Thursday, October 25, 2007

பிச்சை

பலரிடம் ஏந்தி
எதிர்பார்த்ததில்
சிலதைப் பெற்று
'சாமி நல்லாயிருங்க' சொல்லி....
சாமிகளை நம்பி
திரும்பத் திரும்பப் போய்
சில சாமிகள் என்னைப் போல்
திருவோடு ஏந்துவதைக் கண்டு...
இன்னும் சில சாமிகள்
துரத்தியதால் மிரண்டு...
இனி போக யாருமின்றி
சாமிகளுக்கெல்லாம்
சாமியே உன்னிடம்
வந்துவிட்டேன்
சரணாகதியே...

திருவோட்டால் தான் பிரச்சனையோ
வீசிவிட்டேன் அதையும்...
வெறுங்கையை ஏந்துகிறேன்.
எதைப் போட்டாலும் ஏற்கிறேன்.
என் விருப்பம்
என் தேவையை விட
பிறர் தேவை
உன் விருப்பம்
உன் தர்மம்
வாழ்க தர்மம்
வாழ்க தர்ம தேவன்.

No comments: