Monday, January 9, 2017

சன்டே சண்டை 2 #சண்டேசண்டை 9.1.2017



“தமிழ்நாட்டிலேயே பெரிய மெயின் லைன் சபை, மாநில பாடர்ல இருக்கற ஒரு பெரிய கோயில். கம்யூனியன் வாங்கப் போனப்போ ஒரு கூத்து நடந்தது.”

“நம்ம ஆட்கள் தான் எல்லா நேரத்துலேயும் எல்லாம் செய்யறவங்களாச்சுதே. நேரா விஷயத்துக்கு வாங்க.”

“ஒரே சர்வீஸ்ல ரெண்டு தடவ கம்யூனியன் குடுத்தாங்க.”

“ஆம்பளைங்களுக்கு முதல்ல, அப்புறமா பொம்பளைங்களுக்கா?”

“இல்ல.”

“அப்போ பொம்பளைங்களுக்கு முதல்லயா? தமிழகத்துக்கு நடுவுல இருக்கற ஊர்ல, நடுவுல இருக்கற ஒரு கோயில்ல அப்படித்தான். பொம்பளைங்க முதல்ல கம்யூனியன் எடுத்ததுக்கு அப்புறம் தான் ஆம்பளைங்க.”

“பொம்பளைங்களுக்கு உரிமை, அதிகாரம் எல்லாம் சபையில தான். வீட்டுல போனா கத வேற மாதிரி இருக்கும். பொம்பளைங்கள மனுஷங்களா மதிக்கிற ஆம்பளைங்க ரொம்ப கொஞ்ச பேர் தான்.”

“சரி ரெண்டு கம்யூனியன் கதைக்கு வாங்க. நான் சொன்னது சரி தானே?”

“இல்ல. முதல்ல பொதுவான கப்புல எல்லாரும் வாய் வச்சு திராட்சை ரசத்தக் குடிக்கற மாதிரி கம்யூனியன். அப்புறமா எல்லாருக்கும் தனித்தனியா இண்டிவிஜுவல் கப் குடுக்கற கம்யூனியன்.”

“ரெண்டாவது கூட்டம் கொஞ்சம் சுத்த பத்தம் அல்லது ஹெல்த் கான்ஷியசா இருப்பாங்களோ?”

“அது தான் இல்ல. ரெண்டு கோஷ்டிகள் அங்க இருக்காங்க. ஒரு கோஷ்டி பொது கப்புல, அடுத்த கோஷ்டி தனித்தனி கப்புல.”

“அடப்பாவிகளா, இப்படி பிரிவினைய வச்சிக்கிட்டு எப்படித் தான் கர்த்தருக்கு  ஆராதனை செய்யறாங்களோ?”

“ஆராதனை செய்யறாங்களோ இல்லையோ, அடிதடி அடிக்கடி நடக்கும்.”

“மோடி செஞ்சது மாதிரி ரெண்டு தலைமுறைக்கு மேல இருக்கற கிறிஸ்தவங்க எல்லாம் செல்லாதுன்னு சொல்லிட்டு, கோயிலே இல்லாத எடத்துல, ஒரிசா மாதிரி துன்புறுத்தல் உள்ள இடத்துல முதல் தலைமுறை கிறிஸ்தவங்க கிட்ட போய், தங்கியிருந்து கத்துக்கிட்டு வந்தாத் தான் செல்லும் அப்படின்னு சொன்னா நல்லா இருக்கும்.”

“டிஸ்பிரிச்சுவலைசேஷன் பண்ணலாம்னு சொல்றீரா? நம்ம ஆட்கள் அங்கேயும் ரெண்டு கோஷ்டிகள உருவாக்கிருவாங்க.”

“இவங்க எல்லாம் திருந்துவாங்களா? ஹெவனுக்கு போவாங்களா? ஹெல்லுக்குப் போவாங்களா?”

“மேல போனா, அடுத்த கோஷ்டி காரங்க மூஞ்சியில எப்படி முழிப்பாங்கன்னு தெரியல. கீழ போனா இருக்கற டார்ச்சர்ல மத்த கோஷ்டி காரங்களப் பத்தி நினைக்கவே நேரம் இல்லாமல் இருப்பாங்க.”

“அதே மாதிரி டார்ச்சர் ஒண்ண கர்த்தர் இங்கேயே அவங்களுக்குக் குடுத்தா நல்லா இருக்கும்.”

“இவங்க பண்ணுறதே டார்ச்சர் தானே? இவங்க பிரிவினை தான் பரிசுத்த ஆவியானவரையே டார்ச்சர் பண்ணுது.”

“இத சரி பண்றதுக்கு அதிகாரத்துல இருக்கறவங்க ஏதாவது செய்யலாம் இல்லியா? ‘அவர்கள் ஒன்றாயிருக்கவும்’ அப்படின்னு தானே அந்த சபையில மோட்டோ இருக்குது?”

“ஊர் ரெண்டு பட்டா தானே பாலிட்டிக்ஸ் நல்லா நடக்கும். டாப்புல இருந்து பாட்டம் வரைக்கும் பிரித்தாளும் சூழ்ச்சி தானே நடக்குது.”

“ஆமா, ஆதாமையும் ஏவாளையும் பிரிச்சு, அப்புறம் அவங்க ரெண்டு பேரையும் கடவுள் கிட்ட இருந்த பிரிச்சாரு இல்ல மிஸ்ட்டர் சாத்தான், அவரு கூடத் தான் இவங்க எல்லாருமே கூட்டு வச்சிருக்காங்க.”


“அவங்களுக்குள்ள பிரிவினை வரணும்னு தான் நாம ஜெபம் பண்ணணும்.”

No comments: