Sunday, November 21, 2010

சத்யம் டிவி.

சத்யம் டிவி.

பலரது பலகாலத்து எதிர்பார்ப்புக்குப் பின் எதிர்பாராத வகையில் நகர்ந்து கொண்டிருக்கின்றது சத்யம் டிவி. இந்த சானலைப்பற்றிய பல கிசு கிசுக்கள், புரளிகள், விமர்சனங்கள் வந்தாலும் ஒரு குழப்பம் பலருக்குத் தீராமல் இருக்கின்றது. இது செக்யூலர் ந்யூஸ் சானலா, அல்லது கிறிஸ்தவ சானலா? தென் தமிழகத்து கிறிஸ்தவர்களின் காணிக்கை கொடுக்கும் தன்மை தான் பல ஊழியங்களை வாழவும் தாழவும் வைத்துக் கொண்டிருக்கின்றது. திருநெல்வேலி கதீட்ரலில் ஒரு புதுவருட ஆராதனையில் சீக்கிரமாகவே போய் உட்கார்ந்திருந்தேன். இரு வயதானவர்கள் பேசிக்கொண்டிருந்தது என் காதில் விழுந்தது. “இந்த ஆளு ஃபுட் பால் விளையாட்டு நடத்தறதுக்கா காணிக்கை குடுக்கிறேன்?” பிரபல ஊழியரின் புதுமையான ஊழிய முயற்சி விவாதிக்கப்படுவது தவிர்க்க முடியாதது. காணிக்கை கொடுப்பவர்கள், அதுவும் பெரும் தொகையைக் காணிக்கையாகக் கொடுப்பவர்கள் ஊழியத்தின் போக்கைத் திருப்புவது ஒரு துரதிருஷ்ட்டவசம் தான் (உண்மையான ஊழியங்களில்). இப்படிப்பட்ட வேதனைகள் எல்லா ஊழியர்களுக்கும் உண்டு. அதே போல பல லட்ச ரூபாய் செலவில் ஒரு பாடல் டிவிக்காக படமாக்கப்பட்டது. ஒரே நாள் ஒளிபரப்பப்பட்ட பின் தடை செய்யப்பட்டது. ஏனென்றால் அந்தப் பாட்டில் ”வாலிபப்பிள்ளைகள் மேலே ஒண்ணுமே போடாம டான்ஸ் ஆடியிருக்காங்க” என்று கோபத்தில் கொதித்தார் அந்த டிவி நிகழ்ச்சியின் தயாரிப்பாளரான ஊழியரைத் தாங்(க்)கும் ஒரு பெரும் பணக்காரர். அவரைப் போன்ற பலரது பிரஷ்ஷரால் அந்தப் பாடல் கைவிடப்பட்டது. விசாரித்ததில் சென்னைப் பெண்கள் டான்ஸ் ஆடிய அந்தப் பாடலில் பெண்கள் மேலே துப்பட்டா போடவில்லையாம். நிகழ்ச்சிக்குப் (அதாவது ஊழியத்துக்கு) பணம் கொடுப்பவர்களும் அவர்கள் தான், அதை வரவிடாமல் நஷ்ட்டத்தை ஏற்படுத்துபவர்களும் அவர்கள் தான். பாவம் ஊழியர்கள். அதிலும் பரிதாபம் பெரும் ஊழியர்கள்.

சில நாட்களுக்கு முன்பு ஒரு கலைத்துறைப் பிரபலத்தை சந்திக்க வேண்டியிருந்தது. அவரது செல்ஃபோனில் மோகன் அண்ணன் படம் ஸ்க்ரீன் சேவராக இருந்தது. அவர் திடீரென்று சொன்னார், ”சத்யம் டிவி சீக்கிரம் நின்னு போகணும்” ”ஏன் அப்படி சொல்றீங்க?” என்றேன். ”அப்பத்தானே அது முழுசா கிறிஸ்தவ சேனலா வரும்?” என்றார்.

வாழ்க மீடியா ஊழியங்கள்!!!

No comments: