Thursday, December 8, 2011

கல வெறி !

வை திஸ் கொல வெறி டி யின் வெற்றிக்குக் காரணம் என்ன தெரியுமா? தனுஷுக்கே தெரியாத காரணங்கள் இருக்கலாம். ஆனால் அதை ஆராய்ச்சி செய்வது வெட்டி வேலை என்று நினைக்காமல், அதனால் நாம் கற்றுக் கொள்ளுவது என்ன? நமக்கு என்ன கிடைக்கும்? என்று நினைத்தால் சில பயனுள்ள சிந்தனைகளும், மாற்றங்களும் ஏற்படும் என்பது என் உறுதியான எண்ணம்.

நேரம் கிடைக்கும் போதெல்லாம் ஒவ்வொரு கருத்தாக எழுத நினைத்திருக்கிறேன். நான் குறிப்பு எடுத்து வைத்திருக்கும் எல்லா கருத்துக்களையும் எழுதி முடிக்கும் வரைக்கும் அந்தப் பாடல் பிரபலமாக இருக்கும் என்ற நம்பிக்கையில் துவங்குகிறேன்.

முதலாவதாக, இந்தப் பாடலின் உலகளாவிய பிரபலத்துக்கு முக்கியக் காரணம், பின்நவீனத்துவம் தான்.
பின் நவீனத்துவத்தைப் பற்றி எனது சுருக்கமான விளக்கத்தைக் கொடுத்துவிட்டு, பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் அவர்களின் விளக்கத்தையும் கொடுக்க விரும்புகிறேன்.

யாரும் எதையும் எப்போதும் எப்படியும் எதற்காகவும் யாருக்காகவும் எங்கேயும் செய்ய முடியும் என்பது ஒரு சுருக்கமான விளக்கம் ஆகும்.
================================================================================================
பின் நவீனத்துவம் பற்றி இன்னும் சுருக்கமாக.

புரூஸ் லீ நவீனத்துவம். அவர் சண்டை போடுகிறார். ஜாக்கிச்சான் பின்நவீனத்துவம் எப்ப்டி சண்டை போடுவதென காட்டுகிறார். சண்டையை ஒரு ஆட்டமாக மாற்றுகிறார்

உத்தம புத்திரன் நவீனத்துவம். இருபத்து மூன்றாம் புலிகேசி பின் நவீனத்துவம்

பின் நவீனத்துவம் இன்றைய வாழ்க்கை நோக்கில் இயல்பாகவே உள்ளது. ரீமிக்ஸ் பாடல்கள் ஓர் உதாரணம். நாம் நிகழ்ந்தவற்றை ஏன் நிகழ்ந்தது எபப்டி நிகழ்ந்தது என்று நோக்குகிறோம். மீண்டும் நிகழ்த்திப் பார்க்கிறோம். மாற்றியமைக்கிறோம். கிண்டல்செய்கிறோம். விரிவாக்கிப்பார்க்கிறோம்.

பின்நவீனத்துவ சூழல் உலகளாவியது. பொருளியல் சார்ந்து. ஊடகங்கள் சார்ந்து இன்றைய உலகத்தில் பொதுமைகள் அதிகம்

ஆகவே பின்நவீனத்துவச் சூழலும் உலகளாவியதே

ஆனால் பின்நவீனத்துவம் எங்கும் ஒரேவகையானது அல்ல. அந்த ‘டிரெண்ட்’ ஒன்றுதான். வெளிப்பாடு ஒவ்வொரு நாட்டுக்கும் ஒவ்வொரு வகை. அதற்கு அந்தப் பகுதியின் கலாச்சாரம் வாழ்க்கைமுறை என எத்தனையோ காரணங்கள்

பின்நவீனத்துவம் பற்றிய மிக முட்டாள்த்தனமான பேச்சே இது ஒரிஜினல் பின் நவீனத்துவம் இல்லை அதுதான் என ஐரோப்பாவையோ அமெரிக்காவையோ காட்டுவது. அப்படிசொல்லக்கூடாது என்றுதான் பின்நவீனத்துவம் வாதிடுகிறது

ஜெயமோகன்

(http://www.jeyamohan.in/?p=245)

விளக்கமாகத் தெரிந்து கொள்ள விரும்புகிறவர்கள் இதைப் படியுங்கள் :

http://www.jeyamohan.in/?p=259

================================================================================================

தனுஷ் என்னும் நடிகரே ஒரு பின் நவீனத்துவ அடையாளமாக இருக்கிறார். கதாநாயகர்களுக்கென்று இருந்த பெரும் வரையறையை உடைத்தது தனுஷின் திரையுலகப் பிரவேசம் ஆகும்.


தெரிந்தோ தெரியாமலோ, விரும்பியோ விரும்பாமலோ பின் நவீனத்துவத்தை நாம் ஏற்றுக்கொண்டும் சகித்துக் கொண்டும், செயல்படுத்திக் கொண்டும் இருக்கிறோம். இப்படிப்பட்ட பிரம்மாண்டமான வெற்றிகளைக் கண்டு பிரமிக்கிறோம்.

தனுஷ் செய்தது பிரபலமாகிறது, சாதாரணமான சிலர் இதைப் போல செய்வது ஏன் பிரபலமாகவில்லை என்று கேட்டால், அதிலும் சில அம்சங்கள் காரணங்களாக இருப்பதை நாம் கண்டு கொள்ள முடியும். அவற்றைப் பற்றியும் நாம் நேரம் கிடைக்கும் போது பார்க்கலாம்.

ஆகவே இப்படிப்பட்டவர்கள் தான், இப்படித்தான், செய்ய வேண்டும் என்ற வரி உடைக்கப்பட்டு, கொலை வெறி போன்ற பாடல்கள் வெற்றி பெறுவது நம்மைப் போன்ற சாதாரணர்களுக்கும், அரைகுறைகளுக்கும் நிச்சயமாகவே நம்பிக்கையையும், குறுகுறுப்பையும் தருகிறது. ஏன் நாம் இதைப் போல முயற்சி செய்யக்கூடாது என்று நினைத்த பலர் மொபைல் ஃபோனில் படம் எடுத்து யூ டியூபில் படம் காட்டிக் கொண்டிருக்கிறார்கள். உலக திரைப்பட வரலாற்றிலேயே திரைக்கு வருவதற்குப் பல மாதங்களுக்கு முன்பாகவே உங்கள் யூ டியூபில் படங்கள் வந்துவிடுகின்றன. சந்தேகம் இருந்தால் பாராநார்மல் ஆக்டிவிட்டி என்ற படத்தைப் பற்றி வலையில் தேடிப்பாருங்கள்.

http://en.wikipedia.org/wiki/Paranormal_Activity

எனது வேலைகளுக்கு நடுவில் ச்சூ சூ மாரி பாடலையும் அனல் மேலே பனிபோலே பாடலையும் நான் ரீமிக்ஸ் செய்து ரசித்துக் கொண்டேன்.

டிஜிட்டல் புரட்சியும், ஓப்பன் சோர்ஸ் இயக்கமும் நேர்மையாக அனைவரும் தங்கள் திறமையை வெளிப்படுத்த வாய்ப்புக்களைக் கொடுத்திருக்கின்றன.

ஓ கே உங்க கல வெறியைக் காட்டுங்க.

நானும் காட்டுறதுக்கு முயற்சி செய்யுறேன்.

4 comments: