மைக் டெஸ்ட்டிங் 1*******************
வெட்டு ஒன்று துண்டு இரண்டு என்பது அந்தக் காலம். இந்தக் காலத்தில் எல்லாவுமே சமரசமாக, சகித்துக் கொள்ளப்படுவதாகப் போகின்றது. தென்காசி வழக்கு என்று ஒன்று அந்தக் காலத்தில் இருந்திருக்கிறது. இழுபறியில் இருக்கும் ஒரு வழக்கில், இரண்டு கட்சிக்காரர்களும் சமமாக நஷ்ட்டத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுவே தென்காசி வழக்கு ஆகும்.
எந்த ஒரு விஷயத்திலும் விளிம்பு நிலைக்கு அல்லது உச்ச நிலைக்குச் செல்வது இந்தக் காலத்தில் சதாரணமாக நடக்கின்றது. ”வச்சா குடுமி, அடிச்சா மொட்டை” என்று இருக்கும் பலர் நடுவே, வெட்டு ரெண்டு துண்டு ஒண்ணு என்னும் நிலை தான் சரியாக இருக்கும் என்று நினைக்கிறேன். ஒரு உதாரணம் சொல்கிறேன். இயேசுவிடம் வந்தால் நீங்கள் செழிப்பாக வாழலாம். அவர் சுமந்து தீர்த்த சிலுவையை, பாடுகளை நீங்கள் சுமக்கத் தேவையில்லை என்று செவித்தினவு உள்ளவர்களின் காதுகளைக் குடைந்துவிடும் ஊழியர்கள் ஒரு உச்சம் என்றால், இயேசுவின் சீஷர்கள் பாத்ரூம் செருப்புடன், பிச்சைக்காரர்கள் மாதிரி தான் திரிய வேண்டும் என்னும் பரிசேயக் கூட்டம் ஒரு புறம். சிலுவையைத் தேடிப் போய் சுமப்பதுவும், சுமத்தப்பட்ட சிலுவையைத் தவிர்ப்பதுவும் இயேசுவின் சீஷனுக்கு தகுதியில்லாதவைகள். இப்போது புரிகிறதா? எந்த ஒரு தலைப்பில் நீங்கள் பேசினாலும் சிந்தித்தாலும் இப்படிப்பட்ட இரண்டு விளிம்புகளையும் வெட்டினால், நடுவில் நடுநிலையான ஒரு துண்டு கிடைக்கும். மீனின் தலை, வாலை வெட்டினால் நல்ல துண்டு கிடைக்கும். உங்கள் சிந்தனைக்கு சில துண்டுகளை நான் சிபாரிசு செய்கிறேன், உங்கள் கருத்துக்களை எழுதினால் அடுத்த வலைப்பூச் சரத்த்தில் அவற்றையும் நான் கோர்த்துக் கொள்வேன்.
* காதலித்த வேதாகம நாயக நாயகிகள் (யாக்கோபு-ராகேல் / சிம்சோன்-பெலிஸ்தியப் பெண் / தாவீது-மீகாள்/ அபிகாயில் / சாலமோன் - ?) * பெற்றோர் சொன்னவர்களுக்குக் கழுத்தை நீட்டியவர்கள் (ஈசாக்கு-ரெபேக்கா ... )
* கிருபை (பவுல்) * கிரியை (பரிசேயர்கள்)
No comments:
Post a Comment