Friday, April 27, 2012

Mr. Sunday


மிஸ்ட்டர் சண்டே.

முப்பது சண்டேஸ் மொத்தமா வந்தா அதுக்குப் பேரு என்ன?
சம்மர் ஹாலிடேஸ்?
ஆமா, விடுமுறையிலேயும் ஸ்கூல் வைக்கிறீங்களே அதுக்கு அர்த்தம் என்ன? உழைப்பாளர் தினம் அன்னிக்கு லீவு உட்டுறுதாங்க, இதுக்குப் பேரு தான் ஆக்சிமோரானோ?
லீவு குடுத்துட்டு, செல் ஃபோனும் குடுத்து, ஒர்க் ஃப்ரம் ஹோம்னு சொல்லி வேலை வாங்குறாங்களே அது மாதிரியா இருக்குமோ?
சரி, கண்டிப்பா மனுஷனுக்கு ரெஸ்ட் வேணுமா? முடியறப்போ மாடு மாதிரி நல்லா உழைச்சுட்டு, காசு சேத்துட்டு அப்புறமா  முடியாதப்போ ஓய்வு எடுத்துக்கலாம் தானே? வாரத்துக்கு ஒரு நாள் ஞாயித்துக் கிழமை லீவு உடுறதுனால எவ்வளவு நஷ்ட்டம், பிசினஸ்ல, ஃபாக்டரிஸ்ல, இப்படி எல்லாம் யோசிக்கறதுக்கு ஆளு இல்ல.
ஆமா முடியறப்போ ஓய்வு ஒழிச்சல் இல்லாம வேல செஞ்சா முடியாத காலம்னு ஒண்ணு வரவே வராது, சீக்கிரமா உன் கதையே முடிஞ்சு போயிரும்.
மிஷினுக்குக் கூட இத்தன மணி நேரம் தான் லைஃப்னு சொல்லிடுறாங்க. அப்பப்போ, ஆஃப் பண்ணிப் போட்டுடுறாங்க. நம்மளப் படைச்ச கடவுளுக்குத் தெரியாததா நமக்குத் தெரியப் போவுது? அவரு தான் நமக்கு ஓய்வு நாள ஒரு கட்டளையாவே குடுத்திருக்காரு.
ஆமா ஓய்வு நாள்ல தானே நாம நான் வெஜ் சமைக்கறது, துணி துவைக்கறது, ஷாப்பிங் போறது, பொழுது போக்கு அப்படின்னு பிசியா இருக்கோம்.
ஆனா வாரம் முழுசும் செய்யற மிஷின் வேலைய விட இது வித்தியாசமானது தானே?
ஆமா வாரத்துக்கு ஒரு நாள் தான் ஓய்வு கிடைக்குதே பின்ன ஏன், வருஷத்துக்கு ஒரு தடவை ஒரு மாசம் கோடை விடுமுறை குடுக்கிறாங்க?
கல்யாணம், அசனம், ஊர்த் திருவிழா, உல்லாசப் பயணம், சொந்தக்காரங்க கூடுகைன்னு ஒரு வித்தியாசம் வாழ்க்கையில வரணும்னு தான்.
இந்த சம்மர் லீவுல கூட ஸ்பெஷல் க்ளாஸ், கோச்சிங் க்ளாஸ், டான்ஸ் க்ளாஸ், ஸ்போர்ட்ஸ் க்ளாஸ் அப்படின்னும் வைக்கிறாங்க. சர்ச்லயும் ஓய்வு நாள் பாடசாலை மாதிரி, விடுமுறை வேதாகமப் பள்ளி வைக்கறீங்க. அது என்ன வாரம் பூராவும் பள்ளிக்கூடம் போய்ட்டு வர்ற பிள்ளைங்களுக்கு ஓய்வு நாள் பள்ளி, வருஷம் முழுசும் பள்ளிக்கூடத்துல இருந்து நொந்து போனவங்களுக்கு விடுமுறை வேதாகமப் பள்ளி, ஓய்வு நாள சட்டமா ஆக்குன கடவுள் தான் இதுக்குக் காரணமா?
ஓய்வு நாளோ, விடுமுறை நாட்களோ அதை அனுபவிக்கறவங்க மனசுல தான் இருக்குது எல்லாமே. வேலை நாட்களை விடுமுறை நாள் மாதிரி சோம்பலா வேஸ்ட் பண்றவங்களுக்கு விடுமுறை நாட்கள்ல அனுபவிக்க எதுவுமே இருக்காது.
ஸ்கூல ரசிச்சு அனுபவிக்கிறவங்க, ஓய்வு நாள்லயும், விடுமுறை நாட்கள்லயும் வேதத்தப் படிக்கறத என்ஜாய்  பண்ணுவாங்கன்னு தான் நான் நினைக்கிறேன்.
மேடு இருந்தா பள்ளம் இருக்கும், வெளிச்சம் இருந்தா இருள் இருக்கும் அது மாதிரி வேலைன்னா ஓய்வு இருக்கணும். உழைப்புன்னா கொஞ்சம் பொழுது போக்கும் இருக்கணும், இந்த ரிதம் இல்லாத வாழ்க்கை சலிப்பா மாறிடும்.
சரி கொஞ்சம் அமைதியா இருங்க, இவ்வளவு நேரமும் உங்க கிட்ட பேசி மூளை கொஞ்சம் களைப்பா ஆயிடுச்சு; இப்போ நான் ஓய்வு எடுக்கப் போறேன்.

No comments: