Monday, February 13, 2017

சன்டே சண்டை 13.02.2017



“என்ன மூணு வாரம் துள்ளித் துள்ளி சண்ட போட்ட… இப்ப மூணு வாரமா சத்தமே இல்ல? பீட்டாவுல பிடிச்சுட்டாங்களா? சபைகள்ல பிரச்சனையே இல்லாமப் போயிட்டா? இல்ல நீ தான் எல்லாரையும் மாதிரி காம்ப்ரமைஸ் ஆயிட்டியா?”

“ரெண்டாவது வருகை வரைக்கும் சண்டைக்கு சப்ஜக்ட் இல்லாமப் போகாது ஓய். இன்னிக்கி விட்டுப் போன மூணு வாரத்துக்கும் சேத்து மூணு சண்ட இருக்குது.”

“அது தான பாத்தேன்… நல்லது தான், நமக்கும் நேரம் போகாது நீரு சண்ட போடலன்னா.”

“ஆமா நம்ம ஆட்கள மாதிரியே நீரும் மாறிக்கிட்டே வர்றீரு. மாற்றம் வரணும்னு அக்கறை இருக்குதோ இல்லியோ, ஆட்டம் நடக்கணும் அத நீரு வேடிக்க பாக்கணும், அப்படித்தானே?”

“அதெல்லாம் இல்ல ஓய், விஷயத்துக்கு வாரும்.”

“நேத்து ஒரு சர்ச்-சுக்குப் போனேன், தலை நகரத்து மெயின் லைன் சர்ச்.”

“நீரு வேற டினாமினேஷன் சர்ச்சுக்கே போமாட்டீரோ?”

“அதப்பத்தி அப்புறமா சொல்றேன், இப்போ நான் சொல்ல வந்திருக்கிறத மறந்துறப் போறேன். கம்யூனியன் சர்வீஸ்ல ஒரு பொம்பள ஐயர், அதாவது லேடி ப்ரீஸ்ட், ஜெபம் நடத்துனாங்க, எல்லாருக்கும் கப் செர்வ் பண்ணுனாங்க. அவங்க முக்காடு போடல. இது சரியா?”

“சின்ன விஷயத்த பெரிசாக்குறது தானே உம்ம ஸ்பெஷாலிட்டி?”

“சிறுசோ பெருசோ, தப்பு தப்பு தானே? முக்காடு போடறது நம்ம நாட்டுல முக்கியம்னு பொம்பளைங்களுக்கு சொல்லிக் குடுத்துட்டு, போதகர் அம்மா, அதாவது ஐயரோட மனைவியோ அம்மாவோ இல்ல, போதகரா நிக்கிற அம்மாவே முக்காடு போடலன்னா, அது என்ன முன்மாதிரி?”

“யூனிஃபார்ம்னா ஒரே மாதிரி இருக்கணும் இல்லியா? அதான் ஆம்பள ஐயர் போடற மாதிரியே அங்கி போடுறாங்க.”

“யோவ் யூனிஃபார்ம் எல்லாம் சரி, அது நம்ம நாட்டுக்கு உரியதா? நம்ம நாட்டுல வேட்டி, சட்டை, துண்டு போடலாம், அதே துண்டால கூட கம்யூனியன் கப்பக் கூட துடைக்கலாம். பொம்பள பாஸ்டர் சேல கட்டலாம், சுடிதார் கூட போடலாம், சுடிதார முக்காடாவும் போட்டுக்கலாம், சேல முந்தானையை வச்சி மக்கள் கம்யூனியன் பாத்திரத்தில எச்சி பண்றத துடைக்கவும் செய்யலாம்.”

“துண்டு, முந்தானை, துப்பட்டா இதையெல்லாம் வச்சி பாத்திரத்தத் துடைச்சா எப்படி இருக்கும், ச்சே.”

“அவங்க யூனிஃபார்ம் எல்லாம் சர்ச்ல மட்டும் தானே போடுவாங்க. வாரா வாராம் துவைச்சிறலாம். சர்ச் ஃபண்ட்ல ஒரு வாஷிங் மெஷின் கூட வாங்கி வச்சிறலாம்.”

“இப்போ நாம் பாய்ண்ட்ட விட்டுட்டு வேற எங்கேயோ போறோம்.”

“முக்காடு போடுவாயாக, அல்லது தலையை வெளியே காட்டாதிருப்பாயாகன்னு பைபிள்ல கட்டளை இருக்குதா?”

“அதப்பத்தி எல்லாம் எனக்கு தெரியாது. பொம்பளைங்க முக்காடு போடணும்னா, போதகரா நிக்கிற பொம்பள முக்காடு போடணுமா இல்லியா? அவங்க ஆல்ட்டருக்குள்ள போனதும் ஆம்பளயா ஆயிருவாங்களா? அல்லது பால் வித்தியாசமே அங்கே இல்லாமப் போயிருமா?”

“பெண் உரிமைக்காரங்க சண்டைக்கு வரப் போராங்க.”

“வரட்டுமே? மனுஷங்க மனுஷங்க தானே. சின்ன வயசுப் பிள்ளைங்க இந்த மாதிரி கேள்வி கேட்டா இவங்க என்ன பதில் சொல்லுவாங்க?”

“நீரே சின்னப் பிள்ளைங்க கிட்ட போட்டு குடுத்திருவீரு போல இருக்குதே?”

“அதெல்லாம் இல்ல. சுயமா பிள்ளைக்க சிந்திக்கலன்னா, இப்படித்தான் இருக்கும். நாமளாவது சிந்திக்கிற ஒரு தலைமுறைய உருவாக்குவோம். சட்டம்னா எல்லாருக்கும் ஒண்ணா இருக்கணும். முக்காடு போட்டாட்டியும் என்னப் பொறுத்த வரைக்கும் பெரிய பிரச்சன இல்ல. எல்லா எடத்துலயும் இருக்கற மாதிரி சர்ச்லயும் இருக்கணும். சர்ச்ல இருக்கற மாதிரி எல்லா இடத்துலயும் இருக்கணும். நாமளே மாய்மாலக் காரங்களா இருக்கக் கூடாது. இளம் தலைமுறைய அந்த மாதிரி மாத்திரக் கூடாது.”

“அடுத்த ரெண்டு சண்ட என்ன ஆச்சு?”

“இடம் பத்தல. இதையே மக்கள் நீளமா இருக்குதுன்னு சொல்றாங்க. அடுத்த வாரம் பாக்கலாம்.”

No comments: