"ச்சே இந்த உலகம் ஒவ்வொரு நாளும் சிறுசாயிட்டே வருதே! ஆரம்பத்துல உலகம் பெரிசா இருந்துச்சு. நான் பயந்து போய் இருந்தேன். ஓடிக்கிட்டே இருந்தேன். அப்புறமா வலது பக்கமும் இடது பக்கமும் சுவர்கள் இருக்கறதப் பாத்ததும், கொஞ்சம் சந்தோஷமா இருந்தது. அப்புறமா இந்த சுவர்களும் திடீர்னு குறுகிப் போயிருச்சு. நானும் அதுக்குள்ள கடைசி சின்ன அறைக்குள்ள வந்துட்டேன். மூலையில ஒரு பொறி இருக்குது. அதுக்குள்ள நேராப் போக வேண்டியது தான்" என்று எலி சொன்னது.
"நீ போற வழிய மாத்தணும் அவ்வளவு தான்" என்று சொன்னது பூனை. அப்படியே அந்த எலியையும் சாப்பிட்டு முடித்தது.
No comments:
Post a Comment