இந்த வலைப்பூவை, என்னை எழுது எழுது என்று நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் X அவர்களுக்கும் என்னை எழுத்துலகில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கார்த்திகா ராஜ்குமார் மற்றும் ப்ருத்வி அவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
Sunday, January 2, 2011
கிறிஸ்மஸ் ரிலீஸ் - ”ஒண்ணுமில்லே”
போன கிறிஸ்மஸ்க்கு ஒரு தெற்கத்திய டயோசிஸ் தயாரித்த டெலிவிஷன் படம் தயாரிக்கப்பட்டபோது பல நிலைகளில் உடன் இருந்து பார்த்தேன். (இந்தக் கிறிஸ்மஸ்க்கு அதுவும் இல்லை.) லோ (நோ) பட்ஜெட். நல்ல கதை. இன்னொரு ஊரிலிருந்து ஒருவர் இயக்க, குழுப் பணிக்கு உதாரணமாக நடந்தது. இதில் யாருமே பணம் வாங்கவில்லை. தன்னார்வமாக வேலை செய்தார்கள். இதற்கு பணம் தர டயோசிஸ்க்கு வசதியில்லை(மனமில்லை!?). வக்கீல், கோர்ட், லஞ்சம், விளம்பரம் எல்லாவற்றுக்கும் கொடுக்க பணம் இருக்கிறது. இந்த மாதிரி ஊழியங்களுக்கு, இப்படிப்பட்டவர்களை உற்சாகப்படுத்துவதற்குப் பணம் இல்லை. அதனால் தான் பல ஊழியங்கள், சபையிலிருந்து காணிக்கைகளைப் பெற்று ஊழியங்கள் செய்துவருகிறார்கள். நிறுவனமாகிப் போன பெரும் சபைகள் செய்யாததை சிறுவர்களும், இளைஞர்களும், சிறு ஊழியர்களும் தனிப்பட்ட முறையில் செய்கிறார்கள். பெரும் திருச்சபை வெட்கம், உணர்ச்சி, மானம், மரியாதை எதுவுமே இல்லாமல் இருக்கின்றது. தனது ஆக்கத்திறமைகளை, கோஷ்ட்டிச் சண்டைகளிலும், ஒருவரை ஒருவர் தாக்குவதிலும், சுரண்டுவதிலும் அதிகமாகச் செலவிடுவதால் ஊழியம், ஆக்கத்திறமை, ஊடகம், கற்பனை, கலை எல்லாவற்றிலும் பஞ்சம் ஏற்பட்டது போல, மட்டித்தனமாக மக்குத்தனமாக இருக்கிறது.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment