஷனரிகளுக்காக ஜெபம் செய்துட்டு, காணிக்கைய அனுப்பிட்டு பேசாம இருந்துக்கலாமா?"

"வட இந்தியாவோ, தென் இந்தியாவோ, மனுஷன் மனுஷன் தான். அவங்களுக்கு நாம செய்ய வேண்டிய ஊழியத்த நாம செய்யணும். வட இந்தியாவுல மட்டும் இல்ல, நீ இருக்கற ஊர்ல வடக்குத் தெருவுல செய்யறதும் மிஷனரி ஊழியம் தான்."

"நம்ம மிஷன் இது தான்னு எப்படி உறுதியா சொல்றீங்க?"

"கர்த்தர் பரலோகத்துக்குப் போறதுக்கு முன்னால கடைசியா குடுத்த கட்டளை இது தான். அவருக்குப் பதிலா நாம தான் இந்த வேலையச் செய்யணும்."

"எனக்கு பைபிள் தெரியாது, பிரசங்கம் செய்யத் தெரியாது."

"கிறிஸ்துவப் பின்பற்றி வாழ்ந்தாலே போதும். வார்த்தைகளுக்கு அர்த்தமும் உயிரும் தர்றதே வாழ்க்கை தானே!"

"எனக்கு என்னவோ, வட இந்தியாவுல போய் ஊழியம் செய்யறது ஈசி மாதிரி தெரியுது. நம்மக் கூடவே இருந்து நம்மளப் பத்தி நல்லாத் தெரிஞ்சவங்க கிட்ட ஊழியம் செய்யறது தான் கஷ்ட்டம்."

"முதல்ல சுத்தி இருக்கறவங்க கிட்ட ஊழியம் செய்ய முடிஞ்சா, தூரமா இருக்கறவங்க கிட்ட நல்லா ஊழியம் செய்யலாம்."

"சரி தான், பெட்டிக்கடையா ஆரம்பிச்சு, டிப்பார்ட்மென்ட்டல் ஸ்டோரா மாறியிருக்கற பிசினஸ் மாதிரின்னு சொல்றீங்க."

"மல்லிகைப்பூவுக்கு விளம்பரம் வேண்டாம்."

"கருவாட்டுக்கும் தான்."

No comments: