“போனவாரம் ஒரு ஊழியக்காரர் பிரசங்கம் பண்ணினாரே அது கொஞ்சம் வித்தியாசமா இருந்தது.”
“பாஸ்ட்டர் பிரசங்கம் புளிச்சுப் போச்சுதாக்கும்?”
“என்ன பேசினாலும் கொசறு வேல பாக்கறது தான் உங்க பழக்கம்.”
“சரி என்ன வித்தியாசமா இருந்தது?”
“இயேசுவுக்காக நாம் ஏதாவது செய்யணும்னு எவ்வளவு தீர்மானமா சொல்லிட்டுப் போனார்?
எத்தனை பேர் கடைசியில அவர் ஜெபம் பண்ணும் போது எழுந்து நின்னு ஒப்புக் குடுத்தாங்க?”
“நீயும் ஒப்புக் குடுத்தாயாக்கும்?”
“ஆமா ஆனா நான் எழுந்து நிக்கல, உக்காந்த எடத்துல இருந்தே, மனசுக்குள்ள எழுந்திருச்சு நின்னு ஒப்புக் குடுத்தேன்.”
“அப்புறமா என்ன செய்தே?”
“என்ன செய்தேன்னா? நீங்க என்ன கேக்கறீங்க?”
“எதுக்கு ஒப்புக்குடுத்தியோ அத செஞ்சியா?”
“ம்...?”
“பிரசங்கம் நல்லா இருக்கும், ஆனா எதப்பத்தி பேசினாங்கன்னு கேட்டா உனக்குத் தெரியாது.
ஒப்புக் குடுத்திருப்ப ஆனா எதுக்குன்னு தெரியாது. அதுவும் ஒடம்பு உக்காந்துக்கிட்டு இருக்க
மனசுல எழுந்து நின்னுருப்பே. எதாவது செய்யறதுக்கு ஒப்புக் குடுக்கறதவிட, எதைச் செய்யணும்னு
உறுதியா ஜெபம் செய்தா போதும்.”
“சம்த்திங் இஸ் பெட்டர் தான் நத்திங்னு சொல்றீங்க?”
“நோக்கம் இல்லாம செய்யற சம்த்திங்க விட நத்திங்கே மேல்.”
“நீங்க எந்த கட்சின்னு மொதல்ல சொல்லுங்க. ரெண்டு பக்கமும் சப்போர்ட் பண்ற மாதிரி இருக்கு,
அப்போஸ் பண்ற மாதிரியும் இருக்கு.”
”நான் ரெண்டு கட்சியும் இல்ல, மூணாவது கட்சி.”
“ஆமா, இல்ல ரெண்டு கட்சி தானே இருக்குது, எப்படி மூணாவது கட்சி?”
”மோட்சத்துக்குப் போறவங்க, நரகத்துக்குப் போறவங்க, ரெண்டு கட்சி தானே, பரலோக ராஜ்யத்துக்குத் தூரமானவன் இல்லன்னு ஒரு மூணாவது கட்சியப் பத்தி சொன்னாரே இயேசு?”
“குழப்புறீங்களே?”
“முட்டாளா இருக்கறதவிட, குழம்பறது நல்லது.”
“சரி குழப்புங்க.”
“கடவுளுக்காக சாதிக்கணும் அப்படிங்கறது சரி தான். ஆனா, எத சாதிக்கணும்னு தெரியாம, எதையாவது
செய்யணும்னு சொல்றது, கடவுளுக்கே எதிரானது.”
“சும்மா இருக்கறதவிட கடவுளுக்காக எதையாவது செய்யறது எப்படி கடவுளுக்கு எதிரானதா இருக்க முடியும்?”
“உலகத் தோற்றத்துக்கு முன்பாகவே முன் குறித்திருக்கிறார் கடவுள். அவர் உனக்காக ஒரு நோக்கத்த வச்சிருக்காரு. அது என்னன்னு
தெரிஞ்சுக்கிட்டு செய்யறது தான் காலத்தையும் முயற்சிகளையும் வீணாக்காம உருப்படியா வாழறதுக்கு வழி.”
“ப்ராக்ட்டிக்கலா சொல்லுங்க.”
“இந்த உலகத்துல, நம்ம நாட்டுல, இந்த ஊருல உன்னை கடவுள் எதுக்கு வச்சிருக்கார்னு, போராடி ஜெபம் பண்ணித் தெரிஞ்சுக்கோ,
அப்புறமா அத நிறைவேற்றணும்னா என்ன செய்யணும்னு, கடவுள் கிட்ட கேளு, உன்னோட மூளையையும் யூஸ் பண்ணு.”
“சரி நேரம் ஆயிருச்சு, பிரசங்கம் முடியப் போவுது, மத்தத அடுத்த ஞாயித்துக்கிழம, வழக்கம் போல பிரசங்க நேரத்துல பேசிக்கலாம்.”
No comments:
Post a Comment