இந்த வலைப்பூவை, என்னை எழுது எழுது என்று நச்சரித்துக் கொண்டிருக்கும் நண்பன் X அவர்களுக்கும் என்னை எழுத்துலகில் ஊக்கப்படுத்திக் கொண்டிருக்கும் கார்த்திகா ராஜ்குமார் மற்றும் ப்ருத்வி அவர்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்.
Monday, August 29, 2011
மிஸ்ட்டர் சண்டே.
“இன்னிக்கு காலைல நான் ஃபாஸ்ட்டிங், அதனாலத் தான் ஆயாசத்துல தூங்கிட்டேன்”
“சாப்பிட்டா கிரக்கத்துல தூங்குவே. சாப்பிடாட்டி ஆயாசம். ஏதோ ஏன் தூங்கறன்னு
யாரோ கேட்ட மாதிரியும், நீ எப்பவுமே தூங்காத ஆள் மாதிரியும் பேசறே?”
“ஏதோ காரணம் சொன்னா, கால வாரி உடுறீங்களே?”
“அது சரி எதுக்காக ஃபாஸ்ட்டிங்? அன்னா ஹசாரேக்கு சப்போர்ட்டா?”
“அன்னா ஹசாரேக்கு நான் சப்போர்ட்டு தான். ஆனா இன்னைக்கு காலைல
வீட்டுக்காரி உப்புமா கிண்டி வச்சுட்டா. அதுனாலதான் எதிர்ப்பக் காட்டறதுக்காக
உண்ணாவிரதம் இருக்கேன்.”
”அவராவது ஊழல ஒழிக்கறதுக்காக உண்ணாவிரதம் இருக்கறார். நீ உப்புமா
பிடிக்கலன்னு உண்ணாவிரதம் இருக்கற. எது எதுக்கு என்ன செய்யணும்னு
விவஸ்தையே இல்லாம போயிடுச்சு.”
“ஃபாஸ்ட்டிங் நல்லது தானே? ஃபாஸ்ட்டிங் போட்டா, ஜெபத்துக்கு ஃபாஸ்ட்டா பதில்
வரும்-னு தானே வேதம் சொல்லுது?”
”இப்பத்தான் உப்புமாவ எதுத்து ஃபாஸ்ட்டிங்னு சொன்னே, அதுக்குள்ள ஜெபம்
வேதம்னு பல்ட்டி அடிக்கிற. ஏம்ப்பா இன்னும் தூக்கத்துல இருந்து முழிச்சுக்கலியா?”
"மத்தவங்க கவனத்த நம்ம பக்கம் திருப்பறதுக்குத் தான் உண்ணாவிரதம்
இருக்கறோம். கர்த்தர் நம்மளத் திரும்பிப் பாக்கணும்னா ஃபாஸ்ட்டிங் தானே
பெஸ்ட்டு?"
”அதெல்லாம் சரி கர்த்தர் பேசறத, அவர் வேதம் சொல்லறதக் கேக்காம நீ உன்னோட
வழியிலேயே போயிட்டு இருக்கறப்போ, அவரு உன்னோட கவனத்த திருப்பறதுக்காக
இந்த மாதிரி எதையாவது செய்தார்னா என்ன ஆகும் தெரியுமா?”
“கர்த்தர் கூட ஃபாஸ்ட்டிங் பண்ணுவாரா?”
“இல்ல, உன் கவனத்தத் திருப்பறதுக்காக தலையில ஒரு குட்டு வைப்பார்.”
“நீங்க ஃபாஸ்ட்டிங் உண்ணாவிரதம் இதுக்கெல்லாம் எதிரியா? நீங்க ஸ்பிரிச்சுவலாவே
இல்ல.”
“ஆமா ஆமா, இயேசு ஃபாஸ்ட்டிங் பண்ணுறப்போ விளம்பரம் பண்ணிட்டுத்தான்
செய்யச் சொன்னாரோ?”
“என்ன சொன்னாலும் எதையாவது ஒரு வசனத்தச் சொல்லி மடக்கிப்புடறீங்களே?”
“வசனத்த ஒழுங்காப் படிச்சு அது சொல்றபடி நடந்தா நீ மடக்கலாம். அல்லது மடங்க
வேண்டியது தான்”
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment