மிஸ்ட்டர் சன்டே
”ப்ளாஸ்ட்டிக் பைகளுக்குத் தடைன்னு ஒரு பக்கம் கத்துறாங்க. ஆனா ப்ளாஸ்ட்டிக் பைகள உற்பத்தி பண்ற தொழிற்சாலைகள மூட மாட்டிக்கிறாங்க. ஏதேன் தோட்டத்துல பழத்த வைப்பானேன்... சாப்பிடாதேன்னு சொல்வானேன்... மனுஷனப் படைச்சதுக்காக வருத்தப்படுவானேன்.”
“ஏன் டாஸ்மாக், புகையிலை வியாபாரம் பத்தியும் சொல்லியிருக்கலாமே? நீ சொன்ன ப்ளாஸ்ட்டிக் பை, தொழிற்சாலை விஷயத்துல அரசியலும் பொருளாதாரமும் இருக்கு. ஆனா ஏதேன் கனி, தடை விஷயத்துல அதையெல்லாம் விட முக்கியமான ஆன்மீகம் இருக்கு.”
“எல்லாத்துக்கும் இப்படியே ஆன்மீக விளக்கம் குடுத்து என்னோட வாய மூடிருவீங்க. நீங்களே சொல்லுங்க.”
“உனக்கு இருக்கற அடிப்படை அறிவப் பயன்படுத்தினா நீயே வித்தியாசத்தக் கண்டுபிடிச்சுடலாம்.”
“என்னிய மட்டம் தட்டுறதே உங்க வேலையாப் போச்சு.”
“உன்னோட மட்டத்த உயர்த்தலாம்னு தான் இப்படி உன்னை சீண்டி உடுறேன்.”
“சரி, இதைச் செய்யாதே, அதைச் செய்யாதேன்னு தடை போடறத விட, அதையும் இதையும் செய்யறதுக்கு வாய்ப்பே இல்லாமப் பண்ணிட்டா நல்லா இருக்குமே! வீட்டுல டப்பா டப்பாவா ஸ்வீட்ட ஸ்டாக் வச்சுட்டு, ‘ஸ்வீட் சாப்பிடாதே’ன்னு சின்னப் பிள்ளைங்களுக்கு தடை போடறவங்க கொடூர பெற்றோர் தானே?”
“அதே பெற்றோர் தானே, சாப்பாடு, புத்தகம் எல்லாம் வச்சிருக்காங்க. அதுக்காக நீ இப்படி கேள்வி கேக்கலியே?”
“நமக்குப் பிடிச்சதுக்கு மட்டும் தானே தடை போடுறாங்க?”
“அப்படின்னா 24 மணி நேரமும் சாப்பிட்டுக்கிட்டு, புத்தகம் படிச்சுக்கிட்டே இருந்தா தடை போட மாட்டாங்கன்னு சொல்றியா?”
“குழப்பம் தானே உங்கள் வழக்கம்?”
“அளவுக்கு மீறினா அமிர்தமும் நஞ்சு.”
“தடை இருக்கற விஷயத்துல அளவு முக்கியமில்ல.”
“மறுபடியும் நீ ஸ்மார்ட்ன்னு காட்டிட்டே.”
“எல்லாம் உங்க கூட பழக ஆரம்பிச்சதுக்கு அப்புறம் தான்.”
No comments:
Post a Comment