"ருசிக்க ருசிக்க மத்தவங்களுக்கு சமைச்சுப் போடுற சமையல்காரங்க, சாப்பாட்ட அனுபவிக்க முடியாதது மாதிரி;
லட்சக்கணக்குல கை வலிக்க ரூபாய் நோட்டுக்கள எண்ணி கணக்குப் போடுறவங்க, அதுல ஒரு ரூபாயக்கூட அனுபவிக்க முடியாதது மாதிரி;
நம்ம நாட்டு விடுதலைக்காகப் போராடுனவங்கள்ல பல பேரு விடுதலைய அனுபவிக்காமலேயே செத்துப் போயிட்டாங்க."
"அதுனால எதுவுமே செய்யாம சும்மாவே செத்துப் போயிரலாம்னு சொல்றியா?"
"எதைச் செய்தாலும் பலனை எதிர்பார்க்காம செய்யணும்னு நினைக்கிறேன்."
"அப்படின்னா நீ செய்ற எதுலயும் உண்மையும் தரமும் இருக்காதுன்னு சொல்ற."
"என்னை மட்டம் தட்டிப் பேசறதே உங்க பழக்கமாப் போச்சு. மோசே இஸ்ரவேல் மக்களோட விடுதலைக்காகப் போராடுனாரு,
ஆனா அவரு அந்த நாட்டுக்குள்ள போகாமலேயே போய்ச் சேந்துட்டாரு. காந்தி விடுதலையான இந்தியாவுல வாழ முடியல. அதத் தான் சொன்னேன்."
"இஸ்ரவேல் நாட்டுல மறுரூப மலையில மோசே இயேசுவோட பேசிக்கிட்டு இருந்தார். இன்னிக்கும் கரன்சி நோட்டுக்கள்ல காந்தி சிரிச்சுக்கிட்டு இருக்கிறார்."
"அப்படின்னா, சமூக சேவை செய்தா, ஊழியம் செய்தா நாம செத்ததுக்கு அப்புறம் தான் மத்தவங்க அதோட பலனை அனுபவிப்பாங்கன்னு சொல்றீங்களா?"
"நீ மக்கள் மேல அன்பு உள்ளவனா சேவை செய்தா, நீ உயிரோட இருக்கறப்போவே அந்த சேவைய அனுபவிக்கலாம். அப்புறமா அதோட பலனையும் அனுபவிக்க வாய்ப்பு இருக்குது.
மத்தவங்களுக்காக சேவை செய்த எல்லாருமே செத்துப் போகல, செத்துப் போகணும் அப்படின்னு அவசியம் இல்ல. நீ இருக்கற இடத்திலேயே மத்தவங்களுக்கு சேவை செய்யலாம். விடுதலைக்காகப் போராடலாம்."
"இந்தக் காலத்துல எல்லாம் போராட்டத்த யாருமே கண்டுக்க மாட்டாங்க. அதுல எந்த பயனும் இருக்கும்னு எனக்கு நம்பிக்கை இல்ல."
"அன்னா ஹசாரேயோட வயசுல பாதி வயசு கூட உனக்கு இல்ல, நீ இப்படி பேசலாமா? அவரு எல்லாரையும் சிந்திக்க வச்சுட்டாரு இல்லியா?"
"சிந்திச்சா மட்டும் போதுமா?"
"சிந்தனையில தானே செயல் துவங்குது. "
"விடுதலையப் பத்தி சிந்திக்க வச்சாலே போதும்னு சொல்றீங்க."
"முதல்ல உன் மனசுல விடுதலை இருந்தா, உன் வாழ்க்கையில விடுதலை இருக்கும். உங்கிட்ட இல்லாதத மத்தவங்களுக்குக் குடுக்க முடியாது. உன் மனசுல விடுதலை இருந்தாத் தான் மத்தவங்கள விடுதலையப் பத்தி மத்தவங்கள சிந்திக்க வைக்கலாம்."
"மனசுல விடுதலை வேணும்னா என்ன பண்றது?"
"உன்னோட மனசு சரியான உண்மைக்கு அடிமையா இருக்கணும். உம்மை சேவிப்பதே மெய்ச்சுயாதீனம்னு ஜெபப்புஸ்தகத்துல ஒரு வரி வருதே ஞாபகம் இருக்குதா?"
"கண்ண வித்துத் தான் சித்திரம் வாங்கணுமா?"
"தன்னோட உயிர இழக்கிறவன் தான் பிழைப்பான் அப்படின்னு இயேசு சொல்லியிருக்கறது உனக்குத் தெரியும் தானே?"
"அடிமையா இருக்கறது தான் விடுதலைன்னா விடுதலைக்கு அர்த்தம் என்ன?"
"நூறு சதவீதம் விடுதலைன்னு எதுவுமே கிடையாது. விடுதலை கிடைச்சு அரை நூற்றாண்டுக்கு மேல ஆயிருச்சுன்னு சொல்லிட்டு நீ ரோட்டுக்கு நடுவுல நீ நடக்க முடியுமா? சட்டத்துக்குக் கீழ்ப்படியலன்னா, எல்லாரும் விடுதலையோட நடமாடுறோம்னு சொல்லிட்டு சொதப்பிட்டு இருப்பாங்க."
"அப்போ விடுதலைப் போராட்டம் தான் விடுதலைங்கறீங்க. விடுதலை கிடைச்சுட்டுதுன்னா எல்லாமே சலிப்பா ஆயிரும்னு நினைக்கிறேன்."
"போராட்டம் தானே நாம உயிரோட இருக்கறோம் அப்படிங்கறதுக்கு ஆதாரம்."
"ஆமா விடுதலைய விட உயிர் தான் முக்கியம்."
"இதப் பத்தி எனக்கு மாற்றுக்கருத்து இருக்குதே?"
"அடுத்த மாசம் பாக்கலாம். இப்போ டைம் ஆயிருச்சே?"
No comments:
Post a Comment