Holy-Holiday
"I will rain down bread from heaven for you. The people are to go out each day and gather enough for that day. In this way I will test them and see whether they will follow my instructions. On the sixth day they are to prepare what they bring in, and that is to be twice as much as they gather on the other days."
"How long will you refuse to keep my commands and my instructions? [29] Bear in mind that the Lord has given you the Sabbath; that is why on the sixth day he gives you bread for two days. Everyone is to stay where he is on the seventh day; no one is to go out." Exodus 16:4-5; 28-29 (NIV)
God was concerned about the physical needs of His people(Food and Rest). He provided them food from heaven and commanded them to keep the Seventh day as a holiday.
Since today is a Sunday I am contemplating on how we the Christians as God’s people follow the Fourth Commandment. (God gave this commandment even before He gave the Ten Commandments on the stone tablets)
• Are we spending the day with the Lord of for the Lord? (many volunteers are busy doing ministry rather than praying or meditating)
• Are the ministries we do really make us pray and meditate?
• Are we spending time with our family on the Seventh day? (this is the only day the whole family stays together)
• What about the full time workers who are busy on Sundays? Do they have a full holiday on another week day?
• Are we maintaining a rhythm of rest and work, leisure and job, ministry and personal spiritual renewal?
Many a times the provision itself is a test from God.
ஹோலி-ஹாலி டே
நான் உங்களுக்கு வானத்திலிருந்து அப்பம் வருஷிக்கப் பண்ணுவேன். ஜனங்கள் போய், ஒவ்வொரு நாளுக்கு வேண்டியதை ஒவ்வொரு நாளிலும் சேர்த்துக் கொள்ள வேண்டும். அதினால் அவர்கள் என் நியாயப்பிரமாணத்தின்படி நடப்பார்களோ நடக்க மாட்டார்களோ என்று அவர்களைச் சோதிப்பேன். ஆறாம் நாளிலோ, அவர்கள் நாள் தோறும் சேர்க்கிறதைப் பார்க்கிலும் இரண்டத்தனையாய்ச் சேர்த்து, அதை ஆயத்தம் பண்ணி வைக்கக்கடவர்கள்... என் கட்டளைகளையும் என் பிரமாணங்களையும் கைக்கொள்ள எந்த மட்டும் மனதில்லாதிருப்பீர்கள்? பாருங்கள் கர்த்தர் உங்களுக்கு ஓய்வு நாளை அருளினபடியால், அவர் உங்களுக்கு ஆறாம் நாளில் இரண்டு நாளுக்கு வேண்டிய ஆகாரத்தைக் கொடுக்கிறார். ஏழாம் நாளில் உங்களில் ஒருவனும் தன் தன் ஸ்தானத்திலிருந்து புறப்படாமல், அவனவன் தன் தன் ஸ்தானத்திலே இருக்க வேண்டும். யாத்திராகமம் 16:4-5 ;28-29
கடவுள் தனது மக்களின் உணவு, ஓய்வு ஆகிய உடல் தேவைகளில் அக்கறை உள்ளவராக இருந்தார். வானத்திலிருந்து ஆகாரம் கொடுத்தவர் ஓய்வை கட்டளையாகக் கொடுத்தார். இன்று ஞாயிற்றுக்கிழமையாக இருப்பதால் நான்காம் கட்டளை பற்றி சில சிந்தனைகள்:
* நாம் இந்த நாளை கடவுளுடன் செலவிடுகிறோமா? கடவுளுக்காக செலவிடுகிறோமா? (பலர் பகுதி நேர ஊழியம் செய்வதால் ஞாயிற்றுக்கிழமைகளில் ஜெபிக்க வேத தியானம் செய்ய நேரமில்லாதபடி இருக்கிறார்கள்.)
* நமது ஊழியங்கள் நம்மை ஜெபிக்க தியானிக்க வைக்கின்றனவா?
* குடும்பத்துடன் ஏழாம் நாளை செலவிடுகிறோமா? (குடும்பம் முழுவதும் வீட்டில் இருக்கும் நாள் இது தானே?)
* ஓய்வு நாளில் அதிக வேலை செய்யும் முழுநேர ஊழியர்கள் இன்னொரு வாரநாளை முழு நாளும் ஓய்வு நாளாக ஒதுக்குகிறார்களா?
* வேலை - ஓய்வு; பணி - பொழுதுபோக்கு; ஊழியம் - தனிப்பட்ட ஆன்மீக வாழ்வு இவைகளுக்கு இடையே சமநிலை இருக்கிறதா?
கடவுள் நமக்குத் தரும் ஆசீர்வாதங்கள் நம்மை சோதிக்கும் அவரது கருவிகளாக இருக்கின்றன.
No comments:
Post a Comment