கர்த்தாவே,
நான் உன் அடிமை என்றாலும்
உணர்ச்சிகள் இருக்கின்றன.
ஆசைகள் இருக்கின்றன.
மாமிசம் துடிக்கிறது.
சோதனைகளுக்குப் பஞ்சமில்லை.
நீர் ஏன் மற்ற எஜமான்கள் போல
உரிமை இல்லாத
அடிமையாக என்னை வைக்காமல்
உரிமைகள் கொடுத்து வைத்திருக்கிறீர்?
ஏன் என்னை உம் நண்பன் என்கிறீர்?
நண்பனுக்கு இருக்கும் சோதனைகளைத்
தெரிந்தும் ஏன் என்னை இன்னும் அடிமையாக்காமல்
விட்டு வைத்திருக்கிறீர்?
அடிமையாக இருப்பதுவே எனக்கு எளிதாக இருக்கும்
உரிமை என்பது உரிமையாக இல்லையே?
என் இஷ்ட்டப்படி செய்யவும் முடியவில்லை,
செய்துவிட்டு உமக்கு எதிராக துரோகம்
செய்ததாக மனது குற்ற உணர்ச்சியில் சாகிறது.
என்னை அடிமையாகவே வைத்துவிடுமேன்!
நீர் சொல்வதை மட்டும் அப்படியே இயந்திரம் போல
செய்துவிட்டு அமைதியாக, சமாதானமாக
எப்பொழுதும் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேனே!
ஏன் என் ஆசைப்படி, உரிமையின்படி, திறமைகளின்படி
என் வழியில் போய் முட்டி மோதி, உடைந்து
சிதைந்து, கடைசியில் உம்மிடம் வந்து மீண்டும்
நீர் சொல்வது என்ன என்று கேட்டு ...
வீணான காலத்துக்கும் கண்ணீருக்கும் கணக்குப் பார்த்தால்
ஏன் ஏன் என்று தானே கேள்வி வருகிறது?
திருப்பிப் பேசாத, எந்த ஆசையும் திட்டங்களும் இல்லாத
அடிமைகளைப் பார்ததால் எனக்கு பொறாமையாக இருக்கிறது.
என் சாதனைகளால் என்ன பலன்?
சோதனைகளில் படும் பாடுகள் தான் பலன்.
ஏன் என் திறமைகளை, ஆசைகளை, வாஞ்சைகளை
நான் திருப்திப்படுத்த வேண்டும்?
ஏன் இந்த திறமைகளை என்னில் வைத்தீர்?
ஏன் அத்துடன் சுதந்திரத்தையும் உரிமையையும் கொடுத்தீர்?
கொடுத்த திறமைகளை சரியாகப் பயன்படுத்த
ஒரு மென்பொருளையும் என் மூளையில் பொறுத்தி
என்னை ஒரு கணினியனாக வைத்திருக்கலாமே?
மனிதனாக, அதுவும் உம் சாயலில், விழுந்து எழுந்து
சோதனைகளில் விழுந்து, உம் சாயலை ஏன் நான்
என்னில் கறைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்?
நீ சிலுவையில் சிந்திய இரத்தத்தை
நான் ஏன் ஒவ்வொரு முறையும்
வீணாக்க வேண்டும்?
ஏன் உம்மை சிலுவையில்
மீண்டும்
மீண்டும்
அறைய வேண்டும்?
பவுலைப் போல உம் கிருபை போதும்
என்று சொல்லும் பக்குவம்
எனக்கு வரவில்லை.
பலவீனத்தில் பெருமை பாராட்டுவதுவும்
துணிகரமோ என்று பயப்படுகிறேன்.
மாம்சம் பலவீனம் தான், ஆவியில் உயிர் இல்லை.
உயிர்ப்பியும் ஆண்டவரே.
அந்த பெத்தானியப் பெண்ணைப் போல
என் கண்ணீரால் உம் பாதங்களைக் கழுவ
என் வாழ்வின் சேமிப்பை வாசனைத் தைலமாக்கி
உம்மை அபிஷேகிக்க ஆசை.
அறை முழுவதும் அல்ல
உலகம் முழுவதும் பரவிய அந்த
நறுமணமாக என் வாழ்வின்
செயல்கள் அமைந்துவிட
ஆசை தான்.
ஆனால் எனக்குள் இருக்கும்
சாவின் துர்நாற்றம் மேற்கொள்கிறதே.
ஒவ்வொரு நாளும் செத்து
நாலு நாளாயிற்றே
நாறுமே என்று தான் நான் என்னைப் பற்றிச்
சொல்கிறேன்.
கல்லறையைத் திறக்க தயக்கம்
இருக்கிறது.
உம்மை விட்டு ஒளித்துக் கொள்ளத்
தான் தோன்றுகிறது.
நீர் உயிர்ப்பிப்பீர் என்பது தெரியும்.
ஆனால் அந்த உயிர்ப்பிப்பு
அடக்க ஆராதனைக்குப் பின்
பரம யோர்தான் ஆற்றைத் தாண்டியபின்
தான் என்று சொல்லிச் சொல்லியே
உமது உயிர்த்தெழுதலின் வல்லமையை
அறிக்கையிடாமல்,
தினசரி வாழ்வில்
அனுபவிக்காமல்
உள்ளேயே
நாறிக் கொண்டே
நான்கு நாளாக
நாறிக் கொண்டே இருக்கிறேன்
மூன்றாம் நாள் உயிர்த்தவரே
என்னை உயிர்ப்பியும்,
ஜீவ பலியாக
வைத்துக் கொள்ளும்.
எந்நாளுமே
உயிருடன்
உயிர்ப்பிக்கப்பட்டு
உயிருள்ள பலியாக
அந்த பலிபீடத்தில்
துடிக்கத் துடிக்க
துள்ளத் துடிக்க
என்னைக் கட்டிப் போடுமேன்.
துள்ளிக் கீழே விழுந்து ஓடிவிடவே
மாம்சம் அவசரப்படுகிறது.
மீண்டும் வரும் போது
ஆவியின் பலம் அதிகம் இருந்தாலும்
செய்த மீறுதல்களின் காயங்கள்
மாம்சத்திலும்
ஆவியிலும்
மாறாத வடுக்களாக
இருக்கின்றனவே?
எனது துணிச்சல் நீர் தந்த உம் சாயல் என்றால்
துணிகரம் அதில் ஒரு ஊனமாக இருக்கிறதா?
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு செயலுக்கும்
உம்மிடம் அனுமதி கேட்டு
இருக்கும் வாழ்வு எனக்குப் பிடிக்கவில்லை தான்
ஆனால் என் வழியில் போய் அடிபட்டு
ஒப்பிட்டுப் பார்த்து...
.....
பயமாக இருக்கிறதே?
மோசே உம் வழிநடத்தலில் நடந்தாலும்
அந்த கற்பாறையிடம் பேசும் விஷயத்தில்
மட்டும் தன் கைக் குச்சியால் பேசிவிட்டான்
ஆறு லட்சம் மக்களை மேய்க்கும் அவன்
தன் சந்ததியை வளர்க்க விரும்பாமல்
இஸ்ரவேலருக்காக வாதாடிய
அவனுக்கே அந்த ஒரு கோபத்தின் நிமிடத்துக்கு
அத்தனை தண்டனையா?
கனவு கண்டு, மனசுக்கள் வளர்த்து வைத்த
அந்த கானான் கனவை கலைத்து விட்டீரே!
புரியவில்லை.
உம் நினைவுகள்
எங்கள் நினைவுகள் அல்ல
உம் வழிகள் எம் வழிகள் அல்ல
ஆனால் எங்களுக்கு அறிவு என்று ஒன்றைக் கொடுத்திருக்கிறீரே!
ஆடு மாடுகளைப் போல, பூனை நாய்களைப் போல
ஒரே வார்த்தையில்
மியாவ்
லொள்
கீ
கூ
மா
மே
என்று
பேசி,
விதிப்படி
வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாமோ
என்று தோன்றுகிறது.
ஆனால் எனக்கு உம் சாயலைக் கொடுத்து
என்னை மீட்டெடுத்ததற்கு ஒரு அர்த்தம் உண்டு
விசுவாசிக்கிறேன்.
கண்டு விசுவாசிக்க ஆசிக்கிறேன்.
என் விசுவாசம் அற்பமானது தான்.
சில உணர்ச்சி பூர்வமான
சூழ்நிலைகளில் பேதுரு போல
கொந்தளிக்கும் கடலில் நடந்துவிடுகிறேன்
அது ஏன் சில நிமிடங்களில் முடிந்துவிட வேண்டும்?
நான் ஏன் காற்றையும் கடலையும் பார்க்கிறேன்?
கடல், காற்று, புயல், அலைகளில் அழிவை மட்டும்
பார்த்தவன் நான்,
அழகைப் பார்க்கும் விசுவாசம்
பார்க்காமல்,
இல்லாததை,
நடக்கப் போவதை
நம்பும் அளவுக்கு என் விசுவாசம் கடுகின் அளவிலும்
இல்லை,
கடுகின் வடிவத்திலும் இல்லை.
விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரே
என்னில் துவக்கிய விசுவாசத்தை
கொஞ்சமாவது நான் காத்துக் கொள்ள
உம் முகத்தைப் பார்த்து அதை
முடிக்கும் வரை
என்னைக் காத்துக் கொள்ளும்.
நான் சாதிக்க விரும்பவில்லை
நீர் வைத்திருக்கும் திட்டத்தைத் தெரிந்து கொண்டு
அதை மட்டும் எளிமையாக
முழு மனதோடு
கடினமாக உழைத்து
நிறைவேற்ற ஆசைப்படுகிறேன்.
என்னை முழுதும் அறிந்தவர் நீர்,
பலம், பலகீனம், திறமை, தோல்வி
தாலந்து, அறிவு, அறிவீனம்
உம் மேல் எனக்குள்ள அன்பு
துணிகரமான முயற்சிகள்
உணர்ச்சியின் அடிப்படையில்
செய்துவிடும் தவறுகள்
அவசரத்தில்
நல்ல நோக்கத்தில்
கொடுத்துவிட்ட வாக்குகளுக்காக
மற்றவர்களுக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கும் பரிதாபம்
என் உள் நோக்கம் உமக்குத் தெரியும்
அத்ற்கேற்ற பலன் தாரும்
பகுத்தறிய புத்தியைத் தாரும்
சிறு குழந்தையைப் போல
எவற்றில் இருக்க வேண்டும் என்றும்
எதில் வளர்ந்தவர்களைப் போல
நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்றுத் தாரும்.
சின்னப் பையனைப் போல என்னிடம் இருப்பதை
பேசாமல் உம் கையில் கொடுத்து விட்டு
கூட்டத்தோடு கூட்டமாக உட்காந்து
என் பங்கை சாப்பிட்டுவிட்டுப்
போகவே விரும்புகிறேன்.
அவ்வப்போது தன்னலம் தடுக்கிறது
கூட்டத்தைப் பார்த்து கணக்குப் போடுகிறது மனம்.
அடுத்த நேரத்தைப் பற்றி யோசிக்கிறது
இருதயம்.
நானே பலுகச் செய்ய
திட்டங்கள் தீட்டுகிறது
என் சுயம்
தினமும் என் உணவை அந்த சிறுவனைப் போல
உம் கையில் கொடுத்து பலுகச் செய்தால்
மக்கள் பசி இல்லாமல் இருப்பார்களே?
சில நாட்களில் அந்த சிறுவனைப் போல
பகிர்ந்து கொடுத்துவிடுகிறேன்
சில நாட்களில் சீடர்களைப் போல
கணக்குப் போடுகிறேன்
சில நாட்களில் அம்மாக்களைப் போல
எதிர்காலத்தைப்பற்றி கவலைப்பட்டு
பதுக்கி வைத்துவிடுகிறேன்.
சில நேரங்களில் நான் மட்டும் தான்
கொடுக்க வேண்டுமா? என்று பிறரைக்
குறை சொல்கிறேன்,
என்னைத் தியாகியாக
ஏமாந்தவனாகப் பார்த்து
விபரமாக நடந்து கொள்ள நினைக்கிறேன்.
நீர் வருத்தப்படுகிறீர் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
மன்னியும் கர்த்தாவே.
என்னை மாற்றும் கர்த்தாவே.
தினமும் செத்து நாலுநாளாகிவிட்ட
பிணத்தை உயிர்ப்பியும்
வருடக்கணக்கில்
வெயிலில் வெளுத்துப் போன
எலும்புகளை உயிரடையச் செய்யும்
உயிருள்ள பலியாக உம் பீடத்தில் வைத்துவிடும்
உயிர்த்த உம் வல்லமையால்
என்னை உமக்குச் சாகாமல்
ஏதேன் அனுபவம் திரும்ப நடக்காமல்
ஜீவ விருட்சத்தின் கனியை உம் கையால்
வாங்கிப் புசிக்க...
ஜீவ கிரீடத்தை உம் கரத்தால் சூடிக் கொள்ள
ஆவலாகக் காத்திருக்கிறேன்.
ஈசாக்கைப் போல திரும்பக் கொடுத்துவிடுவீர்
என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டு
பலிபீடத்திலிருந்து குதித்து ஓடி
முட்செடியில் மாட்டிக் கொண்டிருக்கும்
ஆட்டுக் க்டாக்களைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
எப்தாவின் மகளைப் போல
என்னைப் பலி கொடுத்து
உம்மிடம் எடுத்துக் கொள்ளும்.
உம் மகனையே பலியாகக் கொடுத்த நீர்
பலியின் வலியை அறிந்தவர்
என்னைப் புரிந்து கொண்டீர் நன்றி
ஆனால் நீர் செய்யாத ஒன்றை
என்னைச் செய்யச் சொல்லாத
உத்தமர் நீர்
எனக்காகப் பரிந்து பேசும்
பிரதான ஆசாரியரும் நீரே
உதவும் ஆண்டவரே
என்னை நானே
விரும்பி
உமக்கு விருப்பமான
உயிர் பலியாக
என்னை பலிபீடத்தில்
படைக்க
அங்கேயே இருந்துவிட
உலகத்துக்குள் இறங்கிவிட
உலகத்தானாக இல்லாமல்
நடமாடும் பலியாக
உலகத்தில் என்னை வைத்துக் கொள்ள
என்னைப் படைக்கிறேன்
ஏற்றுக் கொள்ளும்.
உம் தவக்காலம்
நாற்பது நாட்கள் அல்ல
முப்பத்து மூன்றரை வருடங்கள்
முப்பது வருடங்கள்
வீட்டில்
நாற்பது நாட்கள் காட்டில்
மூன்றரை வருடங்கள் நாட்டில்
இந்த லெந்துக் காலத்தில்
என் தவம் துவங்கட்டும்
நாற்பது நாட்களும்
காட்டின் அனுபவம் தந்தாலும்
தொடர்ந்து வாழ்நாள் முழுவதும்
நாட்டுக்குள் வீட்டுக்குள்
அந்த அனுபவத்தை
தவத்தை எடுத்து வர
உதவும்.
நாற்பது நாட்கள் படைத்தவருடன்
உறவு
இரவு முழுவதும் பிரார்த்தனை
அதிகாலையில் இருள் விலகும்
முன்பாகவே பிதாவின் பிரசன்னத்தில்
துவங்கும் நாள்.
இதில் சோதனைக்கோ
அதைப் பற்றிய சிந்தனைக்கோ
இடமே இல்லையே.
ஆண்டவரே
விரும்பியும் விரும்பாமலும்
எங்களுக்குள்
காடு வளர்ந்துவிட்டது
காட்டுமிராண்டி உள்ளே வளர்ந்துவிட்டான்
விளம்பரங்கள்
இச்சையைத் தூண்டும்
பாடல்கள்
காட்சிகள்
பேச்சுக்கள்
காமெடி நேரங்கள்
சிந்தனைகள்
இவற்றின் நடுவில்
ஒரு நாற்பது நாட்கள்
துவக்கி
ஒரு வாழ்நாள் வரை
தொடரும்
தவத்தை
உம்மோடு
மேற்கொள்ளப் போகிறேன்.
தேவதூதர்களின் உதவி வேண்டாம்
சாத்தானின் தாக்குதலில் மட்டும்
எதிர்க்கும் தைரியம் தாரும்
அவனது தாக்குதல்கள்
பயங்கரமாக இல்லை
இனிமையாக இருக்கின்றன
வேத வார்த்தைகளில் இல்லை
அவற்றை நாங்கள் மற்ந்துவிட்டோமே
அவனுக்குத் தெரியும் அளவு கூட
வேதம் எங்களுக்குத் தெரியவில்லை
அவனது தாக்குதல்கள்
தத்துவங்களால் தான்
திரைப்பாடல்கள்
கதைகள்
காமெடி
பிரபலங்களின் பேட்டிகள்
டாக் ஷோக்கள்
சீரியல்கள்
தினசரிச் செய்திகள்
கவர்ச்சியான குட்டி விளம்பரங்கள்
தள்ளுபடிகள்
ஆஃபர்கள்
மூலம்
தத்துவம்
காதுக்கு இனிமையாக
இச்சையைத் தூண்டுவதாக
கண்ணுக்குக் குளிர்ச்சியாக
இந்த காங்க்ரீட்
வனாந்தரத்தில்
எங்களுக்கு
கல்லுகளை அப்பங்களாக்க
அல்ல
ஹாலோ ப்ளாக்குகளை
சாப்பாடாக்கும் சோதனைகள்
கோபுர உச்சியில் அல்ல
ஃபேஸ் புக்குகளின் லைக்குகளில்
எங்களை நாங்களே கதாநாயகர்களாக்கும்
பதினைந்து செகண்ட் பிரபலமாக்கும்
சோதனைகள்
சாத்தானை ஆராதிக்கும்
சோதனை அல்ல
எங்களை நாங்களே
ஆராதிக்கும்
சோதனைகளே
இருக்கின்றன.
வார்த்தையால் அல்ல
வாழ்க்கையால் அவனைத்
துரத்தும் பலத்தைத் தாரும்
தவத்தால் பலம் பெற
உம் வாசத்தால்
துணை பெற
உம் வாசத்தால்
வாசனை பெற
உம் போஷிப்பால்
திருப்தி பெற
தினம் தினம்
உம் மேல் பசி தாகம் பெருக
உலகத்துக்கு பட்டினி கிடக்க
உம்மில் நான் விருந்தைப் புசிக்க
இந்த லெந்துக் காலம் எனக்கு
ஒரு விருந்தாகட்டும்
ஒரு மறுபிறப்பாக
புத்துணர்ச்சி முகாமாக மாறட்டும்
என் வீட்டிலே
நாட்டிலே
வேலையிலே
எனக்கொரு வனாந்தரத்தை
உருவாக்கித் தாரும்
பரிசுத்த ஆவியானவரே
அந்த வனாந்தரத்துக்குள்
என்னைப் போக ஏவி விடும்
சாத்தானுக்கு அனுமதி
கொடுத்தாலும்
நீர் என்னை பாதுகாத்தாலும்
எனக்கு அவைகள்
ஒன்று தான்
சோதனைகளில்
விழவிடாதேயும்
தீமையிலிருந்து
காத்துக் கொள்ளும்
என்று தானே
ஜெபிக்கக் கற்றுத் தந்திருக்கிறீர்?
பதில் தராத ஜெபத்தையா
எங்களுக்குக் கற்றுத் தருவீர்?
ஆர்வத்தாலும்
ஆர்வக்கோளாறாலும்
சோதனைக்குள்
மாட்டிக் கொள்ளாமல்
காத்துக் கொள்ளும்
ஆர்வம் இல்லாவிட்டாலும்
சாத்தானின் கண்ணியில்
மாட்டும் அப்பாவியாக
நான் மாறாமல் காத்துக் கொள்ளும்
நன்றி ஆண்டவரே
இந்த லெந்துவில்
தினமும் எனக்கு
விருந்து தான்
மணவாளன் நீர்
என்னுடன் இருப்பதால்
உபவாசம், பட்டினி
என் ஆத்துமாவில் இல்லை
தேவையில்லை
வெட்டிப் பேச்சுக்கு
வீணான தொலை பேசிக்கு
தேவையில்லா தொலைக் காட்சிக்கு
நேரத்தைக் கொல்லும் இணையத் தளத்துக்கு
குறுஞ்செய்திகளுக்கு
நெடுந்தூக்கத்துக்கு
குப்பைத் தீவனங்களுக்கு
உணர்ச்சி வச ஷாப்பிங்-களுக்கு
பட்டினியாக
உம் பிரசன்னத்தில்
நேரத்தை
வீணாக்க,
விருந்து கொண்டாட
பிறரையும் விருந்துக்கு
அழைக்க
என் இருதயத்துக்கு விருப்பமான
விலைமதிப்பில்லாதவைகளை
செலவளிக்கும்
ஒரு பார்ட்டியாக
இந்த லெந்து காலத்தை
எனக்குத் தாரும்
நொந்து போகும்
தவமாக அல்ல
கொண்டாடும் பண்டிகையாக
ஒட்டி இருக்கும் உறவாக
உம்முடன் இணைந்திருக்க
உம்மை அதிகம் அறிந்து கொள்ள
உம்மை அதிகம் அறிவிக்க
உம்மை அதிகம் பிரியப்படுத்த
உம் சித்தத்தையே அதிகமாகச் செய்ய
இந்த லெந்து ஒரு
வனாந்திர அனுபவமாக
மலையேறு ட்ரெக்கிங் ஆக
மன்னாவைப் பொறுக்கும்
நாட்களாக
மேகஸ்தம்பத்தையும்
அக்கினி ஸ்தம்பத்தையும்
பின் தொடரும்
எளிய, இனிய பயணமாக்க
கானானை நெருங்குவதில்
ஒரு வருடத்தை ர்வீணாக
முதலீடு செய்ததாக
கானானைப் பங்கிடுவதில்
அவசரம் காட்டி
கானானுக்குள்
தேவ ராஜ்யத்தை
நிறுவுவதில்
கூளாங்கற்களையும்
கூடார ஆணிகளையும்
அப்பங்கள் மீன்களையும்
நளத தைலங்களையும்
இரண்டு காசுகளையும்
ஒரு ஜோடிக் காட்டுப் புறாக்களையும்
பயற்றங்கூழ் கலயங்களையும்
ஆடு மேய்க்கும் கோல்களையும்
இரவல் எண்ணெய்க் குடங்களையும்
ஒரு தோசைக்கான மாவுகளையும்
சரீரத்தில் இருக்கும் முள்களையும்
எடுக்கப்படாத
எடுபடாத பாத்திரங்களையும்
நிரம்பி வழியும் பாத்திரங்களையும்
துதிக்கும் பாடல்களையும்
கேள்வி கேட்கும் சங்கீதங்களையும்
இழுத்துப் பாடும் பாமலைகளையும்
அரசியல் சூழ்ந்த ஆராதனைகளையும்
ஊழல் நிறைந்த திருச்சபைகளையும்
பலகீனங்கள் நிறைந்த சீஷத்துவத்தையும்
அவிசுவாசமுள்ள முயற்சிகளையும்
குறைகளுள்ள ஊழியங்களையும்
பிறரைப் பிரியப்படுத்தும் ப்ராஜக்ட்களையும்
எங்களைப் பிரியப்படுத்தும் வாய்ப்புக்களையும்
இருப்பதைக் கொண்டு
மனதார பயன்படுத்த ஆசைப்படுகிறோம்.
எடுத்து சுத்தப்படுத்தும்
எடுத்து ஆசீர்வதித்து பலுகச் செய்யும்
என் இருதயத்துக்கு ஏற்றவன் ஏற்றவள்
என்று எங்களைப் பார்த்து சொல்லும்
எங்கள் பெயரைச் சொல்லி
அழையும்
நீ என்னுடையவன்
என்னுடையவள்
என்று ஒரு முறை சொல்லிவிடும்
ஆண்டவரே அந்த ஒரு வார்த்தை போதும்
ஒரு கோடி சோதனைகளை முறியடிக்க
பல கோடி தீமைகளை மேற்கொள்ள
மனம் இரங்கும் தேவனே
ஒரு முறை
அந்த ஒரே ஒரு வார்த்தையை
சொல்லிவிடும்
என் மாம்சக் காதுகள் கேட்க
உம்மைக் காட்டிவிடும்
.....
என் மனக்கண்களில்
வேண்டாம்
என் கண்கள் காண் ஒரு முற
உம் முதுகையாவது
மோசேக்குக் காட்டியதைப் போல
காட்டிவிடும்
ஆண்டவனே தேவையில்லை என்று
இருக்கும் இந்த உலகத்தில்
கடன் திருவிழாக்கள் இருக்கின்றன
ப்ளாஸ்டிக் அட்டைகளில்
கூண்டுகளில் எலக்ட்ரானிக் உரசல்கள்
பணத்தைக் கொட்டுகின்றன
உயிரைப் பிடித்து வைப்பதைத் தவிர
எல்லாவற்றுக்கும் தடுப்பு மருந்துகளும்
மாற்று மருந்துகளும்
கூட்டுச் சிகிச்சைகளும் இருக்கின்றன
காப்பீட்டுடன் இணைந்த மருத்துவமனைகள்
உள்ளூரிலோ வெளிநாட்டிலோ
தனி விமானமோ, சிறப்பு விமானமோ
இருக்கின்றது
ஃபேஸ் புக் மூலம் பணம் திரட்டலாம்
உதவி திரட்டலாம்
அறிவில் ஆசிரியர்களை மிஞ்சும்
மாணவர்கள்
சாதனைகளில் குருக்களை
முந்தும் சீடர்கள்
தூரங்களோ நேரங்களோ
பொருட்டே இல்லை
நான்குவழிச் சாலைகள்
உள்நாட்டு விமான நிலையங்கள்
வீட்டுக்கு ஒரு கார்
தொலை பேசிக்கு கம்பிகள் தேவையில்லை
ஸ்கைப் இருந்தால்
உலகமே எங்கள் எதிரில்
திருப்திக்கு உத்தரவாதம்
கொடுத்து எக்சேஞ்ச் ஆஃபர்கள்
ஒன்றுக்கு இரண்டு இலவசம்
திருமணத்துக்கு முன் தகாத உறவு
திருமணத்துக்குப் பின் தாங்காத உறவு
தங்காத உறவு
காதலும், விவாகரத்தும்
வெளிநாட்டு கலாச்சாரமாக அல்ல
வெளிநாட்டுக்கு உதாரணமாக மாறிவிட்டன
இவைகள் எல்லாம் இருந்தும்
நீர் மனித உள்ளத்தில்
வைத்திருக்கும் ஒரு சின்ன
வெற்றிடத்தைக் கொண்டு
வெற்றி பெற்றுவிட்டீரே
நீர் தான் ஆண்டவர்
மனிதன் மனிதன் தான் என்று நிரூபித்துவிட்டீரே
இந்த லெந்து காலம்
அந்த சின்ன வெற்றிடத்தை
அண்ட சராசரங்களையும் படைத்துப்
பராமரிக்கும் உம்மால் நிறைந்து
உம் சிந்தனையால் நிறைந்து
போதும் நீரே
என்று சொல்லும்
உம் கிருபை போதும்
என்று பாடும்
ஒரு பார்ட்டியாக
இருக்கட்டும்
நான் உன் அடிமை என்றாலும்
உணர்ச்சிகள் இருக்கின்றன.
ஆசைகள் இருக்கின்றன.
மாமிசம் துடிக்கிறது.
சோதனைகளுக்குப் பஞ்சமில்லை.
நீர் ஏன் மற்ற எஜமான்கள் போல
உரிமை இல்லாத
அடிமையாக என்னை வைக்காமல்
உரிமைகள் கொடுத்து வைத்திருக்கிறீர்?
ஏன் என்னை உம் நண்பன் என்கிறீர்?
நண்பனுக்கு இருக்கும் சோதனைகளைத்
தெரிந்தும் ஏன் என்னை இன்னும் அடிமையாக்காமல்
விட்டு வைத்திருக்கிறீர்?
அடிமையாக இருப்பதுவே எனக்கு எளிதாக இருக்கும்
உரிமை என்பது உரிமையாக இல்லையே?
என் இஷ்ட்டப்படி செய்யவும் முடியவில்லை,
செய்துவிட்டு உமக்கு எதிராக துரோகம்
செய்ததாக மனது குற்ற உணர்ச்சியில் சாகிறது.
என்னை அடிமையாகவே வைத்துவிடுமேன்!
நீர் சொல்வதை மட்டும் அப்படியே இயந்திரம் போல
செய்துவிட்டு அமைதியாக, சமாதானமாக
எப்பொழுதும் சந்தோஷமாக இருந்துவிட்டுப் போகிறேனே!
ஏன் என் ஆசைப்படி, உரிமையின்படி, திறமைகளின்படி
என் வழியில் போய் முட்டி மோதி, உடைந்து
சிதைந்து, கடைசியில் உம்மிடம் வந்து மீண்டும்
நீர் சொல்வது என்ன என்று கேட்டு ...
வீணான காலத்துக்கும் கண்ணீருக்கும் கணக்குப் பார்த்தால்
ஏன் ஏன் என்று தானே கேள்வி வருகிறது?
திருப்பிப் பேசாத, எந்த ஆசையும் திட்டங்களும் இல்லாத
அடிமைகளைப் பார்ததால் எனக்கு பொறாமையாக இருக்கிறது.
என் சாதனைகளால் என்ன பலன்?
சோதனைகளில் படும் பாடுகள் தான் பலன்.
ஏன் என் திறமைகளை, ஆசைகளை, வாஞ்சைகளை
நான் திருப்திப்படுத்த வேண்டும்?
ஏன் இந்த திறமைகளை என்னில் வைத்தீர்?
ஏன் அத்துடன் சுதந்திரத்தையும் உரிமையையும் கொடுத்தீர்?
கொடுத்த திறமைகளை சரியாகப் பயன்படுத்த
ஒரு மென்பொருளையும் என் மூளையில் பொறுத்தி
என்னை ஒரு கணினியனாக வைத்திருக்கலாமே?
மனிதனாக, அதுவும் உம் சாயலில், விழுந்து எழுந்து
சோதனைகளில் விழுந்து, உம் சாயலை ஏன் நான்
என்னில் கறைப்படுத்திக் கொண்டு இருக்க வேண்டும்?
நீ சிலுவையில் சிந்திய இரத்தத்தை
நான் ஏன் ஒவ்வொரு முறையும்
வீணாக்க வேண்டும்?
ஏன் உம்மை சிலுவையில்
மீண்டும்
மீண்டும்
அறைய வேண்டும்?
பவுலைப் போல உம் கிருபை போதும்
என்று சொல்லும் பக்குவம்
எனக்கு வரவில்லை.
பலவீனத்தில் பெருமை பாராட்டுவதுவும்
துணிகரமோ என்று பயப்படுகிறேன்.
மாம்சம் பலவீனம் தான், ஆவியில் உயிர் இல்லை.
உயிர்ப்பியும் ஆண்டவரே.
அந்த பெத்தானியப் பெண்ணைப் போல
என் கண்ணீரால் உம் பாதங்களைக் கழுவ
என் வாழ்வின் சேமிப்பை வாசனைத் தைலமாக்கி
உம்மை அபிஷேகிக்க ஆசை.
அறை முழுவதும் அல்ல
உலகம் முழுவதும் பரவிய அந்த
நறுமணமாக என் வாழ்வின்
செயல்கள் அமைந்துவிட
ஆசை தான்.
ஆனால் எனக்குள் இருக்கும்
சாவின் துர்நாற்றம் மேற்கொள்கிறதே.
ஒவ்வொரு நாளும் செத்து
நாலு நாளாயிற்றே
நாறுமே என்று தான் நான் என்னைப் பற்றிச்
சொல்கிறேன்.
கல்லறையைத் திறக்க தயக்கம்
இருக்கிறது.
உம்மை விட்டு ஒளித்துக் கொள்ளத்
தான் தோன்றுகிறது.
நீர் உயிர்ப்பிப்பீர் என்பது தெரியும்.
ஆனால் அந்த உயிர்ப்பிப்பு
அடக்க ஆராதனைக்குப் பின்
பரம யோர்தான் ஆற்றைத் தாண்டியபின்
தான் என்று சொல்லிச் சொல்லியே
உமது உயிர்த்தெழுதலின் வல்லமையை
அறிக்கையிடாமல்,
தினசரி வாழ்வில்
அனுபவிக்காமல்
உள்ளேயே
நாறிக் கொண்டே
நான்கு நாளாக
நாறிக் கொண்டே இருக்கிறேன்
மூன்றாம் நாள் உயிர்த்தவரே
என்னை உயிர்ப்பியும்,
ஜீவ பலியாக
வைத்துக் கொள்ளும்.
எந்நாளுமே
உயிருடன்
உயிர்ப்பிக்கப்பட்டு
உயிருள்ள பலியாக
அந்த பலிபீடத்தில்
துடிக்கத் துடிக்க
துள்ளத் துடிக்க
என்னைக் கட்டிப் போடுமேன்.
துள்ளிக் கீழே விழுந்து ஓடிவிடவே
மாம்சம் அவசரப்படுகிறது.
மீண்டும் வரும் போது
ஆவியின் பலம் அதிகம் இருந்தாலும்
செய்த மீறுதல்களின் காயங்கள்
மாம்சத்திலும்
ஆவியிலும்
மாறாத வடுக்களாக
இருக்கின்றனவே?
எனது துணிச்சல் நீர் தந்த உம் சாயல் என்றால்
துணிகரம் அதில் ஒரு ஊனமாக இருக்கிறதா?
ஒவ்வொரு நொடியும்
ஒவ்வொரு செயலுக்கும்
உம்மிடம் அனுமதி கேட்டு
இருக்கும் வாழ்வு எனக்குப் பிடிக்கவில்லை தான்
ஆனால் என் வழியில் போய் அடிபட்டு
ஒப்பிட்டுப் பார்த்து...
.....
பயமாக இருக்கிறதே?
மோசே உம் வழிநடத்தலில் நடந்தாலும்
அந்த கற்பாறையிடம் பேசும் விஷயத்தில்
மட்டும் தன் கைக் குச்சியால் பேசிவிட்டான்
ஆறு லட்சம் மக்களை மேய்க்கும் அவன்
தன் சந்ததியை வளர்க்க விரும்பாமல்
இஸ்ரவேலருக்காக வாதாடிய
அவனுக்கே அந்த ஒரு கோபத்தின் நிமிடத்துக்கு
அத்தனை தண்டனையா?
கனவு கண்டு, மனசுக்கள் வளர்த்து வைத்த
அந்த கானான் கனவை கலைத்து விட்டீரே!
புரியவில்லை.
உம் நினைவுகள்
எங்கள் நினைவுகள் அல்ல
உம் வழிகள் எம் வழிகள் அல்ல
ஆனால் எங்களுக்கு அறிவு என்று ஒன்றைக் கொடுத்திருக்கிறீரே!
ஆடு மாடுகளைப் போல, பூனை நாய்களைப் போல
ஒரே வார்த்தையில்
மியாவ்
லொள்
கீ
கூ
மா
மே
என்று
பேசி,
விதிப்படி
வாழ்ந்துவிட்டுப் போயிருக்கலாமோ
என்று தோன்றுகிறது.
ஆனால் எனக்கு உம் சாயலைக் கொடுத்து
என்னை மீட்டெடுத்ததற்கு ஒரு அர்த்தம் உண்டு
விசுவாசிக்கிறேன்.
கண்டு விசுவாசிக்க ஆசிக்கிறேன்.
என் விசுவாசம் அற்பமானது தான்.
சில உணர்ச்சி பூர்வமான
சூழ்நிலைகளில் பேதுரு போல
கொந்தளிக்கும் கடலில் நடந்துவிடுகிறேன்
அது ஏன் சில நிமிடங்களில் முடிந்துவிட வேண்டும்?
நான் ஏன் காற்றையும் கடலையும் பார்க்கிறேன்?
கடல், காற்று, புயல், அலைகளில் அழிவை மட்டும்
பார்த்தவன் நான்,
அழகைப் பார்க்கும் விசுவாசம்
பார்க்காமல்,
இல்லாததை,
நடக்கப் போவதை
நம்பும் அளவுக்கு என் விசுவாசம் கடுகின் அளவிலும்
இல்லை,
கடுகின் வடிவத்திலும் இல்லை.
விசுவாசத்தைத் துவக்கி முடிக்கிறவரே
என்னில் துவக்கிய விசுவாசத்தை
கொஞ்சமாவது நான் காத்துக் கொள்ள
உம் முகத்தைப் பார்த்து அதை
முடிக்கும் வரை
என்னைக் காத்துக் கொள்ளும்.
நான் சாதிக்க விரும்பவில்லை
நீர் வைத்திருக்கும் திட்டத்தைத் தெரிந்து கொண்டு
அதை மட்டும் எளிமையாக
முழு மனதோடு
கடினமாக உழைத்து
நிறைவேற்ற ஆசைப்படுகிறேன்.
என்னை முழுதும் அறிந்தவர் நீர்,
பலம், பலகீனம், திறமை, தோல்வி
தாலந்து, அறிவு, அறிவீனம்
உம் மேல் எனக்குள்ள அன்பு
துணிகரமான முயற்சிகள்
உணர்ச்சியின் அடிப்படையில்
செய்துவிடும் தவறுகள்
அவசரத்தில்
நல்ல நோக்கத்தில்
கொடுத்துவிட்ட வாக்குகளுக்காக
மற்றவர்களுக்கு
அடிமைப்பட்டுக் கிடக்கும் பரிதாபம்
என் உள் நோக்கம் உமக்குத் தெரியும்
அத்ற்கேற்ற பலன் தாரும்
பகுத்தறிய புத்தியைத் தாரும்
சிறு குழந்தையைப் போல
எவற்றில் இருக்க வேண்டும் என்றும்
எதில் வளர்ந்தவர்களைப் போல
நடந்து கொள்ள வேண்டும் என்றும் கற்றுத் தாரும்.
சின்னப் பையனைப் போல என்னிடம் இருப்பதை
பேசாமல் உம் கையில் கொடுத்து விட்டு
கூட்டத்தோடு கூட்டமாக உட்காந்து
என் பங்கை சாப்பிட்டுவிட்டுப்
போகவே விரும்புகிறேன்.
அவ்வப்போது தன்னலம் தடுக்கிறது
கூட்டத்தைப் பார்த்து கணக்குப் போடுகிறது மனம்.
அடுத்த நேரத்தைப் பற்றி யோசிக்கிறது
இருதயம்.
நானே பலுகச் செய்ய
திட்டங்கள் தீட்டுகிறது
என் சுயம்
தினமும் என் உணவை அந்த சிறுவனைப் போல
உம் கையில் கொடுத்து பலுகச் செய்தால்
மக்கள் பசி இல்லாமல் இருப்பார்களே?
சில நாட்களில் அந்த சிறுவனைப் போல
பகிர்ந்து கொடுத்துவிடுகிறேன்
சில நாட்களில் சீடர்களைப் போல
கணக்குப் போடுகிறேன்
சில நாட்களில் அம்மாக்களைப் போல
எதிர்காலத்தைப்பற்றி கவலைப்பட்டு
பதுக்கி வைத்துவிடுகிறேன்.
சில நேரங்களில் நான் மட்டும் தான்
கொடுக்க வேண்டுமா? என்று பிறரைக்
குறை சொல்கிறேன்,
என்னைத் தியாகியாக
ஏமாந்தவனாகப் பார்த்து
விபரமாக நடந்து கொள்ள நினைக்கிறேன்.
நீர் வருத்தப்படுகிறீர் என்ற எண்ணம் எனக்கு இல்லை.
மன்னியும் கர்த்தாவே.
என்னை மாற்றும் கர்த்தாவே.
தினமும் செத்து நாலுநாளாகிவிட்ட
பிணத்தை உயிர்ப்பியும்
வருடக்கணக்கில்
வெயிலில் வெளுத்துப் போன
எலும்புகளை உயிரடையச் செய்யும்
உயிருள்ள பலியாக உம் பீடத்தில் வைத்துவிடும்
உயிர்த்த உம் வல்லமையால்
என்னை உமக்குச் சாகாமல்
ஏதேன் அனுபவம் திரும்ப நடக்காமல்
ஜீவ விருட்சத்தின் கனியை உம் கையால்
வாங்கிப் புசிக்க...
ஜீவ கிரீடத்தை உம் கரத்தால் சூடிக் கொள்ள
ஆவலாகக் காத்திருக்கிறேன்.
ஈசாக்கைப் போல திரும்பக் கொடுத்துவிடுவீர்
என்று என்னை நானே ஏமாற்றிக் கொண்டு
பலிபீடத்திலிருந்து குதித்து ஓடி
முட்செடியில் மாட்டிக் கொண்டிருக்கும்
ஆட்டுக் க்டாக்களைத்
தேடிக் கொண்டிருக்கிறேன்.
எப்தாவின் மகளைப் போல
என்னைப் பலி கொடுத்து
உம்மிடம் எடுத்துக் கொள்ளும்.
உம் மகனையே பலியாகக் கொடுத்த நீர்
பலியின் வலியை அறிந்தவர்
என்னைப் புரிந்து கொண்டீர் நன்றி
ஆனால் நீர் செய்யாத ஒன்றை
என்னைச் செய்யச் சொல்லாத
உத்தமர் நீர்
எனக்காகப் பரிந்து பேசும்
பிரதான ஆசாரியரும் நீரே
உதவும் ஆண்டவரே
என்னை நானே
விரும்பி
உமக்கு விருப்பமான
உயிர் பலியாக
என்னை பலிபீடத்தில்
படைக்க
அங்கேயே இருந்துவிட
உலகத்துக்குள் இறங்கிவிட
உலகத்தானாக இல்லாமல்
நடமாடும் பலியாக
உலகத்தில் என்னை வைத்துக் கொள்ள
என்னைப் படைக்கிறேன்
ஏற்றுக் கொள்ளும்.
உம் தவக்காலம்
நாற்பது நாட்கள் அல்ல
முப்பத்து மூன்றரை வருடங்கள்
முப்பது வருடங்கள்
வீட்டில்
நாற்பது நாட்கள் காட்டில்
மூன்றரை வருடங்கள் நாட்டில்
இந்த லெந்துக் காலத்தில்
என் தவம் துவங்கட்டும்
நாற்பது நாட்களும்
காட்டின் அனுபவம் தந்தாலும்
தொடர்ந்து வாழ்நாள் முழுவதும்
நாட்டுக்குள் வீட்டுக்குள்
அந்த அனுபவத்தை
தவத்தை எடுத்து வர
உதவும்.
நாற்பது நாட்கள் படைத்தவருடன்
உறவு
இரவு முழுவதும் பிரார்த்தனை
அதிகாலையில் இருள் விலகும்
முன்பாகவே பிதாவின் பிரசன்னத்தில்
துவங்கும் நாள்.
இதில் சோதனைக்கோ
அதைப் பற்றிய சிந்தனைக்கோ
இடமே இல்லையே.
ஆண்டவரே
விரும்பியும் விரும்பாமலும்
எங்களுக்குள்
காடு வளர்ந்துவிட்டது
காட்டுமிராண்டி உள்ளே வளர்ந்துவிட்டான்
விளம்பரங்கள்
இச்சையைத் தூண்டும்
பாடல்கள்
காட்சிகள்
பேச்சுக்கள்
காமெடி நேரங்கள்
சிந்தனைகள்
இவற்றின் நடுவில்
ஒரு நாற்பது நாட்கள்
துவக்கி
ஒரு வாழ்நாள் வரை
தொடரும்
தவத்தை
உம்மோடு
மேற்கொள்ளப் போகிறேன்.
தேவதூதர்களின் உதவி வேண்டாம்
சாத்தானின் தாக்குதலில் மட்டும்
எதிர்க்கும் தைரியம் தாரும்
அவனது தாக்குதல்கள்
பயங்கரமாக இல்லை
இனிமையாக இருக்கின்றன
வேத வார்த்தைகளில் இல்லை
அவற்றை நாங்கள் மற்ந்துவிட்டோமே
அவனுக்குத் தெரியும் அளவு கூட
வேதம் எங்களுக்குத் தெரியவில்லை
அவனது தாக்குதல்கள்
தத்துவங்களால் தான்
திரைப்பாடல்கள்
கதைகள்
காமெடி
பிரபலங்களின் பேட்டிகள்
டாக் ஷோக்கள்
சீரியல்கள்
தினசரிச் செய்திகள்
கவர்ச்சியான குட்டி விளம்பரங்கள்
தள்ளுபடிகள்
ஆஃபர்கள்
மூலம்
தத்துவம்
காதுக்கு இனிமையாக
இச்சையைத் தூண்டுவதாக
கண்ணுக்குக் குளிர்ச்சியாக
இந்த காங்க்ரீட்
வனாந்தரத்தில்
எங்களுக்கு
கல்லுகளை அப்பங்களாக்க
அல்ல
ஹாலோ ப்ளாக்குகளை
சாப்பாடாக்கும் சோதனைகள்
கோபுர உச்சியில் அல்ல
ஃபேஸ் புக்குகளின் லைக்குகளில்
எங்களை நாங்களே கதாநாயகர்களாக்கும்
பதினைந்து செகண்ட் பிரபலமாக்கும்
சோதனைகள்
சாத்தானை ஆராதிக்கும்
சோதனை அல்ல
எங்களை நாங்களே
ஆராதிக்கும்
சோதனைகளே
இருக்கின்றன.
வார்த்தையால் அல்ல
வாழ்க்கையால் அவனைத்
துரத்தும் பலத்தைத் தாரும்
தவத்தால் பலம் பெற
உம் வாசத்தால்
துணை பெற
உம் வாசத்தால்
வாசனை பெற
உம் போஷிப்பால்
திருப்தி பெற
தினம் தினம்
உம் மேல் பசி தாகம் பெருக
உலகத்துக்கு பட்டினி கிடக்க
உம்மில் நான் விருந்தைப் புசிக்க
இந்த லெந்துக் காலம் எனக்கு
ஒரு விருந்தாகட்டும்
ஒரு மறுபிறப்பாக
புத்துணர்ச்சி முகாமாக மாறட்டும்
என் வீட்டிலே
நாட்டிலே
வேலையிலே
எனக்கொரு வனாந்தரத்தை
உருவாக்கித் தாரும்
பரிசுத்த ஆவியானவரே
அந்த வனாந்தரத்துக்குள்
என்னைப் போக ஏவி விடும்
சாத்தானுக்கு அனுமதி
கொடுத்தாலும்
நீர் என்னை பாதுகாத்தாலும்
எனக்கு அவைகள்
ஒன்று தான்
சோதனைகளில்
விழவிடாதேயும்
தீமையிலிருந்து
காத்துக் கொள்ளும்
என்று தானே
ஜெபிக்கக் கற்றுத் தந்திருக்கிறீர்?
பதில் தராத ஜெபத்தையா
எங்களுக்குக் கற்றுத் தருவீர்?
ஆர்வத்தாலும்
ஆர்வக்கோளாறாலும்
சோதனைக்குள்
மாட்டிக் கொள்ளாமல்
காத்துக் கொள்ளும்
ஆர்வம் இல்லாவிட்டாலும்
சாத்தானின் கண்ணியில்
மாட்டும் அப்பாவியாக
நான் மாறாமல் காத்துக் கொள்ளும்
நன்றி ஆண்டவரே
இந்த லெந்துவில்
தினமும் எனக்கு
விருந்து தான்
மணவாளன் நீர்
என்னுடன் இருப்பதால்
உபவாசம், பட்டினி
என் ஆத்துமாவில் இல்லை
தேவையில்லை
வெட்டிப் பேச்சுக்கு
வீணான தொலை பேசிக்கு
தேவையில்லா தொலைக் காட்சிக்கு
நேரத்தைக் கொல்லும் இணையத் தளத்துக்கு
குறுஞ்செய்திகளுக்கு
நெடுந்தூக்கத்துக்கு
குப்பைத் தீவனங்களுக்கு
உணர்ச்சி வச ஷாப்பிங்-களுக்கு
பட்டினியாக
உம் பிரசன்னத்தில்
நேரத்தை
வீணாக்க,
விருந்து கொண்டாட
பிறரையும் விருந்துக்கு
அழைக்க
என் இருதயத்துக்கு விருப்பமான
விலைமதிப்பில்லாதவைகளை
செலவளிக்கும்
ஒரு பார்ட்டியாக
இந்த லெந்து காலத்தை
எனக்குத் தாரும்
நொந்து போகும்
தவமாக அல்ல
கொண்டாடும் பண்டிகையாக
ஒட்டி இருக்கும் உறவாக
உம்முடன் இணைந்திருக்க
உம்மை அதிகம் அறிந்து கொள்ள
உம்மை அதிகம் அறிவிக்க
உம்மை அதிகம் பிரியப்படுத்த
உம் சித்தத்தையே அதிகமாகச் செய்ய
இந்த லெந்து ஒரு
வனாந்திர அனுபவமாக
மலையேறு ட்ரெக்கிங் ஆக
மன்னாவைப் பொறுக்கும்
நாட்களாக
மேகஸ்தம்பத்தையும்
அக்கினி ஸ்தம்பத்தையும்
பின் தொடரும்
எளிய, இனிய பயணமாக்க
கானானை நெருங்குவதில்
ஒரு வருடத்தை ர்வீணாக
முதலீடு செய்ததாக
கானானைப் பங்கிடுவதில்
அவசரம் காட்டி
கானானுக்குள்
தேவ ராஜ்யத்தை
நிறுவுவதில்
கூளாங்கற்களையும்
கூடார ஆணிகளையும்
அப்பங்கள் மீன்களையும்
நளத தைலங்களையும்
இரண்டு காசுகளையும்
ஒரு ஜோடிக் காட்டுப் புறாக்களையும்
பயற்றங்கூழ் கலயங்களையும்
ஆடு மேய்க்கும் கோல்களையும்
இரவல் எண்ணெய்க் குடங்களையும்
ஒரு தோசைக்கான மாவுகளையும்
சரீரத்தில் இருக்கும் முள்களையும்
எடுக்கப்படாத
எடுபடாத பாத்திரங்களையும்
நிரம்பி வழியும் பாத்திரங்களையும்
துதிக்கும் பாடல்களையும்
கேள்வி கேட்கும் சங்கீதங்களையும்
இழுத்துப் பாடும் பாமலைகளையும்
அரசியல் சூழ்ந்த ஆராதனைகளையும்
ஊழல் நிறைந்த திருச்சபைகளையும்
பலகீனங்கள் நிறைந்த சீஷத்துவத்தையும்
அவிசுவாசமுள்ள முயற்சிகளையும்
குறைகளுள்ள ஊழியங்களையும்
பிறரைப் பிரியப்படுத்தும் ப்ராஜக்ட்களையும்
எங்களைப் பிரியப்படுத்தும் வாய்ப்புக்களையும்
இருப்பதைக் கொண்டு
மனதார பயன்படுத்த ஆசைப்படுகிறோம்.
எடுத்து சுத்தப்படுத்தும்
எடுத்து ஆசீர்வதித்து பலுகச் செய்யும்
என் இருதயத்துக்கு ஏற்றவன் ஏற்றவள்
என்று எங்களைப் பார்த்து சொல்லும்
எங்கள் பெயரைச் சொல்லி
அழையும்
நீ என்னுடையவன்
என்னுடையவள்
என்று ஒரு முறை சொல்லிவிடும்
ஆண்டவரே அந்த ஒரு வார்த்தை போதும்
ஒரு கோடி சோதனைகளை முறியடிக்க
பல கோடி தீமைகளை மேற்கொள்ள
மனம் இரங்கும் தேவனே
ஒரு முறை
அந்த ஒரே ஒரு வார்த்தையை
சொல்லிவிடும்
என் மாம்சக் காதுகள் கேட்க
உம்மைக் காட்டிவிடும்
.....
என் மனக்கண்களில்
வேண்டாம்
என் கண்கள் காண் ஒரு முற
உம் முதுகையாவது
மோசேக்குக் காட்டியதைப் போல
காட்டிவிடும்
ஆண்டவனே தேவையில்லை என்று
இருக்கும் இந்த உலகத்தில்
கடன் திருவிழாக்கள் இருக்கின்றன
ப்ளாஸ்டிக் அட்டைகளில்
கூண்டுகளில் எலக்ட்ரானிக் உரசல்கள்
பணத்தைக் கொட்டுகின்றன
உயிரைப் பிடித்து வைப்பதைத் தவிர
எல்லாவற்றுக்கும் தடுப்பு மருந்துகளும்
மாற்று மருந்துகளும்
கூட்டுச் சிகிச்சைகளும் இருக்கின்றன
காப்பீட்டுடன் இணைந்த மருத்துவமனைகள்
உள்ளூரிலோ வெளிநாட்டிலோ
தனி விமானமோ, சிறப்பு விமானமோ
இருக்கின்றது
ஃபேஸ் புக் மூலம் பணம் திரட்டலாம்
உதவி திரட்டலாம்
அறிவில் ஆசிரியர்களை மிஞ்சும்
மாணவர்கள்
சாதனைகளில் குருக்களை
முந்தும் சீடர்கள்
தூரங்களோ நேரங்களோ
பொருட்டே இல்லை
நான்குவழிச் சாலைகள்
உள்நாட்டு விமான நிலையங்கள்
வீட்டுக்கு ஒரு கார்
தொலை பேசிக்கு கம்பிகள் தேவையில்லை
ஸ்கைப் இருந்தால்
உலகமே எங்கள் எதிரில்
திருப்திக்கு உத்தரவாதம்
கொடுத்து எக்சேஞ்ச் ஆஃபர்கள்
ஒன்றுக்கு இரண்டு இலவசம்
திருமணத்துக்கு முன் தகாத உறவு
திருமணத்துக்குப் பின் தாங்காத உறவு
தங்காத உறவு
காதலும், விவாகரத்தும்
வெளிநாட்டு கலாச்சாரமாக அல்ல
வெளிநாட்டுக்கு உதாரணமாக மாறிவிட்டன
இவைகள் எல்லாம் இருந்தும்
நீர் மனித உள்ளத்தில்
வைத்திருக்கும் ஒரு சின்ன
வெற்றிடத்தைக் கொண்டு
வெற்றி பெற்றுவிட்டீரே
நீர் தான் ஆண்டவர்
மனிதன் மனிதன் தான் என்று நிரூபித்துவிட்டீரே
இந்த லெந்து காலம்
அந்த சின்ன வெற்றிடத்தை
அண்ட சராசரங்களையும் படைத்துப்
பராமரிக்கும் உம்மால் நிறைந்து
உம் சிந்தனையால் நிறைந்து
போதும் நீரே
என்று சொல்லும்
உம் கிருபை போதும்
என்று பாடும்
ஒரு பார்ட்டியாக
இருக்கட்டும்
2 comments:
Soul - searching lines...
Soul - searching lines....Goes deep inside oneself and makes one to analyse oneself...
Post a Comment