மிஸ்ட்டர் சன்டே
“தேவனுடைய வீடு அப்படின்னு சர்ச்சச் சொல்லுறாங்களே, ஆனா இங்கே ஒரே ஒரு ஹால் மட்டும் தான் இருக்குது. மத்த ரூம்கள எல்லாம் காணும்.”
“நீ தான் உக்காந்துட்டே தூங்கறவனாச்சே, அதுக்கு இடம் கிடைச்சாத்தான் போதுமே? பெட் ரூம் ஒண்ணு வேணுமா?”
“இத்தன பேரு தேவனுடைய ஆலயத்துல ஒண்ணாத் தூங்குனா... ஆண்ட்ரூ அண்ணாச்சி மாதிரி ரெண்டு ஆட்கள் இருந்தாலேயே ஜெனரேட்டர் ரூம் மாதிரி தான் இருக்கும்.”
“சரி, நீ தானே ஆரம்பிச்சே. கொஞ்சம் யோசித்துப் பாத்து, மத்த ரூம்களப் பத்தி சொல்லு பாக்கலாம்.”
“என்னோட திறமைய மதிச்சு கேக்கறீங்க. கண்டிப்பா சொல்லுறேன். இங்கே டைனிங் டேபிள் ஆல்ட்டர்ல இருக்குது. சில சர்ச்கள்ல பொஃபே மாதிரி, சில இடங்கள்ல டைனிங் கிராதி இருக்கும். ஆனா டைனிங் தான் மினி ஸ்நாக் மாதிரி. அதப் பத்தி நான் மதிப்பு இல்லாம பேசல.... உவமை. அது தான் நம்மோட ஆன்மீக விருந்துக்கு ஆதாரம்.”
“எல்லா சன்டேயும் நீ ஆன்மீகப் பசி தீர்ந்து தான் போறியா?”
“அத ஏன் கேக்கறீங்க. ஃபீஸ்ட்டிங்ல இருந்து, ஃபாஸ்ட் ஃபுட், ஜங்க் ஃபுட், ஃபாஸ்ட்டிங் வரை எல்லாமே இங்கே கிடைக்குது”
“சர்ச்-ல ஃபாஸ்ட்டிங்-னா என்ன, அந்தப் பசியில வீட்டுக்குப் போய், நீயே பைபிளத் திறந்து மேய்ஞ்சுற வேண்டியது தானே?”
“இந்த மாதிரி நான் இன்னும் யோசிச்சுப் பாத்ததே இல்லியே? இங்கே அப்பம் கிடைக்காட்டி.... நீங்களே உங்களுக்கு மன்னாவப் பொறுக்கிக்கோங்கன்னு. கடவுளே சொன்ன மாதிரி இருக்குது.”
“நீ என்னவோ எல்லா நேரமும் கோயில்லயே குடியிருந்தாத்தான் ஆன்மீகத்துல பசி நீங்கும்னு சொல்ற மாதிரி இருக்குது?”
“நாம எல்லாம் ராஜரீக ஆசாரியக் கூட்டம் இல்லியா? தேவாலயத்த நம்ம கூடவே எடுத்துட்டுப் போவோம்ல?.”
“ஆமா, அப்படியே தேவாலயத்துக்கும் உங்க டாய்லட்டையும் எடுத்துட்டுப் போவீங்கல்ல?”
“என்னங்க எப்படிப்பட்ட டாப்பிக் பேசறப்போ இப்படி கருமாந்தரம் பிடிச்ச மாதிரி பேசறீங்க?.”
“டைனிங் டேபிள் மட்டும் இருக்கற, டாய்லெட்டே இல்லாத உலகத்த உன்னால கற்பனை செய்து பாக்க முடியுமா?”
“அதுக்கும் நாம பேசிட்டு இருக்கற தேவனுடைய வீடு உவமைக்கும் என்ன சம்பந்தம்?”
“பாவ அறிக்கை செய்யறது, பழையவைகளை ஒழிக்கறது எல்லாம் டாய்லட் போற மாதிரி தானே?”
”சரி தான், சுத்தமா, பசியோட வர்றப்ப தான் நல்லா சாப்பிட முடியும். ஆனா எனக்கு என்னவோ தேவனுடைய ஆலயத்தின் வாசற்படியில காத்து இருக்கறது தான் ரொம்பப் பிடிச்சிருக்கு.”
“பின்ன ஏன் உள்ளே வந்துட்டே? தூங்கறதுக்கா?”
“ம் ஹூம், வீட்டம்மா விட மாட்டாப்புல. பிள்ளைங்க சின்னதுங்களா இருக்கறப்பவும் வாசற்படியிலயும், வெளிப்பிரகாரங்களிலேயும், சுத்திக்கிட்டே இருந்தேன்.”
“பரவாயில்ல பிள்ளைங்களோட சேந்து நீயும் வளந்திட்ட போல...?”
“நீங்க எப்பவுமே ஜோக்காத்தான் பேசுவீங்க. இப்போதைக்கு முடிச்சுக்கலாம். காணிக்கை நேரம் வந்திருச்சு.”

No comments:
Post a Comment