"தீபாவளிக்கு நான் குடும்பத்தோட வெளியூருக்குப் போயிட்டேன்."
"ஓகோ, குடும்பத்தோட நேரம் செலவு பண்ணலாம்னு ஞான உதயம் ஆயிடுச்சோ?"
"அதெல்லாம் இல்ல, எல்லாரும் தீபாவளி பலகாரங்கள் கொண்டுட்டு வருவாங்க. அவங்க முகத்துல முழிக்காம இருக்கலாம்னு தான்."
"வாங்கி சாப்பிட்டுற வேண்டியது தானே? அல்லது அவங்க கிட்ட வேண்டாம்னு சொல்ல வேண்டியது தானே?"
"ஐயோ நீங்களே இப்படி விவரம் இல்லாத ஆளு மாதிரி பேசறீங்களே! தீபாவளி பலகாரங்கள் எல்லாமே சாமிக்குப் படைச்சதா இருக்கும். 1 கொரிந்தியர் 8 ஆம் அதிகாரத்துல அப்படி படைச்சது எதையும் சாப்பிடக் கூடாதுன்னு சொல்லுதே?"
"நீ சொல்ற வசனத்த எழுதின அதே பவுல் தான் 10 ஆம் அதிகாரத்துல ஜெபம் பண்ணிட்டு சாப்பிடலாம்னும் சொல்றார்."
"சும்மா பைபிள் வசனத்த வச்சே கொழப்பாதீங்க. கொஞ்சம் அசந்து இருந்தா, ஜெபம் பண்ணிட்டு கொள்ளை அடிக்கலாம்னு சொல்லிருவீங்க போல இருக்கே?"
"மிஞ்சின நீதிமான் அவர்களே, கடையில நீங்க சாப்பிடுற பலகாரங்கள்-ல முக்கால்வாசி சாம்பிள் படையலுக்கு அப்புறமாத்தான் வருது. அதுக்காக வெளியே எங்கேயும் சாப்பிடாம இருக்க முடியுமா?"
"அய்யா, கடைசியில நம்ம வயித்துல அடிச்சிருவீங்க போல இருக்கே?"
"தீபாவளிக்கு நீ வெளியூர் போயிட்டு, கிறிஸ்மஸ்க்கு அவங்க எல்லாரும் உனக்காக வீட்டுல காத்திருக்கணும்னு நினைக்கறது சரியா? தீபாவளி பலகாரத்த நீ வாங்காம, கிறிஸ்மஸ் கேக் குடுக்கறப்போ அவங்க உங்கிட்ட வாங்கணும்னு நினைச்சா அது நியாயமா?"
"நீங்க சொல்றது சரிதான். எனக்கு தீபாவளி பலகாரம் ஓ.கே. என் வீட்டுக்காரி தான் ரொம்ப கட்டுப்பாட்டோட இருக்கறா."
"மத்தவங்களுக்கு இயேசுவப் பத்தி சொல்லணும்னு உன் வீட்டுக்காரிக்கு ஆர்வம் இருக்குது தானே?"
"ஆமா. வீட்டு வேலைக்கு வர்றவங்க, ஆஸ்பத்திரில படுத்திருக்கிறவங்க, ஏழைகளுக்கு எல்லாம் ஊழியம் செய்வா."
"நற்செய்தி சொல்றப்போ மத்தவங்க மேல அன்பா, அவங்களப் புரிஞ்சு ஏத்துக்கிறவங்களா இருக்கணும் தானே?"
"எதுத்துப் பேசறவங்கள ஒதுக்கிட்டு மத்தவங்க கிட்ட தான் பேசுவா. காலம் பொல்லாதது, ஆதாயப் படுத்தணும்னு சொல்லிருவா. டைம் வேஸ்ட் பண்றது அவளுக்குப் பிடிக்கவே பிடிக்காது"
"அப்படின்னா தீபாவளி லீவுல ஏன் வெளியூர் போய் டைம் வேஸ்ட் பண்ணினீங்க?"
"அய்யய்யோ, அப்படில்லாம் வேஸ்ட் பண்ணுவோமா? நாங்க குடும்பமா, எழுப்புதல் முகாம்ல கலந்துக்கிட்டோம், அப்புறமா, சுவிசேஷ ஊழியத்துக்குப் போனோம்."
"உள்ளூருக்குள்ள இருக்கறவங்கள விட்டுட்டு வெளியூர்ல ஊழியம் செய்யப் போனீங்களா? ரொம்ப நல்லா இருக்கு."
"உள்ளூர்க்காரங்கள தான் எப்படி சமாளிக்கறதுன்னு தெரியல. அதுனாலத் தான் தீபாவளிக்கு தீபாவளிக்கு வெளியூரு போக வேண்டியதா இருக்குது."
No comments:
Post a Comment