Thursday, December 26, 2013

மிஸ்ட்டர் சன்டே


“எல் ஜி பி டி –ன்னு அடிக்கடி நியூஸ் பேப்பர்ல அடிபடுராங்களே அவங்க யாரு?”
“ஆதாமுக்கு ஏதாம்-னு ஒருத்தனையும், ஏவாளுக்கு ஆவாள்னு ஒருத்தியையும் கல்யாணம் பண்ணி வச்சா எப்படி இருக்கும்? இவங்க மத்தவங்களையும் கல்யாணம் பண்ணிக்கிட்டு ஒருவனுக்கு ஒருவன் கூடவே ஒருத்தியும் பரவாயில்லை, நான் ஒருவனாகவும் ஒருத்தியாவும் ஒரே நேரத்தில் இருந்துக்கப் போறேன்-னு சொல்றவங்களும் தான் எல் ஜி பி டி”
“எவனும் எந்த கருமாந்திரத்தையும் செஞ்சுட்டுப் போவட்டும். நாம உண்மையா இருக்கணும்.”
“உன் மகன் வந்து அவன் ஃபிரெண்ட் ஒருத்தன கல்யாணம் பண்ணிக்கிறதா சொன்னா எப்படி இருக்கும்? அல்லது உன் மகள் ....”
“ஐயையோ வெட்டிப் போட்டுட்டு ஜெயிலுக்குப் போயிருவேன்.”
“நடக்கணும்ம்னு சொல்லல, நடக்கறதுக்கு வாய்ப்பு இருக்குதுன்னு சொல்றேன். உன் பிள்ளைகளோ மத்தவங்க பிள்ளைகளோ எல்லாத்தையும் ஒரே மாதிரி நடத்தணும்.”
“அந்த லூசு கூட்டத்த எப்படி என் பிள்ளைங்கள மாதிரி நடத்துறது?”
“அவங்களப் புரிஞ்சுக்க முயற்சி பண்ணலாம். அவங்க நடத்தைய எத்துக்காட்டாலும் அவங்கள நேசிக்க முயற்சிக்கலாம். அட்லீஸ்ட் அவங்களுக்காக ஜெபமாவது பண்ணலாமே!”
"அவங்க எல்லாம் நிச்சயம் நரகம் தானே போகப்போறாங்க. எதுக்கு வீணா ஜெபத்தை வேஸ்ட் பண்ணிக்கிட்டு....? பைபிள்-லயே இவங்க பரலோகத்துல பிரவேசிப்பதில்லைன்னு போட்டிருக்கே?"
"என்னிடத்தில் வருபவனை நான் புறம்பே தள்ளுவதில்லைன்னும் அதே பைபிள்ல தான் போட்டிருக்கு."
"அடப் பாவி, இந்த மாதிரி அசிங்கம் பண்றவங்க பரலோகத்துக்குப் போவாங்கன்னு சொல்றீங்களா?"
"மனசுல அசிங்கம் இருக்கறதுக்கும் அதே தீர்ப்பு தான் தெரியுமா?"
"நீங்க யாருக்கு சப்போர்ட் பண்றீங்க? அத தெளிவா சொல்லிருங்க."
"இயேசுவே சப்போர்ட் பண்ற ஒரு  ஆள நாம ஒதுக்கலாமா? "
“நீங்க எதுவும் எல் ஜி பி டிக் காரர் இல்லியே? பயமா இருக்கு . இனிமேலுக்கு கொஞ்சம் எச்சரிக்கையாத் தான் எல்லார் கிட்டயும் பழகணும்.”
“அவங்களும் உன்ன மாதிரி தான். சில நேரங்கள்ல ட்டூமச்சாப் போறாங்க..”
“நார்மலுக்கும் ட்டூமச்சுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? இப்படி அநியாயமா என்னையும் எல் ஜி பி டி யையும் ஒண்ணுன்னு சொல்றிங்க? ”
“வாய் வழியா சாப்பிடலாம், நரம்பு ஊசி மூலமாவும் குளுக்கோஸ் எத்தலாம், வாய்ல பிரச்சனை இருக்கறவங்களுக்கு தொண்டையில ஓட்டை போட்டும் சாப்பாடு குடுக்கலாம். ராக்கெட்ல போறவங்களுக்கு மாத்திரையா சாப்பாட்டக் குடுக்கலாம். இந்த மாதிரி எப்பவோ எங்கவோ நடக்கறதுக்காக எல்லாருமே இப்படிச் சாப்பிடலாம் / சாப்பிடணும்/ சாப்பிடறதுக்கு உரிமை குடுக்கணும் அப்படின்னு சொல்றப்போ, சும்மா இருக்கறவங்களும் இந்த மாதிரி முயற்சி பண்ணிப் பாக்கலாமேன்னு நினைக்கலாம். மத்தவங்கள விட வித்தியாசமா செய்யணும்னே நேர்ந்துகிட்டு நடமாடுற கூட்டம் இதையே பிடிச்சுக்குவாங்க.”
“அவங்க செய்யறது தப்பு. இயற்கைக்கு எதிரானதுன்னு பளிச்சின்னு சொல்லிட்டுப் போறத உட்டுட்டு சும்மா சுத்தி வளைக்கிறீங்களே ”
“விபச்சாரத்துல மாட்டுன பெண்ணுகிட்ட இயேசு என்ன சொன்னார்?”
“பாவம் செய்யாதேன்னு சொன்னார்.”
“அதுக்கு முன்னால பைபிள்ல எழுதியிருக்கிறத சொல்லாமப் போயிட்டியே? நானும் உன்னைக் குற்றவாளியாகத் தீர்க்கிறதில்லை, நீ போ, இனி பாவம் செய்யாதேன்னு இந்த வரிசையில தான் வேதத்துல எழுதப்பட்டிருக்கு. நீ தலை கீழாச் சொல்லுற.”
“எல்லாக் கழுதையும் ஒண்ணு தானே.... வரிசை மாறினா என்ன?”
“முதல்ல குற்றம் தீர்க்காத அன்பு, அப்புறமா போ அப்படின்னு சொல்ற விடுதலை அப்புறமாத்தான் இனி பாவம் செய்யாத புது வாழ்க்கை . இது இயேசுவோட வரிசை. நீ தப்பு செஞ்சு மாட்டியிருந்தா புரிஞ்சிருக்கும். நீ தான் பரிசேயன் மாதிரி தலைய நிமிர்த்தி ஆயக்காரனோட உன்ன ஒப்பிட்டுப் பார்க்கிற.”
“ஐயையோ அப்படி எல்லாம் சொல்லாதீங்க. எனக்கு பரிசேயன் –ங்கற பட்டம் வேண்டாம்.”
“ஆயக்காரன் அனுபவம் இல்லாம மன்னிப்பு பத்தி புரிஞ்சுக்க முடியாது”
“அதுக்காக மன்னிப்ப அனுபவிக்கணும் அப்படிங்கற ஒரே காரணத்துக்காக பாவம் செஞ்சுட்டு இருக்கவும் முடியாது.”
“பரவாயில்ல நீ தேறிடுவ”

“எல்லாம் உங்க ஆசீர்வாதம் தான்.”

No comments: