Sing To The King
சிங் டு த கிங். தமிழகத்தில் முதல் முறையாக, கிறிஸ்தவப் பாடகர்களுக்கான பிரம்மாண்டமான போட்டி. கிறிஸ்தவத்தின் பெரும் அதிசயத்தை இவர்கள் நிகழ்த்தியிருக்கிறார்கள். பல பிரிவுக் கிறிஸ்தவர்களை ஒன்றாகக் கூட்டியிருக்கிறார்கள். மற்ற நிகழ்ச்சிகளின் பிரம்மாண்டம் இல்லாவிட்டாலும், இத்தனை முயற்சி எடுத்து இத்தனை பேரைப் பாட வைத்தது பாராட்டுக்குரியது. முதலாவதாக இந்த நிகழ்ச்சியைத் தொடங்கியவர்கள் என்ற பெருமையுடன் இதை முதன்மையானதாகத் தொடர வேண்டும் என்ற பொறுப்பும் இவர்களுக்கு அதிகம் உண்டு. (இன்னொரு கிறிஸ்தவ டிவியில் இதைப் போலவே ஒரு நிகழ்ச்சியைப் பற்றிய அறிவிப்பைப் பார்த்தேன்).
செலக்டட், ரிஜக்டட், வெய்ட்டிங் லிஸ்ட் என்று மூன்று பிரிவாக முடிவுகள் உடனுக்குடன் சொல்லப்பட்டன. வெய்ட்டிங் லிஸ்ட் என்பது புதுமையான அம்சம். முதலில் தொடங்கப்பட்ட இந்நிகழ்ச்சி முதன்மையாகவும் தொடர் வாழ்த்துகிறோம். இந்த முதன்மை தொடர சில ஆலோசனைகள்:
1. இன்னும் அதிக விளம்பரத்துடன் உள்ளூர் நிகழ்ச்சிகள் பொதுமக்களும் பங்குபெறும் வகையில் வைத்தால் நல்லது. பல ஊர்களில் இந்த நிகழ்ச்சி ரகசிய வருகை போல நடந்து முடிந்துவிட்டது.
2. பல பிரிவுகளில் போட்டிகள் நடத்தப்பட்டால், சுவராசியமாக இருக்கும். கிறிஸ்தவத்தின் தனித்தன்மையான பாடகர் குழு, நாட்டுப்புறப் பாடல்கள், கர்நாடக இசை, மெல்லிசை போன்ற வகைகள் நிகழ்ச்சிக்கு இன்னும் சுவை கூட்டியிருக்கும்.
3. சொந்தமாகப் பாடல் இயற்றுதல், மெட்டுப் போடுதல் போன்றவற்றையும் உற்சாகப்படுத்துவது ஆரோக்கியமான, ஆக்கத்திறனுள்ள கலைஞர்களை உருவாக்குவதுடன், தமிழ்க்கிறிஸ்தவ உலகத்தின் ரசிப்புத் தன்மையையும் மாற்றிவிடும். வாய்ப்புக் கிடைக்காமல் குமுறிக்கொண்டும், அடங்கிப் போயும் இருக்கும் கலைஞர்களின் பட்டியலைத் தயாரித்தால் நான் பலரது பெயரைத் தரமுடியும்.
1 comment:
மேலும் ஒரு கருத்து....
ஆண், பெண் என தனியாக குரல் போட்டி வைத்தால் நன்றாக இருக்கும்...
சிறந்த ஆண் குரலுடன் போட்டி போடும் ஒரு சுமாரான பெண் குரல் சிறந்ததாகவே மற்றவர்களுக்கு தெரியும்....
பல பாடல் போட்டியில் இதனால் பெரும் குழப்பம் எற்பட்டுள்ளது....
Post a Comment