Sunday, September 7, 2008

7 September 2008

Sweet Temptation

Ex 20:14 “You shall not commit adultery.”

Not only has an affair causes us to violate this commandment. Lust in our minds can lead us to adultery. Media is full of temptations and lust and themes of adultery. In this media saturated world fear of God and taking serious the commandments of God only can save us from these sweet temptations.

சின்ன சோதனை சின்ன வீடு

வேறு நபருடன் உறவு வைப்பது மட்டுமல்ல, இச்சையே இந்த கட்டளையை மீறச் செய்துவிடும். மனதிலிருக்கும் இச்சை உடலில் விபச்சாரத்தைக் கொண்டுவரலாம். நம்மைச் சுற்றியிருக்கும் ஊடகங்கள் விபச்சாரம், இச்சை, சோதனைகள் நிறைந்த நிகழ்ச்சிகளால் நிறைந்திருக்கிறது. ஊடக வெள்ளத்தில் தத்தளிக்கும் நாம் கடவுள் பயம் மற்றும் அவரது கட்டளைகளுக்கு உண்மையாகக் கீழ்ப்படிவதன் மூலமே இந்த இனிய சோதனைகளிலிருந்து தப்பிக்க முடியும்.

6 September 2008

Anger the murder

Ex 20:13 “You shall not murder.”

Anger, character assassination, killing the souls of people with our words and deeds all are considered as murder. Killing someone in our thought also deserves the punishment. Because all our actions are being enacted in our minds before they are being executed.

கோபம் கொலை

கோபம், ஒருவரது நல்ல பெயரைக் கொல்லுதல், மக்களின் ஆன்மாக்களை வார்த்தைகளாலும் செயல்களாலும் கொல்லுதல் அனைத்துமே கொலை என்று எடுத்துக் கொள்ளப்படலாம். நம் மனதில் ஒரு நபரைக் கொல்வதற்கும் தண்டனை உண்டு. கடவுள் நம் உள்ளங்களைப் பார்க்கிறார். நாம் ஒரு செயலைச் செய்வதற்கு முன் மனதில் செய்து பார்க்கிறோமே. கோபம் தானே வாய்ப்பாலும் சூழ்நிலையாலும் கொலையாகிறது.

5 September 2008

For Long Life

Ex 20:12 “Honor your father and your mother, so that you may live long in the land the LORD your God is giving you.”

Those who honor parents will live long. The blessings of our parents give us long life. They may not curse us if we do not honor them, but God gives this commandment. So let us honor them for the Lord, even though we think that they do not deserve honor.

நீண்ட ஆயுசுக்கு

பெற்றோரைக் கனம் செய்தால் நீண்ட நாட்கள் வாழமுடியும் என்று கடவுள் சொல்கிறார். நாம் கனம் செய்யாவிட்டால் அவர்கள் நம்மை சபிக்க மாட்டார்கள் என்றாலும் கடவுள் நமக்கு கட்டளை தந்திருக்கிறார். எனவே நம் பெற்றோர் நம் கனத்துக்குத் தகுதியில்லாதவர்கள் என்று நாம் நினைத்தால் கூட அவர்களுக்கு கொடுக்க வேண்டிய மரியாதையை அவர்களுக்குக் கொடுப்போம். இது ஆண்டவன் கட்டளை, கடமை அல்ல.

4 September 2008

Holy Rest


Ex 20:8-11 “Remember the Sabbath day by keeping it holy. Six days you shall labor and do all your work, but the seventh day is a Sabbath to the LORD your God. On it you shall not do any work, neither you, nor your son or daughter, nor your manservant or maidservant, nor your animals, nor the alien within your gates. For in six days the LORD made the heavens and the earth, the sea, and all that is in them, but he rested on the seventh day. Therefore the LORD blessed the Sabbath day and made it holy.”

Rest becomes holiness when we work and rest according to the will of God. Man worships his job in this materialistic world. But God wants us to worship Him without doing any job on the Sabbath day.

பரிசுத்த ஓய்வு

நாம் கடவுளின் சித்தத்தின்படி வேலை செய்து ஓய்வு எடுக்கும் போது ஓய்வும் பரிசுத்தமானதாகிறது. இந்த பொருளாசை உலகத்தில் மனிதன் வேலையை வணங்குகிறான். ஆனால் கடவுளோ ஓய்வு நாளில் ஓய்ந்திருப்பதன் மூலம் தன்னை வணங்கச் சொல்கிறார்.

3 September 2008

Misuse

Ex 20:7 “You shall not misuse the name of the LORD your God, for the LORD will not hold anyone guiltless who misuses his name.”

Misbehaving Christians are misusing the name of the Lord.

வீண்

வீணான வாழ்க்கை நடத்தும் கிறிஸ்தவர்கள் கடவுளின் பெயரை வீணிலே வழங்குகிறார்கள்.

2 September 2008

Idols we worship

Ex 20:4-6 “You shall not make for yourself an idol in the form of anything in heaven above or on the earth beneath or in the waters below. You shall not bow down to them or worship them; for I, the LORD your God, am a jealous God, punishing the children for the sin of the fathers to the third and fourth generation of those who hate me, but showing love to a thousand generations of those who love me and keep my commandments.”

We are expected not to have any other gods/ idols like possessions, relationships or positions.

விக்கிரகம் எது?

நமது பதவி, பொருட்கள், உறவுகள் கூட வேறு தெய்வங்களாக/ விக்கிரகங்களாக மாறிவிடக் கூடும்.


1 September 2008

First Commandment

Ex 20:2-3 “I am the LORD your God, who brought you out of Egypt, out of the land of slavery. “You shall have no other gods before me.”

The Lord brought the Israelites from a locality and a situation. The promise of their own nation and liberation. So the Israelites were expected not to have any other gods. Most of us are blessed with freedom. God is enough. This attitude of contentment should be ours. It is a command also.

முதலாம் கட்டளை

அடிமைத் தனத்திலிருந்தும் எகிப்து நாட்டிலிருந்தும் இஸ்ரவேலரை விடுதலை செய்தார் கடவுள். அதற்குப் பதிலாக அவர் ஒரு கட்டளையைக் கொடுக்கிறார். வேறு தெய்வங்களை வைத்திருக்கக் கூடாது. அவர் மட்டும் போதும் என்பது ஒரு குணமாக இருக்க வேண்டும் என்பதை விட அது ஒரு கட்டளையாகக் கொடுக்கப்பட்டுள்ளது.

31 August 2008

I want to see God

Ex 19:21-22 “Go down and warn the people so they do not force their way through to see the LORD and many of them perish. Even the priests, who approach the LORD, must consecrate themselves, or the LORD will break out against them.”

People should not force their way to see God. That is dangerous. That is called presumption. But our God forced Himself to show Himself to us in the form of Jesus. If we force ourselves to ‘SEE’ God through visions, dreams, that may become a danger.

கடவுளைப் பார்க்க வேண்டும்

கடவுளைப் பார்க்க நாம் முண்டியடித்துக் கொண்டு போவது ஆபத்தாக முடியலாம். அதற்கு துணிகரம் என்று பெயர். ஆனால் நம் கடவுள் முண்டியடித்துக் கொண்டு ஒரு மனிதனாக அவதரித்து தம்மை நமக்குக் காட்டிவிட்டாரே! அவரைப் பற்றி பைபிளில் நாம் அறிந்து கொள்ளலாம். காட்சிகள், தரிசனம், என்று கடவுளைப் பார்க்க முண்டியடித்தால் ஆபத்தாக முடியலாம்.

30 August 2008

God on the Line

Ex 19:9-13 “I am going to come to you in a dense cloud, so that the people will hear me speaking with you and will always put their trust in you.” “Go to the people and consecrate them today and tomorrow. Have them wash their clothes and be ready by the third day, because on that day the LORD will come down on Mount Sinai in the sight of all the people. Put limits for the people around the mountain and tell them, ‘Be careful that you do not go up the mountain or touch the foot of it. Whoever touches the mountain shall surely be put to death. He shall surely be stoned or shot with arrows; not a hand is to be laid on him. Whether man or animal, he shall not be permitted to live.’ Only when the ram’s horn sounds a long blast may they go up to the mountain.”

When God speaks to His servants, and the followers know that, that helps the followers to put their trust in the Leader. If the leaders brags about God’s special revelation to him/her and that does not help the followers to put their trust on the Leader then something is wrong with the Leader. The Leader must be making the followers feel very small or the life style of the Leader doesn’t show the qualities of the one who is conversing with the Lord.

தொலைபேசியில் கடவுள்

கடவுள் தனது பணியாட்களுடன் பேசும் போது அதை அந்தப் பணியாளரைப் பின்பற்றுபவர்கள் அறியும் போது அவர்கள் அந்த தலைவரை நம்ப வேண்டும். கடவுள் தன்னுடன் பேசுவதாகப் பெருமையடிக்கும் தலைவரை மக்கள் நம்பவில்லை என்றால் காரணங்கள் என்னவாக இருக்கும்?
தலைவர் கடவுளுடன் பேசுவதால் அவர் ஏதோ பெரிய சாதனையாளர் போலவும் பின்பற்றுபவர்கள் மதிப்பில்லாதவர்கள் போலவும் நடந்து கொள்ளுதல்.
அல்லது கடவுளிடம் உரையாடும் ஒரு நபருக்கு இருக்க வேண்டிய குணங்கள் வாழ்க்கை முறை அந்த தலைவரிடம் இல்லாமல் இருப்பது.


29 August 2008

Eagle’s wings

Ex 19:4-6 ‘You yourselves have seen what I did to Egypt, and how I carried you on eagles’ wings and brought you to myself. Now if you obey me fully and keep my covenant, then out of all nations you will be my treasured possession. Although the whole earth is mine, you will be for me a kingdom of priests and a holy nation.’

Eagle carries the Eaglets on her wings but often times it drops them from the wings and terrorizes the little ones and then at the right moment carries them on her wings, because the small ones are precious to the mother. God wanted His own children Israelites to obey Him. The whole earth is God’s, But Israelites are Chosen people. This privilege is not positional, but a functional one, They were chosen to be a blessing to all the other nations. Priests are the intermediaries between God and other people. Israelites are the bridge between God and the nations. In his epistle Peter writes about us being a royal priesthood. We the Christians are a bridge between God and those do not know God in a personal way.

கழுகுச் சிறகு

கழுகு தன் குஞ்சுகளை இறக்கைகளில் சுமந்து செல்லும் போது குஞ்சுகளைக் கீழே தள்ளி அவைகள் பறப்பதற்குப் பயிற்சி கொடுக்கும். அவைகளால் முடியாத போது மீண்டும் ஏந்திக்கொள்ளும். ஏனென்றால் குஞ்சுகள் தாய்க்கு மிகவும் அருமையானவைகள். இஸ்ரவேலரும் கடவுளுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருந்தனர். இந்தப் பாக்கியம் ஒரு பதவி போல அல்ல ஒரு பொறுப்பாகவே இருந்தது. அவர்கள் ஒரு குருவாக கடவுளுக்கும் மக்களுக்கும் இடையில் பாலமாக இருக்கவே தேர்ந்தெடுக்கப்பட்டனர். நாமும் கூட அப்படிப்பட்ட ஆசாரியக் கூட்டம் என்று பேதுரு தனது கடித்தத்தில் குறிப்பிடுகிறார். கடவுளைத் தனிப்பட்ட முறையில் அறிந்திருக்காத மக்களையும் கடவுளையும் இணைக்கும் பாக்கியமான பணி நம்முடையது.


28 August 2008

Report

Ex 17:14. “Write this on a scroll as something to be remembered and make sure that Joshua hears it, because I will completely blot out the memory of Amalek from under heaven.”

The Amalakites will be remembered only in the Bible. The Lord wanted to record that on a scroll, wanted to make sure that Joshua who fought the fight with Amalakites hear that.

There are two possible reasons:
1. The non-existence of Amalakites should not hinder the faith.(there won’t be any trace of Amalakites; so the future generations may not believe in that victory)
2. Joshua should know that God fought the fight and Moses and two companions were also struggled on the top of the mountain.
3. The victory over the Amalakites was a temporary one and one day the Lord would annihilate them. (During King Saul’s time)

When we fight and win we must remember that we like Joshua should listen to the truth from God’s angle.

1. The future generations won’t have proofs if we do not pass them on.
2. No victory is solo victory.
3. All our victories are temporary.

ரிப்போர்ட்

அமலேக்கியர் என்ற இனத்தைப் பற்றி பைபிளில் மட்டுமே படிக்க வேண்டியிருக்கும் என்ற நிலையில் யோசுவா தலைமையில் இஸ்ரவேலர் பெற்ற வெற்றியை கடவுள் எழுதி வைக்கச் சொன்னார். யோசுவா அதைக் கண்டிப்பாகக் கேட்கவேண்டும் என்றும் வற்புறுத்தினார். காரணங்கள் என்னவாக இருக்கும்?

1. எதிர் காலத்தில் அமலேக்கியர் என்ற இனத்தின் சுவடு கூட இல்லாமல் போவதால். அமலேக்கியர் மேல் கிடைத்த வெற்றியையும் எதிர்கால சந்ததியினர் நம்பாமல் போகலாம் எனவே எழுதி வைப்பது நல்லது.
2. யோசுவா போர்க்களத்தில் நின்று சண்டை போட்டாலும், மோசேயும் இன்னும் இருவரும் மலையின் மேல் கஷ்ட்டப்பட்டார்கள் என்பது யோசுவாவுக்குத் தெரிய வேண்டும். போரிட்டது கடவுள் தான், அதில் போரில் பங்கு பெறாத பிறருக்கும் பங்கு இருக்கிறது என்று தெரிந்தால் யோசுவாவுக்கு தலையில் கனம் ஏறாது.
3. அமலேக்கியர் மேல் அன்று கிடைத்த வெற்றி நிரந்தரமானது அல்ல. சவுல் ராஜாவின் காலத்தில் தான் கடவுள் அந்த இனத்தை முற்றிலுமாக சுவடே இல்லாமல் அழிக்கப் போகிறார்.

நாமும் போராடி வெற்றி பெறும் போது யோசுவாவைப் போல கடவுளின் கண்ணோட்டத்தில் உண்மையைப் பார்க்கப் பழகிக் கொள்ள வேண்டும்:
1. நாம் ஆதாரங்களைப் பத்திரப்படுத்தாவிட்டால்/ கடத்தாவிட்டால் வருங்கால சந்ததியினருக்கு எதுவுமே தெரியாது.
2. எந்த வெற்றியும் தனி மனித வெற்றியல்ல.
3. எல்லா வெற்றியுமே தற்காலிகமானது.

1 comment:

Nitecrawl3r said...

hi anna!! why no updates?? gettin real busy uh!! :)