Monday, November 15, 2010

மைக் டெஸ்ட்டிங் 3

மைக் டெஸ்ட்டிங் 3*************
இஸ்ரவேல் தேசத்துக்காக ஜெபிக்க என்றே ஒரு டிவி நிகழ்ச்சி. சாப்பிட உட்கார்ந்த போது அம்மா பார்த்த அந்த நிகழ்ச்சியைக் கேட்க, பார்க்க வாய்ப்புக் கிடைத்தது.

இஸ்ரவேலருக்கு எதிராக உருவாக்கப்படும் அணு ஆயுதங்கள் வாய்க்காமல் போக, அணு ஆயுதம் செய்யும் அறிவு இஸ்ரேல் நாட்டின் எதிரிகளுக்கு இல்லாமல் போக, அவர்களது முயற்சிகள் பலனளிக்காமல் போக சில பெண்கள் அசைந்து, பாடி, ஜெபித்தார்கள். அநியாயமாக யூதர்கள் வாழ்ந்த போதும், கடவுளை விட்டு விலகிச் சென்ற போதும் ஆண்டவர் அவர்களைக் குட்டி, அடித்து, அழித்துத் தான் திருந்தச் செய்திருக்கிறார். ஆனால் கிறிஸ்தவ விசுவாசிகளுக்கும், யூதர்களுக்கும் வித்தியாசம் தெரியாத இப்படிப்பட்ட மக்களை என்ன செய்வது என்று தெரியவில்லை. வெள்ளைக்காரர்கள் எல்லாருமே கிறிஸ்தவர்கள் என்ற நம்பிக்கையைப் போலவே, இஸ்ரவேலர் அனைவருமே விசுவாசிகள் என்று நினைப்பார்களோ என்னவோ? யூதர்கள் கடவுள் தேர்ந்தெடுத்த ஜாதி என்றாலும் கடவுள் நீதியுள்ளவர். யூதர்களால் அநியாயமாகக் கொல்லப்படும் பாலஸ்தீனிய அப்பாவிகள் கடவுளின் கணக்கில் இருப்பார்கள் என்பது உண்மை. மேலும் இயேசுவின் இரண்டாம் வருகையின் போது யூதர்கள் பெரும் பாடு படுவார்கள் என்று இயேசுவே சொல்லியிருக்கின்றார். அந்தப் பாடுகளின் நடுவே தான் அவர்கள் விசுவாசத்துக்குள் வரப் போகிறார்கள். இதைப் பற்றி அறியாமல், இஸ்ரவேல் எப்படியும் ஜெயிக்க வேண்டும், இஸ்ரவேலரின் எதிரிகளின் ஆயுதங்கள் வேலை செய்யாமல் போக வேண்டும் என்று ஜெபிப்பது எந்த வகையான ஜெபம் என்று தெரியவில்லை.

1 comment:

Unknown said...

Hmm... tat's a nice thought ;)
but am quite skeptic bout your new plans! ;)