Sunday, August 17, 2008

Celebrate with a purpose

18 August 2008

Celebrate with a purpose!

In the first month you are to eat bread made without yeast, from the evening of the fourteenth day until the evening of the twenty-first day. - Exodus 12:18 (NIV)

God gives us details in celebrations. Normally we celebrate many things with or without reasons. The business people converted it into a culture. The cards, gifts and goodies are being exchanged. Special editions of magazines, audio, video discs are being marketed. Discounts on many items and services seem generous. But the reason is often forgotten.

When God commands us to celebrate – whether it is Sabbath or Passover, there are valid reasons:

1. To remember the past and be thankful to God.
2. To enjoy the varieties of life in celebration and Obedient to God’s commandments in the Present.
3. To trust God for the future and be faithful to Him forever.

The celebration of Passover really had many reasons and God’s signature in it. That was why God gave many details to Israelites.
1. Bread without yeast.
2. Roasted meat.
3. Bitter herbs.
4. Blood on the door post.
5. Eating with sandals on and staff in hand.
6. The Exodus happened exactly at the end of 430 years to the very day.

I always try to find the reasons and significance of any and every festival and celebration. Religious as well as secular. I celebrate some of them and do not care about the others. I respect those who celebrate that which is not my favorite. But when I celebrate something, I really enjoy the celebration. The scale of grandeur is immaterial. I celebrate Holy Communion, Easter and Baptisms. I involve in the celebrations emotionally. Celebrate and add color to Life.

காரணத்தோடு கொண்டாடுவோம்!
முதலாம் மாதம் பதினாலாம் தேதி சாயங்காலந்தொடங்கி மாதத்தின் இருபத்தோராம் தேதி சாயங்காலம் வரைக்கும்
புளிப்பில்லா அப்பம் புசிக்கக்கடவீர்கள். - யாத்திராகமம் - 12:18

கொண்டாட்டம் எப்படி இருக்க வேண்டும் என்று சிறு விபரங்களைக் கூட கடவுள் தருகிறார். பண்டிகைகள் முக்கியம் என்று கடவுள் சொல்கிறார் என்று நாம் அர்த்தப்படுத்திக் கொள்ளலாம். காரணங்கள் இருக்கிறதோ இல்லையோ, அர்த்தம் தெரிகிறதோ இல்லையோ நாம் பல நாட்களைக் கொண்டாடுகிறோம். நண்பர்கள் தினம், ராக்கி, வாலன்டைன்ஸ் டே இப்படியே வியாபாரிகள் கொண்டாட்டங்களை ஒரு கலாச்சாரமாக்கிவிட்டார்கள். சிறப்பு வாழ்த்து அட்டைகள், பாடல்கள், பத்திரிக்கைகள், பரிசுகள், தள்ளுபடி ஆஃபர்கள் என்று திக்குமுக்காட வைத்துவிடுகிறார்கள் - நோக்கங்கள் மறைக்க/மறக்கப்படும் அளவுக்கு.

ஆனால் கடவுள் கொண்டாடச் சொன்னால் - ஓய்வு நாளோ, பஸ்கா பண்டிகையோ, அதற்கு சரியான காரணங்கள் இருக்கும்:

1. கடந்த காலத்தை நினைத்து கடவுளுக்கு நன்றியுள்ளவர்களாக இருக்க.
2. நிகழ் காலத்தில் கொண்டாட்டங்களில் வாழ்வின் பலவித அம்சங்களை அனுபவித்து கடவுளுடைய கட்டளைகளுக்கு கீழ்ப்படிந்து நடக்க.
3. எதிர்காலத்துக்கு அவரை மட்டுமே நம்பி அவருக்கு உண்மையாக என்றென்றும் இருக்க.

பஸ்கா பண்டிகைக்கு பல காரணங்களும் கடவுளின் அடையாளங்களும் இருந்தன:
1. புளிப்பில்லாத ரொட்டி.
2. சுட்ட இறைச்சி.
3. கசப்பான கீரை.
4. வாசல் நிலையில் ஆட்டு ரத்தம் பூசுதல்.
5. செருப்பு போட்ட காலோடு கையில் ஒரு கோலோடு சாப்பிடுதல்.
6. விடுதலைப் பயணம் இஸ்ரவேலர் அடிமைகளாக இருந்த 430 ஆவது ஆண்டு முடிந்த அதே நாளில் துல்லியமாக
நடந்தது.

எந்த பண்டிகை நடந்தாலும் - அது மதம் சார்ந்ததோ, சாராததோ, அதற்கான காரணங்கள், முக்கியத்துவம் ஆகியவற்றைத் தெரிந்து கொள்வது நல்லது. நான் சிலவற்றை கொண்டாடுகிறேன், சிலவற்றைக் கண்டுகொள்வதில்லை. ஆனால் என்னால் ஒத்துக் கொள்ளமுடியாதவற்றைக் கொண்டாடுபவர்களை நான் மதிக்கிறேன். அவர்கள் கொண்டாடும் விதத்தை பாராட்டுகிறேன். நான் கொண்டாடுபவற்றை - அது அளவில் பெரிதோ சிறிதோ, உணர்ந்து அனுபவிக்கிறேன். எனது விருப்பமான கொண்டாட்டங்கள், நற்கருணை, ஈஸ்டர் மற்றும் ஞானஸ்நானம். நாம் கொண்டாடுவோம், வாழ்க்கைக்கு சுவை சேர்ப்போம்.

No comments: