Wednesday, February 1, 2012

தொடரும் கொல வெறி

போன வாரம் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் ஒரு வடகிழக்கிந்திய வாலிபனின் கருப்பு டீ ஷர்ட்டில் Why this Kkolaveri என்ற வெள்ளை வாசகத்துடன் ஒரு சிவப்பான பெண்ணின் படமும் இருந்தது.

இன்றைய ஹிந்து பத்திரிக்கையில் ஒரு கார்ட்டூன்...

டிஸ்டனஸ்-ல மூனு மூனு கிவ்வு மி ஓட்டு டேக்கு மூனு என்று ஒரு அரசியல்வாதி பாடுகிறார்.

இன்னும் மூன்று அரசியல்வாதிகள் இதைப் போல பாடுகிறார்கள், இந்தியக் குடிமகன் வொய் திஸ் கொலவெறி என்று பாடுகிறார்.

கொலவெறி பாட்டின் வெற்றி பலவித பதில்களையும் உணர்வுகளையும் உருவாக்க, ஒரு விஷயம் புரிந்தது.... வியாபாரமும் விளம்பரமும் இருந்தால் தான் கடவுள் கூட பிரபலமாகிறார். சோனி கம்பெனியின் விளம்பரம் தான் இந்தப் பாட்டையும் அவர்கள் வியாபாரத்தையும் பெருக்கியிருக்கிறது.

இந்தப் பாட்டுல அப்படி என்ன இருக்கு? என்று பலர் சீறுகிறார்கள். ஆம் இதைவிட சிறந்த வரிகளும் இசையும் உள்ள பல பாடல்கள் இத்தனை பிரபலமாகவில்லை என்பதுவும் உண்மை. இசை உலகிலும் ஊடகத்துறையிலும் உள்ள சில பெரியவர்கள் இதை மதிக்கவில்லை. ஆனால் அதில் சிறிது பொறாமையும் இருப்பதாக எனக்குத் தோன்றுகிறது. என்னுடைய இசை / பாட்டு பிரபலமாகாமல் இந்த சாதா ஃப்ளாப் சாங் இப்படி ஹிட் ஆகிவிட்டதே என்று மனதின் ஆழத்தில் அவர்கள் நினைக்கலாம். எத்தனையோ நல்ல பாட்டுகள் எல்லாம் நெட்ல, யூ ட்யூப்ல, ஃபேஸ் புக்ல இருக்குது இது மட்டும் ஏன் ஃபேமஸ் ஆச்சு? இதெல்லாம் பெரிய இடத்து மக்கள் செய்த விளம்பரம் என்றான் இன்னொரு நண்பன். இதிலும் உண்மை இருக்கிறது.

உண்மையைச் சொன்னால் எனக்கு இந்தப் பாடல் பிடித்திருக்கிறது. வியாபாரிகள் தான் இந்த உலகத்திலேயே அதிக கற்பனைத்திறன் மற்றும் ஆக்கத்திறன் உள்ளவர்கள் என்று ஒரு பெரியவர் எழுதியிருக்கிறார்.

ஒரு உதாரணம் சொல்கிறேன், என் நண்பன் பீட்டர் உலகத் திரைப்படங்களை எனக்கு அறிமுகம் செய்து உடன் இருந்து கமெண்ட்களும் விளக்கங்களும் சொல்லிக் கொண்டிருப்பான். Anything for her http://www.imdb.com/title/tt1217637/ என்ற ஃப்ரெஞ்சுப் படத்தை ஆங்கில சப் டைட்டில்களுடன் காட்டி சில டெக்னிக்கல் விஷயங்களை அறிமுகப்படுத்தினான். ஆனால் மறுநாள் அதே படத்தின் ஹாலிவுட் வடிவத்தைக் காட்டினான். The next Three days http://www.imdb.com/title/tt1458175/ என்ற அந்தப்படம் அதிக பட்ஜெட், அதிக செலவு, பெரிய கதாநாயகனுடன் ஒரிஜினலை விட கவர்ச்சியாக இருந்தது. காரணம்....?

கலைஞனுக்கு அது பெருமை. வியாபாரிகளுக்கு அது பிழைப்பு. பெருமை சோறு போடாது. வியாபாரம் படுத்தால் வியாபாரியின் குடும்பம் பட்டினியாக இருக்கும். ஆகவே தான் கலை, வியாபாரம் ஆகியவை ஒன்றுக்கொன்று முரண்படுகிறது. கவர்ச்சி தான் பெரும்பான்மையான பொதுமக்களைக் கட்டிப் போடுகிறது. கவலையை மறக்க கலையைத் தேடும் மக்களுக்கு நூறு சதவீத கலையைக் கொடுத்தால் அது வேலைக்கு ஆகாது.

கொலவெறி பாட்டின் கருத்தில் பல காதல் தோல்வி பாடல்கள் வந்திருக்கின்றன, அவைகளைக் கலையாக, க்ளாசிக்கல் என்று நாம் ரசிக்கலாம். ஆனால், சட் என அனைவரையும் கட்டிப் போட்ட இந்தப் பாட்டில் வியாபாரம் இருந்தாலும் பாராட்டப்படும் அம்சங்கள் இருக்கின்றன.

1. உலகம் எங்கும் புரியும் வகையில் ஆங்கில வார்த்தைகளே முழுக்க முழுக்க இருக்கின்றன.
(கொலவெறி என்பதற்கு அர்த்தம் தேடிய பலருக்கு தமிழை அறிமுகப்படுத்திய பெருமை இந்தப் பாடலின் பின் இருக்கும் தமிழர்களுக்கு உண்டு - ஒரு ஆங்கில தினசரி அதற்கு Urge to kill என்று அர்த்தம் கொடுத்து புண்ணியம் கட்டிக் கொண்டது)

2. தமிழகத்து தாள வாத்தியம் மற்றும் ஊது வாத்தியம் ஆகியவற்றை மிகக் கவர்ச்சியாகப் பயன்படுத்தியது உலக அளவில் உண்மைத் தன்மை மற்றும் உலகத் தன்மையைக் கொடுத்திருக்கிறது.

3. மேற்கத்திய இசையின் அம்சங்களும் இதில் இருப்பது உலகத் தன்மையைக் கொடுத்திருக்கிறது.

4. எல்லா ஆண்களும் உடனடியாக தங்களை அடையாளப்படுத்திக் கொள்ளும் காதல் தோல்வி என்னும் கரு தான் இதன் வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கின்றது.

5. அண்ணே நம்மளும் கொலவெறி மாதிரி பாட்டு ஒண்ண ஜாலிய ரெக்கார்டு பண்ணணும் என்றான் என் நண்பன் ஒருவன். அவன் பாட்டு எழுதுவான் (நன்றாகவே) கீ போர்ட் வாசிப்பான் (சுமாருக்கும் மேலாக). இப்படியாக பலரது ஆக்கத்திறனைத் தூண்டியதுவும், வலையுலகத்தின் வல்லமையை உலகத்துக்குக் காட்டியதுவும் இந்தப் பாடலின் மிக முக்கிய சேவை என்று சொல்லலாம்.

ரிலையன்ஸ், மெகா மார்ட், மோர் என்று பல மால்களும், சூப்பர் ஹைப்பர் மார்க்கட்களும் வந்தாலும் பெட்டிக்கடைகளும் அண்ணாச்சிக் கடைகளும் நம்பிக்கையுடன் திறந்து வைக்கப்படுகின்றன. கொல வெறியைக் கண்டு எரிச்சல்படாமல் கல வெறி அணையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

அன்று ஒரு நாள் ஒரு பெங்களூர் சர்ச் வாலிபர்கள் தமிழ்நாட்டுக்கு ஜாலியாக வந்துக் கொண்டிருந்தார்கள். ரகளை ரசிக்கும்படி இருந்தது. இரவு உணவுக்கு முன் பாடிய ஜெபப்பாடல் மெய்சிலிர்க்க வைத்தது. ஆனால் காலையிலேயே ஒருவரை ஒருவர் கலாய்த்துப் பாடிய பாடல்கள் எனக்கு மலைப்பைக் கொண்டு வந்தது. உடனடியாக ஒவ்வொருவர் பெயரையும் வைத்து பாட்டுக் கட்டி பாடிய அந்தக் குழுவின் தலைவன் கலக்கிக் கொண்டிருந்தான். ரயிலின் பக்கவாட்டு சுவரில் தாளம் தட்டிய இன்னொருவன் கண்டிப்பாக டிஜிட்டல் உலகத்து டிரம்ஸ் மூலம் தன் திறமையைக் காட்டுவான். கொல வெறி அளவுக்கு உலகப்புகழ் பெறாவிட்டாலும், அவன் உலகத்தில் அவனுக்கு வெற்றி தான்.

3 comments:

enock777 said...

a different thinking... they made a difference anyway we gotta accept it. but it induces and plants a word URGE TO KILL which is very much negative and a drunken feel which will become a new trend and style for the younger generation.

Unknown said...

I still doubt it's as popular as it appears to be. Could it be hyped by 'Paid News' Advertisement

johnny said...

எது எப்படியோ அத பாட்டுன்னு சொன்னா அத ஜீரணிக்க முடியல