Saturday, December 1, 2007

மோசேயின் சோதனைகள்

Temptation அப்படின்னு சொன்னாலேயே ஏவாள்-ஆப்பிள்-சாத்தான் அல்லது இயேசு-சாத்தான்-அப்பம், இந்த combination தான் மனசுல வரும்.

இயேசு கூட அந்த மூணு சோதனைகளும் முடிஞ்சபிறகு projects முடிஞ்சு 'அக்கடா'ன்னு உக்காந்த ஸ்டாஃப் அல்லது முழுப்பரிட்சை முடிச்ச ஸ்டூடண்ட் மாதிரி 'ஐய்யா ஜாலி'ன்னு ரிலாக்ஸ் ஆகல.
அவருக்கு அப்புறமும் நிறைய சோதனைகள் வந்தது. பிசாசானவன் சோதனையெல்லாம் முடித்தபின்பு, சிலகாலம் அவரை விட்டு விலகிப்போனான். லூக்கா 4:13. (இத NIV யில வாசித்தீங்கன்னா அடுத்த வாய்ப்பு வர்ற வரைக்கும் திருவாளர் பிசாசு காத்திருந்தார்னு புரியுது - அதாவது “இரு அப்புறமா வச்சிக்கிறேன்.”ன்னு சொல்லிட்டுப் போயிட்டு சில காலத்துக்கு அப்புறம் வந்தான்...அது எல்லாம் என்னன்னும் விளக்கணும்னா ஒரு book எழுதலாம் . இப்போ என்னோட பாய்ண்ட் என்னன்னா... சோதனை வரும்போதெல்லாம் சாத்தான் பக்கத்துல வந்து வால ஆட்டிட்டு நிப்பார்னு நினைக்காதீங்க. சாத்தானும் ஒனிடா விளம்பரத்துல வர்றா மாதிரியும் இருக்க மாட்டார். உங்களுக்கு நானும் எனக்கு நீங்களும் கூட சோதனையக் கொண்டு வர்ற ஏஜண்டா இருக்கலாம். பேதுரு டோஸ் வாங்கினது ஞாபகம் இருக்குதா? “அப்பாலே போ சாத்தானே.”

சோதனைகள் சில சூழ்நிலைகளாக்கூட இருக்கலாம்...

இன்னிக்கு காலைல மோசே வாழ்க்கைய வாசிக்கிறப்போ, மோசேக்கு வந்த முக்கியமான மூணு temptations பத்தி குறிச்சு வச்சேன்.

1.தன்னோட சொந்த பலத்தால எகிப்து மனுஷங்கள ஜெயிச்சு தன்னோட இஸ்ரவேல் மக்களுக்கு விடுதலை குடுக்கலாம்னு ஒரு சோதனை வந்தது. ஒருத்தனக் கொல்லவும் செய்துட்டான். ஆனா மாட்டிக்கிட்டார் மோசே. ஊத்திக்கிச்சு அவர் Plan.

2.மலை மேல இருந்து பத்துக் கட்டளைகளத் எடுத்துட்டு கீழே வர்றப்போ, ஆரோன் அன் கோ ஒரு தங்கக் கண்ணுக்குட்டிய செஞ்சு worship கொண்டாட்டம் பண்ணிட்டு இருந்தாங்க. கடவுள் மோசே கிட்ட கேட்டார், “பேசாம இவங்களக் கட்டி மாரடிக்காம விட்டுட்டு வா. உன்னப் பெரிய தலைவனாக்கி (இப்பவும் தலைவன் தானே?) உன் சந்ததிய பெரிய ஜாதியாக்கி ஒரு பெரிய நாட்டுக்கு சொந்தக்காரங்களா மாத்திடுறேன். இப்ப என்ன விடு அந்த இஸ்ரவேல் மக்கள மொத்தமா போட்டுத் தள்ளிடுறேன்” அப்படின்னார்.
இது தாங்க வித்தியாசமான ஒரு Temptation!

3.அப்புறமா குடிக்கத் தண்ணியில்லாத ஒரு சூழ்நிலையில, பாறைகிட்ட பேசு தண்ணி வரும்னு கடவுள் சொல்ல. மோசே பாறைய தன் கையில இருந்த குச்சியால அடிச்சுட்டாரு. (இதே குச்சி தானே பாம்பா மாறினது... செங்கடலத் திறந்தது, அப்புறம் பாறைட்ட பேசறத விட பாறைய அடிக்கறது தான் logic ஆன விஷயம். என்ன கொடுமை சார் இது... (கடவுள் கிட்ட குண்டக்க மண்டக்கன்னு பேசினா அவர் எடக்கு மடக்கா ஏதாவது செஞ்சுடப்போறார்)

அதோ பாரு கானான் நாடு அங்கத்தான் நீ கட்டி மாரடிச்சு கொண்டுவந்த மக்கள் எல்லாம் போய் செட்டில் ஆகப் போறாங்கன்னு கடவுள் சொல்லிட்டு மோசேக்கு மேல் லோகம் போக டோக்கன் குடுத்துட்டாரு.

இரண்டாவது சோதனை தான் மோசேய ஒரு மகா லீடரா மாத்திச்சுதுன்னு நினைக்கிறேன். இங்கே கடவுளே சோதனைக்கான ஏஜண்ட் மாதிரி கேக்கறார், “விடு, இந்த ஜனங்கள அழிச்சுடறேன். உன்னப் பெரிய ஜாதியாக்கறேன்.” நம்மள மாதிரி ஆட்கள், “Praise the Lord.” னு சொல்லிட்டு நம்ம நாட்டுக்கு புது பெயர் புதுக் கொடி ன்னு ப்ளான் பண்ண ஆரம்பிச்சிருப்போம்.

மோசேயுடைய பதில் தாங்க ஒரு Great Leader ஐ சாதா தலைவன்-ட்ட இருந்து பிரிச்சுக் காட்டிச்சுது.

“உம்முடைய கோபத்தின் உக்கிரத்தை விட்டுத் திரும்பி, உமது ஜனங்களுக்குத் தீங்குசெய்யாதபடிக்கு, அவர்கள்மேல் பரிதாபங்கொள்ளும். உங்கள் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, நான் சொன்ன இந்தத் தேசம் முழுவதையும் உங்கள் சந்ததியார் என்றைக்கும் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு, அவர்களுக்குக் கொடுப்பேன் என்று உம்மைக்கொண்டே அவர்களுக்கு ஆணையிட்டுச் சொன்னீரே என்று கெஞ்சிப் பிரார்த்தித்தான்” (யாத்திராகமம் 32:12-13).

இதுவும் ஆபிரகாமுக்கு வந்த சோதனை மாதிரி தான். ஆபிரகாம் ஈசாக்கைக் கொல்ல மாட்டான் அப்படின்னு கடவுளுக்குத் தெரியும். Back up plan (RAM) ஒண்ணும் வச்சிருந்தார். (எத்தன MB ராம் போட்டாலும் சிஸ்டம் ஸ்பீடு குறைஞ்சுட்டே போறாப்ல தான் தெரியுது) அதே மாதிரி தான் இங்கேயும் மோசே தனிநாடு திட்டத்துக்கு ஒத்துக்க மாட்டான்னு கடவுளுக்குத் தெரியும் ஆனாலும் டெஸ்ட் பண்ணிப் பாத்தார். இது டெம்ப்ட்டேஷன் இல்ல டெஸ்ட். (இது தான் கடவுளுடைய திருவிளையாடல்) மோசே தனிநாடு கேக்க மாட்டான்னு தெரிஞ்சு கடவுள் கேட்டாரா? அல்லது கடவுள் அப்படிக் கேட்டதால் மோசே வேண்டாம்னு சொன்னாரா? கடவுள் எப்பவுமே அவருக்கு நெருக்கமானவங்கள அதிகமாத்தான் டெஸ்ட் பண்ணியிருக்காரு. பெரிய தலைவனா வரணும்னா நெறைய குடுத்துத் தான வரவேண்டியிருக்கு? அது சம்திங்கா இருக்கலாம், மன அமைதியா இருக்கலாம், குடும்பத்துல தியாகமா இருக்கலாம்.

திருவிளையாடல் உரையாடல்:

கடவுள் மோசேட்ட போட்டு வாங்கப் பாத்தார்... (மகன் தப்புச் செய்துட்டு வந்திருந்தா, “உம் பிள்ளயப் பாத்தியா என்ன பண்ணிட்டு வந்திருக்காம்னு.” அப்படின்னு அப்பா அம்மாட்ட சொல்வாருல்ல அப்படித்தான் இருக்கு கத)

கர்த்தர் மோசேயை நோக்கி: நீ இறங்கிப்போ; எகிப்துதேசத்திலிருந்து நீ நடத்திக்கொண்டுவந்த உன் ஜனங்கள் தங்களைக் கெடுத்துக் கொண்டார்கள். (யாத்திராகமம் 32:7)

மோசே கொஞ்சம் விவரமாப் பேசறாரு:

(அம்மா கொஞ்சம் தைரியமா சொல்றாப்ல “உங்க பிள்ள தான்.”)

“கர்த்தாவே, தேவரீர் மகா பலத்தினாலும் வல்லமையுள்ள கையினாலும் எகிப்து தேசத்திலிருந்து புறப்படப்பண்ணின உம்முடைய ஜனங்களுக்கு விரோதமாக உம்முடைய கோபம் பற்றியெரிவதென்ன?” (யாத்திராகமம் 32:11)
இயேசுவும் கூட இதே மாதிரி ஒரு திருவிளையாடல் பண்ணியிருக்கார்.

அத்தருணத்தில் தாங்கள் போகிற கிராமத்துக்குச் சமீபமானார்கள். அப்பொழுது அவர் அப்புறம் போகிறவர் போலக் காண்பித்தார். (லூக்கா 24:28) Jesus acted as if he were going farther (NIV) ஆக்ட் குடுத்திருக்கிறாரு ஜீசஸ்.

இன்னொரு கத சொன்னா குழம்பிடுவீங்க. (யான் பெற்ற குழப்பம் பெருக என் நண்பர்கள்)
1 ராஜாக்கள் 13 ஆவது அதிகாரத்துல ராஜாவுக்கு எதிரா வீர வசனம் பேசின ஒரு தீர்க்கதரிசி ஒரு பொட்டு தண்ணி ஒரு பருக்க சோறு சாப்பிட மாட்டேன்னு சொல்லிட்டுத் திரும்பிப் போனாரு. கடவுள் சொன்னதக் கேட்டு வந்த வழியில போகாம வேற வழியில் போனாரு. பொய் சொல்ற ஒரு தீர்க்கதரிசியை அனுப்பி வீர வசன தீர்க்கதரிசியைக் கவுத்து உட்டுட்டாரு கடவுள். பாவம் அந்த தீர்க்கதரிசி கடவுள் பெயரில புளுகின தீர்க்கதரிசிய நம்பி இவரு திரும்பப் போய் சாப்பிட்டுட்டு சிங்கத்து வாயில தலயக் குடுத்து நடு ரோட்டுல அனாதப் பிணமாக் கிடந்தார். அந்தப் புளுகுணி தீர்க்கதரிசி செத்தவரப் புதச்சிட்டு, அவரோட கல்லறையிலேயே தன்னையும் புதைக்கச் சொல்லிட்டார்.

இத எல்லாம் ஏன் சொல்றேன்னா, நம்மோட ஆவிக்குரிய வாழ்க்கையில நாம வளர்றப்போ, சாத்தானோ, கவர்ச்சிக் கன்னி/காளை, அல்லது கிறிஸ்தவ skits ல காட்றா மாதிரி சிகரெட், பாட்டில், சினிமா இப்படி மட்டும் சோதனை வராது. ஜெபம் பண்றப்போ, பைபிள் வாசிக்கிறப்போ, கிறிஸ்தவ மீட்டிங்கள்ல மெசேஜ் கேட்டுட்டு இருக்கறப்போ கூட இப்படிப்பட்ட Test கள் வரலாம்.

சோதனைங்கற தமிழ் வார்த்தைக்கு English Bible ல மூணு அர்த்தங்கள் இருக்குது.
(பிற்காலத்துல முடிஞ்சா இத எல்லாம் அக்கு வேற ஆணி வேறயா பிரிச்சு மேய்ஞ்சுடலாம்)
உதாரணங்கள்:

1)Temptation ( மத்தேயு 4:1; யாக்கோபு 1:13-14),
2)Testing (ஆதியாகமம் 22:1),
3)Trials (யாக்கோபு 1:2,3).

மோசேக்கு இந்த இடத்துல வந்தது Test.

எத்தனை காலம் தான் Sunday school level -இலேயே இருந்துட்டு, சாத்தான், ஆப்பில், பாம்பு, சோதனைன்னு சொல்லிட்டு இருப்பீங்க?

Test, Trials எல்லாவுமே ஆன்மீக வாழ்க்கையில ஆழமாப் போறவங்களுக்கு.

இந்த Band aid, Asprin, Quick-fix generationல, சோதனையைத் தாண்டுறதே பெரிய பாடா இருக்கு, இனிமே டெஸ்ட், ட்ரையல் எல்லாம் எங்க? என்னத்த? ன்னு சொல்றீங்களா?

மக்கள் இருக்கறது மாதிரி தான் தலைவர்கள் இருப்பாங்க. தலைவருங்கள மாதிரி தான் மக்கள் இருப்பாங்க. ஆனாலும் மோசே மாதிரி தலைவர்கள் எப்பவாச்சி தான் பிறப்பாங்க இல்லியா?

தலைவர்களா இருந்தாலே தியாகம், கஷ்ட்டம் தானோ? அப்படின்னு நினைக்காதீங்க. மோசேயப் பத்தி கடவுள் எத்தனை Certificates குடுத்துருக்காரு தெரியுமில்ல? முகமுகமா கடவுளோட பேசினான் தெரியுமில்ல?

அப்புறமா Philip Yancey ஒரு சூப்பரான விஷயம் சொல்றார். பாறைய அடிச்சப்புறம் கடவுள் சொல்லிட்டார், “இனிமே நீ கானானுக்குப் போக முடியாது.” மோசே எவ்வளவோ கெஞ்சிப் பாத்துட்டாரு. கடவுள் “ம் ஹூம்” சொல்லிட்டாரு. ஆனா, ஆயிரக்கணக்கான வருஷங்களுக்கு அப்புறம் அதே கானானுக்குள்ள, இயேசுவோட மறுரூப மலையில அதே மோசே பேசிட்டு இருந்தாரு. செத்த பிறகு மோசேயுடைய ஆசை நிறைவேறிடுச்சு. அதுவும் மாபெரும் தீர்க்கதரிசியா அப்புறமா எழும்புன எலியாவோட சேர்ந்து அவங்க எகிப்தில இருந்து பயணம் போறப்போ அவங்க கூட வந்த தூதனானவரான இயேசுவோட, அவங்க தாகம் தீர்த்த ஞானக் கன்மலையான இயேசுவோட, அவரப்போல ஒரு தீர்க்கதரிசி எழும்புவார்னு சொல்லப்பட்ட இயேசுவோட உரையாடல்.

ஆன்மீக வாழ்க்கையிலேயும் தலைவர் பதவியிலேயும் நாமளும் கூட மோசே ரேஞ்ச்சுக்கு, ஏன் அத விட மேலேக் கூட போக முடியும். நம்ம சூழ்நிலையில, நம்ம தகுதிக்கு, கடவுள் நம்மளயும் தலைவர்களா மாத்துவாரு. மோசே மாதிரி தலைவர்கள் பலகீனம் உள்ளவங்க தான். நம்மளப் போல மனுஷங்க தான். அவங்க தியாகமும், தைரியமும் கடவுளோட சித்தமும் கிருபையும் சேர்ந்து எவ்வளவோ சாதிச்சிருக்காங்க.

வில்லியம் கேரி பத்தி ஒரு சின்ன புத்தகத்த இன்னிக்கிப் படிச்சேன். அவரோட மந்திரம் எனக்கு அதிக உற்சாகம் தரக்கூடியது. இப்போ அந்த மந்திரத்த மட்டும் எழுதறேன். அப்புறம் இன்னொரு நாள் இன்னொரு இடத்துல் வில்லியம் கேரி பத்தி ஒரு சின்ன வாழ்க்கைக் குறிப்பு எழுதுவேன்.

“Attempt great things for God
Expect great things from God”

No comments: