“ உனக்கு ஓட்டுப் போடத் தகுதி இருக்குதா? ஒழுங்கா சங்கப்பணம் கட்டியிருக்கியா?”
”நான் ஓட்டுப் போடற அளவுக்கு குறைந்த பட்ச சங்கப் பணம் கட்டல. என்னால ஓ ட்டுப் போடவும் முடி யாது ”
“நீ சங்கப்பணம் சரியா கட்டாம இருந்தாக்கூட உனக்காக சங்கப் பணம் கட்டறதுக்கு சிலர் இருக்கறாங்களே?”
“கர்த்தர் கணக்குப் பாக்காம குடுக்கறார். நானும் கணக்குப் பாக்காம அவருக்குக் குடுக்கறேன். இவங்க என்ன என்னோட சங்கப் பணம், காணிக்கைப் பணத்தப் பத்தி கணக்கு வைக்கறது? நான் ஓட்டுக்காக காணிக்கை குடுக்கல.”
“இப்படி உன்ன மாதிரி நல்லவங்க ஓட்டுப் போடாம, தேர்தல்ல நிக்காம இருந்தா நம்ம திருச்சபை உக்காந்தே போயிரும் ”
“நான் தேர்தலுக்கு எதிரி. பைபிள்ல இருக்கற மாதிரி ஒரே மனதோட, சீட்டுப் போட்டு தேர்ந்தெடுக்கலாமே?”
“அப்படியே நடந்தாலும் யார் பேருல சீட்டுப் போடணும்னு ஓட்டு எடுக்க வேண்டியிருக்கும்.”
“மோசே, தாவீது, சாமுவேல், யோசுவா, 12 சீஷர்கள் அப்படின்னு கர்த்தர் தேர்ந்தெடுத்த மாதிரி இப்பவும் கர்த்தரே தேர்ந்தெடுக்கட்டும்னு விட்டுறலாமே.”
“சும்மா ஜெபம் மட்டும் செய்துட்டு, நிர்வாகம் தானாவே நடக்கும், அல்லது கடவுள் நடத்துவார்னு சொன்னா அது முட்டாள்த்தனம் தானே?”
“டயோசிசன்ல எலக்ஷன் வேணுமா? வேணாம்னு சொல்றீங்களா?”
“நான் வேண்டாம்னு சொன்னா நிறுத்திடுவாங்களா? அல்லது வேணும்னு சொன்னா நீ ஓட்டுப் போட்டுறப் போறியா? இருக்கற நல்லதுல குற்றம் கண்டுபிடிக்காம, இருக்கற மோசடிகள்லயும் ஏதாவது நல்லது நடக்குதான்னு பாத்துட்டு, நீ செய்ய வேண்டிய கடமைய ஒழுங்கா செய்தா போதும்.”
”அன்னா ஹசாரே மாதிரி ஏன் யாருமே நம்ம திருச்சபையில எழும்ப மாட்டேங்கறாங்க? அல்லது கர்த்தரே பாத்து மோசே மாதிரி ஒரு தலைவன எழுப்புனா என்ன?”
“மோசே மாதிரி இந்தக் காலத்துல கர்த்தரே அப்பாய்ண்ட் பண்ணுன தலைவர்கள் இருந்தாக்கூட, எதிர்க்கட்சின்னு ஒண்ணு இருக்கத்தான் செய்யும். கண்டிப்பா இருக்கணும். அப்பத்தான் தலைவர்கள் ஒழுங்கா இருப்பாங்க. சர்வாதிகார ராஜாக்களுக்கே தீர்க்கதரிசிகள் எதிர்க்கட்சிகளோட வேலை செய்திருக்காங்க.”
”தேவனுடைய இருதயத்துக்கு ஏற்ற தாவீது மாதிரி தலைவர்கள் தான் இப்போ திருச்சபைத் தலைமைப் பதவியில, அரசியல்ல இருக்காங்கன்னு நினைக்கிறேன். தாவீது மாதிரி தப்புத் தண்டா பண்ணுனாத்தான் தேவனுடைய இருதயத்துக்கு ஏத்தவங்களா இருக்க முடியும். அப்படித்தானே? ”
“பரிசேயர் மாதிரி தாங்கள பரிசுத்தவான்கள்னு சொல்லிக்கிறவங்க சரிப்பட மாட்டாங்க. அப்படியே பாவம் பெருகுனாத்தான் கிருபை பெருகும்னு சொல்ற, மொத்த வியாபாரிகளும் ஒத்து வரமாட்டாங்க. 51 ஆம் சங்கீதத்து தாவீது மாதிரி தன்னோட உண்மையான தன்மைய மறக்காம ஒவ்வொரு நாளும் தேவனுடைய இருதயத்துக்கு ஏத்தவனா மாறணுமேன்னு தினசரி ரீ சார்ஜ் பண்ணுற பக்திமான்கள் தான் தேவை. அப்படியே மக்கள மதிச்சு, பாரபட்சம் பாக்காம, மனுஷங்கள் நிர்வாகம் பண்னுற திறமையானவங்க வேணும்.”
“நேர்மையும் திறமையும் சேர்ந்து இருக்கற தலைவர்கள் கிடைக்கவே மாட்டாங்க. அப்படி தலைவர்களையும் தொண்டர்களே போட்டுத் தள்ளிருவாங்க.”
“நூறு சதவீதம் பெர்ஃபெக்ட் மனுஷனோ தலைவனோ இல்ல. ஆனால் நானும் பெர்ஃபெக்ட் இல்ல மத்தவங்களும் பெர்ஃபெக்ட் இல்ல. கர்த்தர் தான் நம்மள எல்லாம் பெர்ஃபெக்டா மாத்தணும் அப்படிங்கற மனப்பாங்கோட, மாற்றத்துக்காக பாடுபடற தலைவர்கள், சபை மக்கள் இருந்தா, நம்ம திருச்சபையே பரலோகத்தோட ட்ரைலர் மாதிரி இருக்கு ம் ”
“எப்போ படம் போடுவாங்க?”
“கண்ணத் திறந்துக்கோ, அப்பத்தான் படம் தெரியும்.”
“கண்ண மூடினாத்தானே நீங்க தெரிவீங்க?”
No comments:
Post a Comment