Wednesday, February 1, 2012

மிஸ்ட்டர் சன்டே

"கர்த்தர் மனுஷங்க கிட்ட பேசினார்-னு பைபிள்ல எழுதியிருக்கு. இப்போ ஏன் அவரு எங்கிட்ட பேச மாட்டேங்கறார்?"

"அவரு பேசிட்டுத் தான் இருக்காரு. உன் கிட்டத்தான் பிரச்சன "

ஊழியக்காரங்க மூலமா, பைபிள் மூலமா, மனசாட்சி மூலமா பேசறார்னுலாம் உதார் உடாதீங்க. என் காது கேக்கற மாதிரி அவரு பேசணும்

ஹிந்தி மட்டும் தெரிஞ்ச ஒருத்தர் உனக்கு ஃப்ரண்டா, ஆள் இல்லாத ஊருல கிடைச்சா எப்படி இருக்கும்?

சூப்பரா இருக்கும். நான் அந்த ஆளுக்கு தமிழ் கத்துக் குடுத்துருவேன்

கடவுள் பேசறதக் கேக்கறதுக்கு மனுஷ பாஷைய அவருக்குக் கத்துக்குடுக்கணும். அவரே மனுஷனா வந்து அதக் கத்துக்கிட்டாரு. அப்படியே அவரு பாஷையையும் நீ கத்துக்கிட்டா நல்லா இருக்கும் தானே?

அவருக்கு மனுஷன் மொழி தெரியும்னா, இப்போ அவரு எங்கிட்ட பேச வேண்டியது தானே?

உனக்கு உள்ளேயே கடவுளோட சத்தத்தக் கேக்கறதுக்கு செட் அப் இருக்குது. ஆனா உலகத்துக் கூச்சல் எல்லாம் சேந்து அவரோட சத்தத்தக் கேக்க விடாம செய்யுது. நீயும் அதுக்கு ஏத்த மாதிரி உன்ன சரி செய்துக்கல.

சரி நீங்க சொல்றத எல்லாம் அப்படியே செய்யறேன், அப்படியும் கடவுள் எங்கிட்ட பேசறது எனக்குக் கேக்கலன்னா, அடுத்த ஞாயித்துக் கிழமை உங்களக் கிழிச்சிருவேன்.

நீ நினைக்கிற மாதிரி கடவுள் நேரடியா உங்கிட்டப் பேசுனா உன் காது கிழிஞ்சு போயிரும் தெரியுமா?

சும்மா பயங்காட்டி பேச்ச மாத்தப் பாக்காதீங்க. சொல்லுங்க.. கடவுள் பேசறதக் கேக்க என்ன பண்ணணும்?

தினமும் காலைல பத்து நிமிஷம் வேற எதப் பத்தியும் யோசிக்காம பைபிளயும், கடவுளப் பத்தியும் மட்டுமே மனசுல ஆழமா தியானம் பண்ணணும்

அப்புறம்?

நீங்க சொல்றத செய்யறேன் கர்த்தாவே. எனக்குப் பிடிக்காததா இருந்தாலும்-ன்னு புரோ நோட்டு எழுதிக் குடுத்த மாதிரி சரண்டர் பண்ணிடணும். வாரம் ஒரு நாள் முழு இரவு ஜெபத்துல தூங்காம இருக்கவும் ரெடி - இந்த மாதிரி ஒண்ணு ரெண்டு விஷயங்கள் பட்டியல்ல இருந்தா கீழே நீ கையெழுத்துப் போடணும்

அப்புறம்?

கடவுளுக்குப் பிடிக்காத யோசனைகளைக் கொண்டு வர்ற எல்லாத்தையும் சுத்தமா க்ளோஸ் பண்ணிட்டு, வேதவசனத்தால உன் மனசு நிறைஞ்சு இருக்கணும். வெட்டி அரட்டை, காமெடி சானல், ஜாதி சங்கம் இப்படி ஒரு லிஸ்ட் இருக்குது

அடப் போங்கய்யா. இவ்ளோ கஷ்ட்டப்பட்டு கடவுள் பேசறதக் கேக்கறதுக்கு நான் ரெடி இல்ல. சாமியார் ஆகறதவிட, கடவுள் கிட்ட நேராப் பேசிட்டு இருக்கற சாமியார்கள் சொல்றதக் கேட்டு திருப்தி பட்டுக்க வேண்டியது தான்

அந்த சாமியாருங்க கிட்ட பேசறது உண்மையிலேயே கடவுள் தான்னு எப்படி உனக்குத் தெரியும்?

வாழ்க்கையே நம்பிக்கையில தானே ஓடுது?

பைபிள் வசனத்தையும் இதே மாதிரி கடவுள் பேசறது தான்னு நீ நம்பலாமே?

No comments: