Monday, August 29, 2011

a song about our patriotism and piety

நேசிப்பேன் என் தேசத்தை
சேவிப்பேன் என் தேவனை

நேசிப்பேன் என் தேசத்தை
சேவிப்பேன் என் இயேசுவை

எனக்காக என் தேசத்தைப் படைத்தவர்
இந்தியாவில் என்னை வைத்தவர்
நீர் வாழ்க.... வாழ்க.... வாழ்க ... இயேசுவே

நிறங்களில் இடங்களில்
இசையினில் திசையினில்
மொழிகளில் மணங்களில்
சுவையினில் குணங்களில்
மொழிகளில் தொழில்களில்
விதவிதமாய் இருந்தாலும்
இதமாய் எல்லாம் கலந்து
ஒன்றாய் என்றும் நன்றாய் நின்றாய்
எந்தன் பாரதமே.... ஜெயஹே.... ஜெயஹே

உலகமும் சகலமும்
உருவாகும் முன்னே - என்
பெயரைச் சொல்லி அழைத்தவர் படைத்தவர்
நான் வந்து பிறக்க ஆயத்தம் செய்த
விரிந்து பரந்து நின்ற
எந்தன் பாரதமே.... ஜெயஹே.... ஜெயஹே

Rap:

இக்கரைக்கு அக்கரைப் பச்சை
அக்கரையில் அக்கறை வச்ச - இப்போ
இக்கரையில் அக்கறை இல்ல.
அக்கரை சக்கரை திங்கிற
இக்கரை மக்கள மிதிக்கிற
பாரதம் புளித்தது
டாலர் இனிக்குது
தாளம் தப்புது
நாளும் நகருது
இளமையை வெளிநாட்டில் தொலச்சுட்டு
தொலச்சத கடசிக்காலத்துல இங்க வந்து தேடுறது
வெளையாட்டா, வெனையா தெரியல, புரியல
ஆனா ஆவன்னா, ஈயன்னா
ஆத்திச்சூடி கேட்டுக்கோடி
வாய்ப்பாடு நீராருங்கடலுடுத்த
ஜனகனமன டாட் நெட், ஜாவா, சி, சி ப்ளஸ் ப்ளஸ்
பி ஹெச் பி, எக்ஸ் எம் எல் படிச்சுட்டு
திரைகடல் ஓடி திரவியம் தேடி
திரும்பவும் வர்றதுக்கு விருப்பம் இல்லாம
விக்கவும் முடியல விழுங்கவும் முடியல
ஊட்டி வளத்த தாய கண்டுக்காம கொள்ளாம
நாட்டுக்கு குடிமகன் ஆற்றும் கடமைய செய்யாம
டோட்டலா மறந்து செய்நன்றி கொன்னான்.

தேவபக்தி உள்ளவன்
தேசப்பற்று உள்ளவன்

சாமிக்கு உண்மையா - பொறந்த
பூமிக்கு நன்றியா
கடமைய செஞ்சு நாட்டு
நிலைமைய உயர்த்து
தடைகளைத் தகர்த்து
இந்தியாவின் தலைய நிமிர்த்து.

No comments: